உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (67) – ஊர்த்துவ தனுராசனம் (Upward Bow Pose)

ஊர்த்துவ தனுராசனத்தை சக்ராசனம் என்றும் அழைப்பர். ஆனால், சக்ராசனத்தில் முழுமையான சக்கர வடிவில் கால்களின் அருகே கைகள் இருக்கும். ஊர்த்துவ தனுராசனத்தில் கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். வடமொழியில் ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல் நோக்கும்’ என்றும் ‘தனுர்’ என்றால் ‘வில்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Upward Bow Pose என்று அழைக்கப்படுகிறது. சக்ராசனத்தின் செய்முறைப் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

சக்ராசனத்தைப் போலவே ஊர்த்துவ தனுராசனமும் உடலில் உள்ள எட்டு சக்கரங்களையும் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. எட்டு சக்கரங்கள் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.. ஊர்த்துவ தனுராசனம் உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது.

ஊர்த்துவ தனுராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; முதுகெலும்பை பலப்படுத்துகிறது
  • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகுவலியைப் போக்குகிறது
  • தோள்களை விரிக்கிறது
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
  • இருதய நலன் காக்கிறது
  • தலைவலியைப் போக்க உதவுகிறது
  • வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது
  • இனப் பெருக்க உறுப்புகளின் பணியை மேம்படுத்துகிறது
  • கால்களை நீட்சியடையச் செய்கிறது; கால் தசைகளை உறுதியாக்குகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
செய்முறை
  • விரிப்பில் படுக்கவும்.
  • கால்களை மடித்து பாதங்களை உங்கள் புட்டத்தின் அருகே வைக்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் இடைவெளி விடவும்.
  • கைகளை உயர்த்தி, தோள்களுக்கும் பின்னால் தரையில் வைக்கவும். விரல்கள் உங்கள் தோள்களை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.
  • உள்ளங்கைகளையும் பாதங்களையும் நன்றாகத் தரையில் ஊன்றி மூச்சை உள்ளிழுத்தவாறு மெதுவாக உடலை மேலே உயர்த்தவும்.
  • தலையை பின்னால் சாய்க்கவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
  • மெதுவாகத் தரையில் படுத்து கால்களையும் கைகளையும் நீட்டி ஆரம்ப நிலையில் படுக்கவும்.
குறிப்பு

தீவிர முதுகுத்தண்டு கோளாறு, இடுப்பு வலி, தோள் மற்றும் மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் ஊர்த்துவ தனுராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (68) –ஆஞ்சநேயாசனம் (Low Lunge Pose / Crescent Moon Pose)

புராணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை ஒட்டி அழைக்கப்படும் ஆஞ்சநேயாசனம், ஆங்கிலத்தில் Low Lunge Pose மற்றும் Crescent Moon Pose என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள்

Read More »

இன்று ஒரு ஆசனம் (66) – பரிகாசனம் (Gate Pose)

‘பரிக’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘உத்திரம்’ அல்லது ‘கதவை மூடப் பயன்படும் கட்டை’ என்பதாகும். இது ஆங்கிலத்தில் Gate Pose என்று அழைக்கப்படுகிறது. உத்திரம் என்பது எப்படி ஒரு கட்டடத்துக்கு இன்றியமையாததோ, அது

Read More »

இன்று ஒரு ஆசனம் (65) – பார்சுவ பாலாசனம் (Thread the Needle Pose)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘பால’ என்றால் ‘குழந்தை’ என்று பொருள். இவ்வாசனத்தில் பாலாசன நிலை அல்லது பாலாசன நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் மேலுடலைப் பக்கவாட்டில் திருப்பி செய்வதால் இந்த ஆசனம் பார்சுவ

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்