உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (41) – ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் (Upward Seated Angle Pose)

நாம் அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் செய்முறையை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தில் ஒரு கால் மட்டும் மேலே நீட்டப்பட்டிருக்கும். ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தில் இரண்டு கால்களுமே பக்கவாட்டில் நீட்டப்பட வேண்டும். வடமொழியில் ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல் நோக்கும்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’, ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருளாகும்.

ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உடலின் சமநிலையை (balance) மேம்படுத்துகிறது. மனதை ஒருமுகப்படுத்துவதோடு மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது.

Upward Seated Angle Pose benefits

ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
  • முதுகுத்தண்டை வலுப்படுத்துகிறது.
  • இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துவதோடு, இடுப்பின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.
  • சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.
  • மூட்டுகளைப் பலப்படுத்துகிறது.
  • கால் தசைகளை வலுப்படுத்துகிறது.
செய்முறை
  • விரிப்பில் அமர்ந்து இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைக்கவும்.
  • வலது கையால் வலது கால் கட்டை விரலையும் இடது கையால் இடது கால் கட்டை விரலையும் பிடித்துக் கொள்ளவும்.
  • மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே சற்று பின்னால் சாய்ந்து கால்களைத் தரையிலிருந்து உயர்த்தவும்.
  • கால் விரலைப் பிடித்தவாறே கால்களை நேராக்கி பக்கவாட்டில் நீட்டவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களைத் தளர்த்தி ஆரம்ப நிலைக்கு வரவும்.
குறிப்பு

கால்களை முழுமையாக நீட்ட முடியவில்லை என்றால், முட்டியைச் சற்று மடக்கி பயிலவும்.

தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தோள், இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (42) – பத்த கோணாசனம் (Bound Angle Pose)

வடமொழியில் ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Bound Angle Pose, Butterfly Pose மற்றும் Cobbler’s Pose என்றும் அழைக்கப்படுகிறது. பத்த கோணாசனம் மூலாதாரம்

Read More »

இன்று ஒரு ஆசனம் (40) – தண்டயமன பத்த கோணாசனம் (Balancing Bound Angle Pose)

வடமொழியில் ‘தண்ட’ என்றால் ‘கம்பு’, ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’, ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’, ‘கோனா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால்கள் கைகளால் பிணைக்கப்பட்டு உடல் சற்று சாய்ந்து

Read More »

இன்று ஒரு ஆசனம் (39) – அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் (Half Upright Seated Angle Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல் நோக்கும்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருளாகும். இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் ஒரு காலை உயர்த்துவதால் இந்த

Read More »

2 Responses

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்