சில மாதங்களாகத் தொடர்ந்து பதிவுகளை உருவாக்கவும் வெளியிட முடியாமலும் போனதற்கான முக்கிய காரணம், எங்கள் வீட்டின் புதிய உறுப்பினரான எங்களின் செல்லப்பிராணி. சரி, முக்கிய காரணம் அதுவென்றால் மீதி காரணங்கள் என்ன என்று கேட்கிறீர்களா. எங்களின் புது வரவுதான் மீதி காரணங்களும்.
ஆம், எங்கள் வீட்டின் புதிய வரவு எங்கள் மனங்களையும் நேரத்தையும் தடாலடியாக ஆக்கிரமித்துக் கொண்டது. எங்களின் உடற்பயிற்சி நேரம் முதல் எங்களின் ஓய்வு நேரம் வரை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்தது அந்தப் புதிய வரவு.
அவளின் நடவடிக்கைகளையும் அவள் காட்டும் அன்பையும் வெளிப்படுத்த ஒரு தனி வலைப்பக்கத்தை நாங்கள் உருவாக்க வேண்டியிருந்தது. ஆனால், இது எங்களின் செல்ல வரவின் குரல் மட்டுமல்ல. உலகில் உள்ள எண்ணற்ற செல்லப்பிராணிகளுக்கான, செல்லப்பிராணிகளாக ஏற்றுக் கொள்ளப்படக் காத்திருக்கும் அனைத்து உயிர்களுக்குமான தளமாகவும் இது உருப்பெறும். இதோ எங்களின் புதிய வரவின் தளத்திற்கான இணைப்பு:
https://voiceofapet.blogspot.com/
ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்காமலேயே எங்களின் குடும்ப உறுப்பினராக செழி, ஆமாம், அதுதான் அவள் பெயர், ஆன நாளினைப் பற்றிய அவள் கருத்தைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்:
https://voiceofapet.blogspot.com/2021/12/my-new-home.html
செழிக்கு ஏற்பட்ட ஒரு சோதனையான அனுபவம் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்:
https://voiceofapet.blogspot.com/2022/01/my-first-hopefully-only-one-horror.html
செழி போன்றவர்களின் மனதின் குரல் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்:
https://voiceofapet.blogspot.com/2022/01/chezhi-and-family-bond-voice-of-every.html
மேலும் பல பதிவுகள் செழியைப் பற்றி அவளுக்கான வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இது செழியின் குரல் மட்டுமல்ல, செல்லப்பிராணி வளர்ப்பில் எழக் கூடிய சந்தேகங்களுக்கான விளக்கங்களும் பதிவுகளில் இடம் பெறுகின்றன.
செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனாலும், இதுவரை வளர்த்தவர்களும், வளர்த்துக் கொண்டிருப்பவர்களும் பலன்களை அனுபவித்து உணர்ந்திருப்பார்கள். ஆக, இதுவரை வளர்க்காதவர்கள், வாய்ப்பும் சூழலும் அமைந்தால் செல்லப்பிராணிகளை வளர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு மிகுந்த துணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதோடு அவர்களைப் பொறுப்பானவர்களாக வளரச் செய்வதிலும் முக்கிய பங்காற்றும். சக உயிர்களிடத்தில் அன்பு பாராட்டும் பண்பும் நம்மிடையே பெருகும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.