மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் அய்ந்தாவதாக உள்ளது விசுத்தி சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). இது வடமொழியில் ‘விசுத்த’ என்றும் ‘விசுத்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘விசுத்த’ என்றால் ‘மிகத் தூய்மையான’, என்று பொருள். விசுத்தி சக்கரம் ஆங்கிலத்தில் Throat Chakra என்று அழைக்கப்படுகிறது.
இருப்பிடம்: தொண்டை
நிறம்: நீலம்
ஒலி: ஹம்
தொடர்புடைய மூலகம்: ஆகாயம்
தொடர்புடைய புலன்: கேள்வி (கேட்டல்)
தொடர்பாடல் மற்றும் உண்மையின் மையமாக இருப்பது விசுத்தி சக்கரமாகும். உங்களின் தனிப்பட்ட ஆற்றலுக்கும் உள்ளத்தில் உள்ளதை நேர்மையாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறும் தன்மைக்குமான மையம் விசுத்தியாகும். உங்களைச் சுற்றி உள்ளவர்களோடு மட்டுமல்லாமல் உங்களோடுமே நேர்மையான தொடர்பாடலைப் பேணுவதை நிர்வகிப்பது விசுத்தி சக்கரமே. சுவாதிட்டான சக்கரமும் விசுத்தியும் இணைந்தும் செயல்படும் சக்கரங்கள். சுவாதிட்டானத்தால் நிர்வகிக்கப்படும் படைப்புத் திறனை வெளிக் கொண்டு வருவது விசுத்தியின் சீரான இயக்கமாகும்.
Table of Contents
விசுத்தி சக்கரத்தின் தன்மைகள் மற்றும் விசுத்தியோடு தொடர்புடைய உறுப்புகள்
விசுத்தி சக்கரம் எல்லையற்ற மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கொடுக்க வல்லது. விசுத்தி சக்கரத்தோடு தொடர்புடைய புலன் கேட்டல் என்றாலும் கேட்டல் என்பது பேசுதல் என்பதோடும் இணைந்ததுதான். பிறர் உங்களிடம் பேசுவதைக் கனிவான கவனத்துடன் கேட்டலும் பிறரிடம் பேசுவதில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்டிருப்பதன் மூலமும்தான் உங்களுக்கும் சமூகத்திற்கும் நீங்கள் உண்மையானவராக இருக்க முடியும்; மிகத் தூய்மையான மனநிலையை அடைய முடியும். விசுத்தி சக்கரம் இதை சாத்தியப்படுத்துகிறது.
பிறரைத் திருப்திப்படுத்தும் நோக்கில், அவர்களை வருத்தப்படுத்தக் கூடாது என்பதற்காக அவர்கள் விரும்பியதைக் கூறுவதன் மூலம் ஒருவர் தன் கருத்துக்களை வெளியிடத் தவறும்போது அவர் தனக்கும் பிறருக்கும் நேர்மையாக இல்லாதது மட்டுமல்லாமல் தன் சுயநம்பிக்கையையும் தன்மதிப்பையும் இழந்து போக நேரிடும். இது விசுத்தி சக்கரத்தின் இயக்கத்தைப் பாதிக்கும்.
விசுத்தி சக்கரம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் மையம். உங்களை, உங்களின் படைப்புத் திறனை, உங்கள் வாழ்வின் நோக்கத்தை நீங்கள் உணர்ந்து அங்கீகரிக்க, உங்களின் இலக்கை அடையவும் உங்களின் விசுத்தி சக்கரம் சீராக இயங்க வேண்டியது அவசியம்.
வாய், நாக்கு, பற்கள், ஈறு, குரல்வளை, கேட்கும் திறன், தாடை, கழுத்து, தோள், தைராய்டு ஆகியவற்றை விசுத்தி சக்கரம் நிர்வகிக்கிறது.
விசுத்தி சக்கரம் சீராக இயங்குவதால் ஏற்படும் நன்மைகள்
விசுத்தி சக்கரம் சீராக இயங்குவதால் ஏற்படும் நன்மைகள்:
- நேர்மையான, வெளிப்படையாகப் பேசும் தன்மை
- பிறரின் பேச்சை கவனமுடன் கேட்கும் தன்மை
- பிறருடன் இயல்பாகக் கலந்து பழகும் தன்மை
- பாடுதல், வரைதல் போன்ற கலைத் திறன்கள்
- படைப்பாற்றல்
- தன்னம்பிக்கை
- அமைதியான மனநிலை
விசுத்தி சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் விசுத்தி சக்கரத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
உடல் அறிகுறிகள்
- கழுத்து வலி மற்றும் இறுக்கம்
- தொண்டை வலி மற்றும் இறுக்கம்
- தொண்டை சார்ந்த பிரச்சினைகள்
- சீரற்ற தைராய்டு செயல்பாடு
- இரத்த சோகை
- பல் சார்ந்த பிரச்சினைகள்
- காது சார்ந்த கோளாறுகள்
- வாய்ப் புண்
- உடல் சோர்வு
- தலைவலி
- முதுகுத்தண்டு கோளாறுகள்
மன அறிகுறிகள்
- கூச்சம்
- படைப்புத் திறன் முடங்கியிருத்தல்
- பிறருடன் பேச, பழக அச்சப்படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பேசுதல்
- கேலிக்கு ஆளாவோம் என்ற பயத்தில் மனதில் இருப்பதைப் பேசாதிருத்தல்
- உபயோகமற்ற பேச்சு பேசுதல்
- பிறர் பேசுவதை சரியாக கவனிக்காதிருத்தல் அல்லது அடிக்கடி குறிக்கிட்டு பேசுதல்
- பொது மேடைகளில் பேசத் தயங்குதல்
- சமூக தொடர்புகளைத் தவிர்த்தல்
- நினைப்பதை வெளிப்படுத்த இயலாமை
- பொய் பேசுதல்
- பதட்டம்
- பிடிவாதம்
- பாதுகாப்பற்று இருப்பதாக உணர்தல்
- கவனக் குறைபாடு
விசுத்தி சக்கரத்தைச் சீராக இயங்க வைப்பது எப்படி?
- விசுத்தி சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
- எசன்சியல் எண்ணெய்
- சுய ஊக்கம்
- உணவு
- பொது விதிகள்
விசுத்தி சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
விசுத்தி சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்:
3) மர்ஜரியாசனம் / பிடிலாசனம்
4) சிங்காசனம்
5) உஸ்ட்ராசனம்
8) புஜங்காசனம்
9) தனுராசனம்
10) சேதுபந்தாசனம்
12) சதுஷ் பாதாசனம்
13) சர்வாங்காசனம்
14) ஹலாசனம்
15) சுப்த கோணாசனம்
16) பத்ம ஹலாசனம்
17) மத்ஸ்யாசனம்
18) விபரீதகரணி
19) இராஜ புஜங்காசனம்
20) அர்த்த சிரசாசனம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர உங்களின் விசுத்தி சக்கரத்தின் இயக்கம் செழுமையடையும்.
விசுத்தி சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் எசன்சியல் எண்ணெய்கள்
விசுத்தி சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்த பின்வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:
- Basil essential oil
- Bergamot essential oil
- Chamomile essential oil
- Clove essential oil
- Cypress essential oil
- Eucalyptus essential oil
- Frankincense essential oil
- Geranium essential oil
- Jasmine essential oil
- Juniper essential oil
- Lavender essential oil
- Neroli essential oil
- Peppermint essential oil
- Sandalwood essential oil
- Tea Tree essential oil
எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும். எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து விசுத்தி சக்கரத்தின் இருப்பிடத்தில் தடவலாம் அல்லது பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.
சுய ஊக்கம்
சுய ஊக்க வாக்கியங்களின் ஆற்றல் மகத்தானது. விசுத்தி சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்களை ஒவ்வொரு நாளும் பல முறை சொல்வதன் மூலம் அற்புதமான பலன்களைப் பெறலாம்.
விசுத்தி சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்கள்
- என் விசுத்தி சக்கரம் சீராக இயங்குகிறது
- நான் உண்மையை பேசுகிறேன்
- என் மனதில் உள்ளதைத் தயங்காமல் நேர்மையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறேன்
- என் பேச்சு உன்னதமான நோக்கத்திலிருந்து பிறக்கிறது
- என்னை நான் நம்புகிறேன்
- உபயோகமானவற்றையே நான் பேசுகிறேன்
- பிறர் பேசுவதைக் கவனத்துடன் கேட்கிறேன்
- என்னிடம் படைப்பாற்றல் நிறைந்திருக்கிறது
- பிறரிடன் நான் பரிவு காட்டுகிறேன்
- அளவு கடந்த மகிழ்ச்சியை நான் அனுபவிக்கிறேன்
- என் மனதில் அமைதி நிறைந்திருக்கிறது.
சுய ஊக்க எண்ணங்களை நீங்களாகவே உருவாக்கலாம். பிறிதொரு நாளில் இதை விரிவாகப் பார்க்கலாம்.
விசுத்தி சக்கரத்திற்கான உணவு
விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஒன்றையேனும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்:
- திராட்சை
- அவுரிநெல்லி (Blueberry)
- நாவல் பழம்
- பேரிக்காய்
- ஆப்பிள்
- தேன்
- அனைத்து வகையான மூலிகைத் தேநீர்
- இளநீர்
- எலுமிச்சை பழரசம்
- வெள்ளரிக்காய்
விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் விசுத்தி சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்தலாம்:
- மனதில் உள்ளதை பிறரிடம் வெளிப்படையாகப் பேசும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும். பிறர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசுவதை அறவே தவிர்க்கவும். மறுக்க வேண்டிய நேரத்தில் மறுத்து பேசத் தயங்கக் கூடாது; தன்னம்பிக்கையுடன் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திப் பழகுங்கள். அவசியமற்ற பேச்சையும் அறவே தவிர்க்கவும்.
- பிறர் உங்களிடம் பேசும் போது அக்கறையுடன் கவனிக்கவும்.
- சமூக உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
- பாட்டுப் பாடவும். அதனால் ஏற்படும் அதிர்வுகள் விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கு உதவுவதோடு உங்களின் திறனையும் வளர்க்கும்.
- கழுத்திற்கான பயிற்சிகளை தினமும் செய்யவும்.
- நீல நிறப் பொருட்களை உங்கள் வீட்டில் ஆங்காங்கே கண்களில் படும் இடங்களில் வைக்கவும்.
- விசுத்தி சக்கர தியானம் செய்யவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.