கடந்த நூற்றாண்டின் அபாரமாக கண்டுபிடிப்புகளில், மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு, கணினியும் இணையமும். இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த பின், அதாவது, 06.08.1991-க்குப் பிறகு, கணினியின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து விட்டது.
இணையத்தின் பயன்பாடு பரவலாக்கப்பட்ட பின், வாழ்க்கை எளிதாக ஆனது, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், எளிதானது போல் தோன்றியது. உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை, பயணம் திட்டமிடுதல் முதல் பயணத்துக்கான பதிவுகளைச் செய்வது வரை மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது, பொருட்கள் வாங்குவது என இணையம் மனிதர்களின் வாழ்வில் பெரும்பாலும் தவிர்க்க முடியாததாகி விட்டது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க, இன்னொன்றும் உலக அளவில் அதிகமானது – அது உடல் எடை கூடியவர்களின் எண்ணிக்கை.
ஒரு ஆய்வு முடிவின்படி, 1980-ல் 6.4%-ஆக இருந்த அதிக உடல் எடை கொண்டவர்களின் சதவிகிதம், 2008-ல் 12.0%-ஆக அதிகரித்து விட்டது. இது அதிகரித்திருக்கும் விதமும் கவனத்துக்குரியது – முதல் பாதி அதிகரிப்புக்கு 1980 முதல் 2000 வரையான 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. ஆனால், மறு பாதி அதிகரிப்புக்கு வெறும் 8 வருடங்களே பிடித்திருக்கிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி நம் உடல் உழைப்பிலும் உணவு முறையிலும் பல்வேறு எதிர்மறைத் தாக்குதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்புக்கு வாழ்க்கை முறையே காரணம்.
நவீன தொழில்நுட்பம் தரும் ஆதாயங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், சரியான, ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்வதன் மூலம் நலமான வாழ்க்கை வாழலாம். அதற்கு உடல் எடை பராமரிப்பு தவிர்க்க முடியாத அவசியத் தேவையாகிறது.
இப்பகுதியில் உடல் எடை பராமரிப்புக்கான ஆசனங்கள், பயிற்சி, உணவு முறைகளைப் பற்றி வரும் நாட்களில் பார்க்கலாம். நன்றி, வணக்கம்.
தொப்பையை வயிறாக மாற்றும் 15 சிறந்த ஆசனங்கள்
யோகா உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீர் செய்கிறது, மனதை அமைதிப்படுத்துகிறது, உடல், மன இயக்கத்தை மேம்படுத்துகிறது …
இடுப்பு சதையைக் குறைக்கும் 19 ஆசனங்கள்
உடல் எடையைப் பொருத்த வரையில் நம்மில் பலரும் முதலில் கவனிக்கத் தவறுவது இடுப்பில் சதைப் போடத் துவங்குவதைத்தான். சில உடைகளை அணியக்…
அதிக தொடை சதையைக் கரைக்கும் ஆசனங்கள்
பொதுவாகவே உடலில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பை மட்டுமே கரைப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், முழு உடலுக்கான பயிற்சியின்…