அமிலப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் மிக அதிகமாகி வந்திருக்கிறது. நோர்வேயில் எடுக்கப்பட்ட நீண்ட கால ஆய்வின் மூலம் அமிலப் பின்னோட்ட நோய் பத்து வருடங்களுக்கு முன் இருந்ததை விட 50 சதவீதம் கூடியிருப்பதாக அறிய முடிகிறது. இந்த ஆய்வின் முடிவு வெளிவந்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
அமிலப் பின்னோட்ட நோய் உண்டாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இரைப்பை ஏற்றம் (hiatal hernia). இதைத் தவிர்த்து அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான ஏனைய முக்கிய காரணங்களில் சில:
- தவறான உணவுப் பழக்கம்
- உணவு உண்டபின் உடனடியாகப் படுத்தல்
- அதிக உடல் எடை
- காபி, டீ போன்ற சிலவகை பானங்கள்
- மருந்துகளின் பக்கவிளைவுகள்
- புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
- தூக்கமின்மை
- தொடர் மன அழுத்தம்
யோகா எவ்வாறு அமிலப் பின்னோட்ட நோயைப் போக்க உதவுகிறது?
குறிப்பிட்ட யோகாசனப் பயிற்சிகள் மற்றும் கபாலபாதி போன்ற பிராணாயாமப் பயிற்சி உதரவிதானத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் அமிலம் உணவுக் குழாயில் சுரக்காமல் தவிர்க்கிறது.
ஆசனம் பயில்வதால் அதிக உடல் எடையைக் குறைத்து சீரான உடல் எடையைப் பராமரிக்க முடிகிறது.
தூக்கமின்மையைப் போக்கும் ஆசனங்கள் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் பெற முடிகிறது.
யோகப்பயிற்சி மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான பெரும்பாலான காரணங்களை யோகாசனப் பயிற்சி தவிர்ப்பதன் மூலம் இந்நோயைத் தீர்க்கவும் தவிர்க்கவும் உதவுகிறது.
அமிலப் பின்னோட்ட நோயைப் போக்கும் 11 ஆசனங்கள்
அமிலப் பின்னோட்ட நோயைப் போக்கும் ஆசனங்களில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.
1) திரிகோணாசனம்
திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) பரிவ்ருத்த திரிகோணாசனம்
ப்ரிவ்ருத்த திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) பார்சுவோத்தானாசனம்
பார்சுவோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) வீரபத்திராசனம் 2
வீரபத்ராசனம் 2 பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) மர்ஜரியாசனம்
மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) வஜ்ஜிராசனம்
வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) உஷ்ட்ராசனம்
உஷ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) பஸ்சிமோத்தானாசனம்
பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) ஹலாசனம்
ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) பவனமுக்தாசனம்
பவனமுக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேற்கூறப்பட்டுள்ள 11 ஆசனங்களையும் தொடர்ந்து செய்து வர அமிலப் பின்னோட்ட நோயிலிருந்து விடுபடலாம்.
சரியான உணவுப் பழக்கம், ஆழ்ந்த உறக்கம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவை அமிலப் பின்னோட்ட ந்இப்பிரச்சினையிலிருந்து வேகமாக விடுபட உதவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள்
யோகாசனம் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகளவில் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஆய்வுகள் மூலம் இருதய நலனைப் பாதுகாக்க யோகப்பயிற்சி உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள்
முதுகுவலியைப் போக்கி முதுகைப் பலப்படுத்தும் 24 ஆசனங்கள்
சமீப வருடங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்களில் ஒன்று இன்றைய வாழ்க்கைச் சூழல் உருவாக்கியிருக்கும் வேலைமுறை தான். என்னடா இது, எதை எடுத்தாலும் இன்றைய
இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்
ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும், செய்தவற்றையும், செய்யத் தவறியவற்றையும், செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிடுவதாக இருக்கிறது. சிறு குழந்தைகளின் மனம் உன்னதமானது. பள்ளிக்கூடம் (online வகுப்பாக இருந்தாலும்)