உடல் மன ஆரோக்கியம்

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் (Prostate Enlargement) போக்கும் ஆசனங்கள்

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம், அய்ம்பது வயதைக் கடந்த ஆண்களிடையே பரவலாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியான புரோஸ்டேட் சுரப்பி தோராயமாக ஒரு வால்நட் அளவில் இருக்கக் கூடியதாகும். இது தன் அளவை விட பெரியதாவதே புரோஸ்டேட் மிகைப்பெருக்கம் (prostate gland enlargement) என்று அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும்  ஆபத்தற்றவை என்பதால் இத்தகைய மிகைப்பெருக்கம் தீதிலி புரோஸ்டேட் மிகைப்பெருக்கம் (benign prostatic hyperplasia) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அளவில் பெருகும் தீதிலி புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தைச் சரி செய்ய யோகப்பயிற்சி உதவுகிறது. இன்று புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்திற்கான ஆசனங்களைப் பற்றி பார்க்கலாம்.

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் (What Causes Prostate Gland Enlargement?)

வயது முதிர்வினால் புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் ஏற்படக் கூடும் என்பதைத் தவிர வேறு ஆதாரபூர்வமான காரணங்கள் கண்டறியப்படவில்லை.  ஆனால், பொதுவாக, யார் இதனால் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருக்கிறது என்பது பற்றி சில ஆய்வுகள் கூறுகின்றன:

  • பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி அளவில் பெருகக் கூடும். ஆனால், 40 வயதைக் கடந்தவர்களுக்கும் இது ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு.
  • குடும்பத்தில் மூத்தவர்களிடம் இந்நிலை காணப்படுதல்
  • உடற்பயிற்சி இல்லாமை
  • அதிக உடல் எடை
  • இருதயக் கோளாறுகள்

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கத்தின் அறிகுறிகள் (Symptoms of Prostate Gland Enlargement)

பொதுவாக, தீதிலி புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கத்தின் அறிகுறிகளாகக் காணப்படுபவை:

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சுலபமாக சிறுநீர் வெளியேறாமை
  • சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல்
  • சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு தொடர்ந்து இருத்தல்
  • அசாதாரண நிறம் அல்லது வாசனை கொண்ட சிறுநீர்
  • சிறுநீர் சொட்டாக வெளியேறுதல்

தீதிலி புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் ஆபத்தில்லாததாக இருந்தாலும் அதனால் ஏற்படும் சங்கடங்கள் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.

யோகா எவ்வாறு புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கத்தை சரி செய்கிறது?

சில குறிப்பிட்ட ஆசனங்கள் இடுப்பின் அடிப்பகுதி தசைகளை (pelvic floor muscles) பலப்படுத்துவதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இடுப்பின் அடிப்பகுதி தசைகள் பலம் பெறுவதால் புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் அடைவது தவிர்க்கப்படுகிறது. ஒரு வேளை மிகைப்பெருக்கம் இருந்தாலும் அதன் அறிகுறிகளைப் போக்க ஆசனப் பயிற்சி உதவுகிறது. 

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கத்திற்கான ஆசனங்கள்

புரோஸ்டேட் சுரப்பி மிகப்பெருக்கத்தின் அறிகுறிகளைப் போக்கி மிகைப்பெருக்கத்தைக் குறைக்க கீழ்க்கண்ட ஆசனங்கள் உதவுகின்றன.

1) பத்த கோணாசனம்

பத்த கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) வீராசனம்

yoga for enlarged prostate

வீராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) அதோமுக ஸ்வானாசனம்

yoga for enlarged prostate

அதோமுக ஸ்வானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) புஜங்காசனம்

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) ஜானு சிரசாசனம்

ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

7) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) சுப்த பாதாங்குஸ்தாசனம்

சுப்த பாதாங்குஸ்தாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) விபரீதகரணீ

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் போக்கும் மேற்கூறப்பட்டுள்ள  ஆசனங்களுடன் மூலாதாரத்தின் செயல்பாடுகளைத் தூண்டக் கூடிய ஆசனங்களைப் பயில்வது நல்ல பலன் தரும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள்

உலகளவில், கண்ணாடி அல்லது தொடு வில்லை (contact lens) அணிபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவுகின்றன.

Read More »

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் 7 அற்புதமான ஆசனங்கள்

உலகளவில் மக்கள் சந்தித்து வரும் உடல், மன நலப் பிரச்சினைகளில் , தலைமுடி இழப்பும் முக்கிய இடம் பெறுகிறது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஆண்களில் இளம் வழுக்கை உள்ளவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் கூடியிருப்பது

Read More »

சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள்

தற்காலத்திய வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் பல பாதிப்புகளில் ஒன்று சீரற்ற மாதவிடாய். சமீப வருடங்களில் இப்பிரச்சினை அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. சீரற்ற மாதவிடாயை இயற்கையான முறையில், யோகாசனப்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்