உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (58) – வீரியஸ்தம்பன் ஆசனம் (Virya Stambhan Pose)

வடமொழியில் ‘வீரிய’ என்றால் ‘பலம்’ என்று பொருள்; ‘ஸ்தம்பன்’ என்பது முதுகுத்தண்டைக் குறிக்கும். ஆக இது முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் ஆசனமாகும். ‘வீரிய’ என்ற சொல்லுக்கு ‘விந்தணு’ என்ற பொருளும் உண்டு. வீரியஸ்தம்பன் ஆசனம் பயில்வதால் விந்தணு பெருகும்.

வீரிய ஸ்தம்பன் ஆசனம் சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டுகிறது. இச்சக்கரம் தூண்டப் பெறுவதால் படைப்புத் திறன் மேம்படும், மகிழ்ச்சி பெருகும், உடலுறவு சார்ந்த கோளாறுகள் நீங்கும். பிறருடனான உறவில் நேர்மையும் நம்பகத்தன்மையும் வளரும்.

 

வீரிய ஸ்தம்பன் ஆசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது; நரம்புக் கோளாறுகளைப் போக்குகிறது
  • முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கிறது; முதுகுத்தண்டைப் பலப்படுத்துகிறது
  • கால்களை நீட்சியடைய வைக்கிறது; கால்களைப் பலமாக்குகிறது
  • மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
  • இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது; இடுப்பில் உள்ள அதிக சதையைக் குறைக்கிறது
  • தொடைப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது
  • தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
  • வாய்வுக் கோளாறுகளைப் போக்குகிறது
  • இரத்த குறைப்பாட்டை சரி செய்கிறது
  • தொடர்ந்து பழகி வர இளமையான தோற்றத்தைத் தருகிறது
  • தூக்கமின்மையைப் போக்குகிறது
செய்முறை
  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • இரண்டு கால்களுக்கு இடையில் நான்கு முதல் அய்ந்து அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
  • வலது பாதத்தை 90 degree அளவில் வெளிப்புறமாகத் திருப்பவும்.
  • வலது காலை மடிக்கவும். வலது முட்டிக்கு நேர் கீழே வலது கணுக்கால் இருக்குமாறு காலை மடிக்கவும்.
  • வலது புறமாகக் குனிந்து வலது கையை வலது காலின் உள்புறத்திலிருந்து வெளிப்புறம் கொண்டு வந்து வலது பாதத்தின் வெளிப்புறம் வலது உள்ளங்கையைத் தரையில் வைக்கவும்.
  • இடது உள்ளங்கையை வலது பாதத்தின் உட்புறமாகத் தரையில் வைக்கவும். மாறாக, இரண்டு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து வலது மணிக்கட்டை இடது கையால் பற்றலாம்.
  • நன்றாக வலதுபுறம் குனிந்து தலையை வலது பாதத்திற்கும் இடது உள்ளங்கைக்கும் இடையில் தரையில் வைக்கவும். இடது கால் நீட்டியபடி இருக்க வேண்டும்.
  • 30 நொடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும். பின் காலை மாற்றி இதை மீண்டும் செய்யவும்.
குறிப்பு

தலையைத் தரையில் வைக்க முடியவில்லை என்றால் முடிந்த வரை குனிந்து பழகவும். அல்லது ஒரு yoga block-ஐ வைத்து அதில் தலையை வைக்கவும்.

முதுகுத்தண்டு கோளாறுகள், தீவிர முதுகு வலி, இடுப்புப் பிரச்சினை, தீவிர மூட்டுக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (59) – சதுரங்க தண்டாசனம் (Four-Limbed Staff Pose / Low Plank Pose)

முந்தைய பதிவு ஒன்றில் கும்பக ஆசனம் (High Plank Pose) பற்றி பார்த்திருக்கிறோம். இன்றைய ஆசனமான சதுரங்க தண்டாசனத்தின் ஒரு வடிவமே கும்பக ஆசனம். ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் கும்பக ஆசனத்தைத் தொடர்ந்து பயின்ற

Read More »

இன்று ஒரு ஆசனம் (57) – அர்த்த பிண்ச மயூராசனம் (Dolphin Pose)

நம் முந்தைய பதிவு ஒன்றில் அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிண்ச மயூராசனத்தைக் கூறலாம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பிண்ச’ என்றால் ‘இறகு’,

Read More »

இன்று ஒரு ஆசனம் (56) – உத்தித திரிகோணாசனம் (Extended Triangle Pose)

நாம் இதுவரை அர்த்த திரிகோணாசனம், திரிகோணாசனம் மற்றும் பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்தித திரிகோணாசனம். வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’ என்று பொருள், அதாவது, இது காலை

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்