பல மணி நேரம் தொடர்ந்து அமர்வதால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றி இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். இன்று நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம்.
நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள்
நீண்ட நேரம் அமர்வதால் உடல் எடை கூடுதல், தொப்பை விழுதல் முதல் இருதயப் பிரச்சினைகள் வரை பல்வேறு உபாதைகள் உருவாகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வருவதால், மேற் குறிப்பிடப்பட்டுள்ள உபாதைகளின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்ந்து தொடர்ந்து அமருவதில் மாற்றங்களைச் செய்து வர சிறந்த உடல் நலத்தோடு வாழலாம்.
1) தாடாசனம்
தாடாசனம் உடலின் சமநிலையைப் பராமரிப்பதோடு, நிற்கும் மற்றும் அமரும் நிலையை (posture) சரி செய்கிறது.
தாடாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) உத்தானாசனம்
உத்தானாசனம் உடல் முழுவதையும் நீட்சியடையச் செய்கிறது. இவ்வாசனம் கழுத்து வலியைப் போக்கவும் தோள் இறுக்கத்தை சரி செய்யவும் உதவுகிறது.
உத்தானாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) திரிகோணாசனம்
திரிகோணாசனம் கால்களை நீட்சியடையச் செய்கிறது. கழுத்து மற்றும் முதுகுவலியைப் போக்க உதவுகிறது.
திரிகோணாசனம் பழகும் போது கையை கீழே வைக்க முடியாதவர்கள், யோகா ப்ளாக் வைத்து அதன் மீது கையை வைக்கலாம். யோகப்பயிற்சிக்கான தரமான உபகரணங்களை இணையதளங்களின் மூலமாக வாங்கலாம்.
திரிகோணாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) மாலாசனம்
இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இடுப்பையும் பலப்படுத்தும் அருமையான ஆசனம் மாலாசனம்.
மாலாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) ஆஞ்சநேயாசனம்
ஆஞ்சநேயாசனம் இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு இடுப்பில் உள்ள அதிக சதையைக் கரைக்கவும் உதவுகிறது.
ஆஞ்சநேயாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) வீரபத்திராசனம் 2
வீரபத்ராசனம் 2 தோள், இடுப்பு மற்றும் கால்களைப் பலப்படுத்துகிறது. உடலின் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.
வீரபத்ராசனம் 2-ன் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) மர்ஜரியாசனம்
மர்ஜரியாசனம் முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்தும் ஆசனமாகவும் இது அறியப்படுகிறது.
தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
மர்ஜரியாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) பிடிலாசனம்
மர்ஜரியாசனத்தோடு இணைத்து தொடராக பிடிலாசனம் செய்யப்படுவதால் சிறந்த பலன்களைப் பெறலாம். பிடிலாசனம் முதுகுத் தசைகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. மன அமைதியை ஏற்படுத்த உதவுகிறது.
தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
பொதுவாகவே நல்ல யோகா விரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது என்றாலும் மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் போன்ற ஆசனங்களைப் பயிலும் போது முட்டிகளை விரிப்பில் வைக்க வேண்டியிருப்பதால், தரமான யோகா விரிப்புகளைப் பயன்படுத்துவது கூடுதல் அவசியமாகிறது.
பிடிலாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) சலபாசனம்
சலபாசனம் கால் தசைகளை நீட்சியடையச் செய்கிறது; கால்களை வலுவாக்குகிறது.
சலபாசனத்தில் கால்களை உயர்த்த முடியாதவர்கள் யோகா ப்ளாக் மீது கால்களை வைத்துப் பழகலாம்.
சலபாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) அதோ முக ஸ்வானாசனம்
அதோ முக ஸ்வானாசனம் பின்னங்கால் தசைகளை வலுவாக்குகிறது. தோள், மணிக்கட்டு பகுதிகளையும் வலுவாக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்யவும் இந்த ஆசனம் உதவுகிறது.
அதோ முக ஸ்வானாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) பாலாசனம்
பாலாசனம் முதுகுத்தண்டின் இறுக்கத்தைப் போக்குகிறது; கால் முட்டியின் தசைநார்களை வலுப்படுத்துகிறது.
பாலாசனம் செய்முறை மற்றும் பலன்களுக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
12) மத்ஸ்யாசனம்
மத்ஸ்யாசனம் முதுகின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. கழுத்து வலி மற்றும் முதுகு வலியைப் போக்க உதவுகிறது.
மத்ஸ்யாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருப்பதால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்கவோ, தாக்கத்தைக் குறைக்கவோ மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து பயின்று வருவது மிகவும் அவசியம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் 7 அற்புதமான ஆசனங்கள்
உலகளவில் மக்கள் சந்தித்து வரும் உடல், மன நலப் பிரச்சினைகளில் , தலைமுடி இழப்பும் முக்கிய இடம் பெறுகிறது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி,
சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள்
தற்காலத்திய வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் பல பாதிப்புகளில் ஒன்று சீரற்ற மாதவிடாய். சமீப வருடங்களில் இப்பிரச்சினை அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள்
மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள்
உலக அளவில் மூட்டழற்சியால் (ஆர்த்ரைட்டீஸ்) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் அதிகரித்திருக்கிறதாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன. மூட்டழற்சியின் வடிவங்கள் நூறுக்கும்