உடல் மன ஆரோக்கியம்

மணிப்பூரக சக்கரத்தின் பலன்களும் மணிப்பூரக சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் எட்டு (சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு பதிவைப் படிக்கவும்) முக்கிய சக்கரங்களில் மூன்றாவதாக உள்ள சக்கரம் மணிப்பூரகம் ஆகும். வடமொழியில் மணிப்பூர என்று அழைக்கப்படும் இச்சக்கரத்தின் பொருள் ‘பிரகாசமான நகை’ என்பதாகும். மணிப்பூரக சக்கரம் ஆங்கிலத்தில் Solar Plexus Chakra என்று அழைக்கப்படுகிறது.

இருப்பிடம்:  தொப்புள் மற்றும் மார்பெலும்பிற்கு இடையில் உள்ள பகுதி

நிறம்:  மஞ்சள்

ஒலி:  ரம்

தொடர்புடைய மூலகம்: நெருப்பு

தொடர்புடைய புலன்:  பார்வை

வெற்றிகரமான வாழ்க்கைக்கு மணிப்பூரக சக்கரம் சீராக இயங்க வேண்டியது மிக மிக அவசியமாகும். பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்ட மணிப்பூரக சக்கரத்தின் சீரான இயக்கத்தினால் நம் ஆற்றலை நாம் உணர்வதும், வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி கொள்வதும் சாத்தியப்படுகிறது. நம் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை இச்சக்கரத்திற்கு உண்டு.

உள்ளடக்கம்

மணிப்பூரகச் சக்கரத்தின் தன்மைகள் மற்றும் மணிப்பூரகத்தோடு தொடர்புடைய உறுப்புகள்

ஆளுமை, அறிவுசார்ந்த திறன்கள், கற்றல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் மையம் மணிப்பூரக சக்கரமாகும். சுதந்திரமாக இருத்தல், சுய அடையாளம், ஊக்கம், மன உறுதி, தன்னம்பிக்கை, தன்மதிப்பு ஆகியவற்றை நிர்வகிப்பதும் மணிப்பூரகம் ஆகும்.

நம் அடிப்படை உணர்வுகளை, நம் ஆழ்மன எண்ணங்களை அறிவதற்கான வழியாகவே புறச்சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை கருதும் பண்பு மணிப்பூரக சக்கரத்தின் சீரான செயல்பாட்டால் ஏற்படுகிறது. இதன் காரணமாக நம்மை உணர்வதும், நம் எண்ணங்களுக்கு பொறுப்பேற்கும் திறந்த மனதும், அதனால் நம் சிந்தனையை மேம்படுத்திக் கொள்ளும் பண்பும் வளர்கின்றன.

நம்மை முழுமையாக உணர்வதும், நம் மேல் நாம் உள்ளார்ந்த அன்பு கொள்ளுதலும் மணிப்பூரகச் சக்கரத்தின் செம்மையான செயல்பாட்டால் சாத்தியமாகிறது.

மணிப்பூரகம் வயிறு, மண்ணீரல், கணையம், உதரவிதானம், சீரண மண்டலம் மற்றும் நிணநீர் மண்டலம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

மணிப்பூரக சக்கரம் சீராக இயங்குவதற்கான அறிகுறிகள்

கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் மணிப்பூரக சக்கரம் சீராக இயங்குவதைத் தெரிந்து கொள்ளலாம்:

  • மன உறுதியோடிருத்தல்
  • தன்னம்பிக்கை கொண்டிருத்தல்
  • தன்மதிப்புடன் இருத்தல்
  • நேர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல்
  • உணர்வுகளைச் சரியாகக் கையாளுதல்
  • தன் எல்லைகளை வரையறுத்தல்
  • சுற்றியுள்ளவர்களிடம் நல்ல உறவு பாராட்டுதல்
  • தைரியம் மற்றும் மன உறுதியுடன் தெளிவான முடிவுகளை எடுத்தல்
  • அறிவுசார்ந்த திறன்கள் கொண்டிருத்தல்
  • மன உறுதியுடன் தேர்ந்தெடுத்த பாதையில் முன்னேறுதல்

மணிப்பூரக சக்கரம் சீராக இயங்கும்போது தன் ஆற்றலை உணரும் அதே நேரத்தில் பிறர் மேல் அதிகாரம் செலுத்தாமல் இருக்கும் பண்பும் வளர்கிறது. அறிவார்ந்த திறன்கள் வளர்வதன் நீட்சியாக ஞானம் பிறக்கிறது.

மணிப்பூரகம் சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் மணிப்பூரகத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்
  • சீரண கோளாறுகள்
  • மூச்சு கோளாறுகள்
  • அல்சர்
  • வயிற்று வலி
  • கீல்வாதம்
  • நீரிழிவு
  • மண்ணீரல் சார்ந்த கோளாறுகள்
  • கணையம் சார்ந்த பிரச்சினைகள்
  • தசைநார் வலி (Fibromyalgia)
மன அறிகுறிகள்
  • தன்னம்பிக்கைக் குறைவாக இருத்தல்
  • தன்மதிப்பு இல்லாமை
  • மூர்க்கத்தனம்
  • பிறரின் மேல் ஆதிக்கம் செலுத்துதல், பிறரின் மேல் தன் விருப்பங்களைக் கட்டாயப்படுத்தி ஏற்றுதல்
  • அங்கீகாரம் தேடுவதில் குறியாக இருத்தல்
  • பதட்டம்
  • மன அழுத்தம்
  • தன் வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவான பார்வை இல்லாதிருத்தல்

மணிப்பூரக சக்கரத்தைச் சீராக இயங்க வைப்பது எப்படி?

  • மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
  • எசன்சியல் எண்ணெய்
  • சுய ஊக்கம்
  • உணவு
  • பொது விதிகள்

மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்

மணிப்பூரக சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்:

1) அர்த்த கடி சக்ராசனம்

2) திரிகோணாசனம்

3) உத்கடாசனம்

4) பார்சுவோத்தானாசனம்

5) அஷ்வ சஞ்சாலனாசனம்

6) ஆஞ்சநேயாசனம்

7) அஷ்ட சந்திராசனம்

8) சதுரங்க தண்டாசனம்

 

9) வசிஸ்தாசனம்

10) பரிகாசனம்

11) பார்சுவ பாலாசனம்

12) நவாசனம்

13) அதோ முக கபோடாசனம்

14) ஏக பாத இராஜ கபோடாசனம்

15) த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனம்

16) உபவிஸ்த கோணாசனம்

17) வக்கிராசனம்

18) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

19) சேதுபந்தாசனம்

20) ஏக பாத சேதுபந்தாசனம்

21) சதுஷ் பாதாசனம்

22) சலபாசனம்

23) இராஜ புஜங்காசனம்

24) பத்ம மயூராசனம்

25) சர்வாங்காசனம்

26) ஹலாசனம்

27) பத்ம ஹலாசனம்

28) அர்த்த சிரசாசனம்

29) விபரீதகரணி

மணிப்பூரக சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

மணிப்பூரக சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்த பின்வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • Black pepper essential oil
  • Cedarwood essential oil
  • Chamomile essential oil
  • Cinnamon essential oil
  • Cypress essential oil
  • Geranium essential oil
  • Ginger essential oil
  • Juniper essential oil
  • Lemon essential oil
  • Musk essential oil
  • Peppermint essential oil
  • Rosemary essential oil
  • Saffron essential oil
  • Sandalwood essential oil
  • Vetiver essential oil
  • Ylang Ylang essential oil

எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும். எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து மணிப்பூரக சக்கரத்தின் இருப்பிடத்தில் தடவலாம் அல்லது பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

Essentialoils

சுய ஊக்கம்

சுய ஊக்க வாக்கியங்களினால் ஏற்படும் நன்மைகள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். சுய ஊக்த்தினைத் தரும் வாக்கியங்களின் ஆற்றல் மகத்தானது. சுய ஊக்க வாக்கியங்களை மீண்டும் மீண்டும் சொல்வதனால் நீங்கள் மேன்மேலும் ஊக்கம் பெறுவீர்க்கள். அவை  நீங்கள் விரும்பும் வெற்றிகளையும் மன நிறைவான வாழ்வையும் உங்களுக்குத் தரும்.

மணிப்பூரக சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்கள்
  • என் மணிப்பூரக சக்கரம் சிறப்பாக இயங்குகிறது
  • என் மனதில் அமைதி நிறைந்திருக்கிறது
  • நான் என்னை முழுமனதோடு விரும்புகிறேன்
  • நான் என்னை மதிக்கிறேன்
  • என்னுடைய திறன்களை நான் அங்கீகரிக்கிறேன்
  • புதிய சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன்
  • ஒவ்வொரு முடிவையும் தன்னம்பிக்கையோடும் தெளிவோடும் எடுக்கிறேன்
  • என் இலக்குகளைத் தெளிவாக நிர்ணயிக்கிறேன்
  • நான் விரும்பியவை அனைத்தையும் அடைகிறேன்
  • என் தவறுகளுக்குப் பொறுப்பேற்று அவற்றிலிருந்து பாடம் கற்று முன்னேறுகிறேன்
  • சக மனிதர்களிடம் நல்ல உறவைப் பேணுகிறேன்

சுய ஊக்க எண்ணங்களை நீங்களாகவே உருவாக்கலாம். பிறிதொரு நாளில் இதை விரிவாகப் பார்க்கலாம்.

மணிப்பூரக சக்கரத்திற்கான உணவு

மணிப்பூரக சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஒன்றையேனும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

  • வாழைப்பழம்
  • எலுமிச்சை பழம்
  • அன்னாசி
  • சோளம்
  • இஞ்சி
  • மஞ்சள்
  • பால்
  • தயிர்
  • சீரகம்
  • சோம்பு
  • பூசணிக்காய்
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு
  • சூரியகாந்தி விதைகள்
  • முளைகட்டிய பயறு
  • கைக்குத்தல் அரிசி
  • பருப்பு வகைகள்
  • சிறுதானியங்கள்
  • ஓட்ஸ்

மணிப்பூரக சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மணிப்பூரக சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்தலாம்.

  • உங்கள் கருத்துக்களைத் தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் பகிருங்கள்.
  • சூரிய ஒளியில் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
  • நிமிர்ந்து நிற்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதால் நிமிர்ந்து நில்லுங்கள்.
  • மஞ்சள் நிறப் பூக்கள் மற்றும் பொருட்களை உங்கள் கண்களில் படும் இடங்களில் வைக்கவும்.
  • மணிப்பூரக சக்கரத்தை மனதில் வைத்து தியானம் செய்யவும்.
  • “வாழ்க்கை நமக்குக் கடினமான சுமைகளைத் தருகிறது”, “நாம்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம்” என்பது போன்ற எண்ணப் போக்கிலிருந்து வெளியே வாருங்கள்.
  • புதிய வேலைகளில் ஈடுபடுங்கள். இது உங்களால் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை வளர்க்கும்.
  • புதிய சூழல்களுக்கு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை ஒரு புதிய இடத்திற்குச் செல்லலாம்; அது சுற்றுலாவாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, வழக்கமாகச் செல்லும் கடைகளைத் தவிர்த்து வேறு புதிய கடைகளுக்குச் செல்லலாம்.
  • உங்கள் விருப்பங்களை வெளிப்படையாக அறிவியுங்கள்; உங்கள் தேவைகளுக்கான முடிவை நீங்களே எடுக்கத் தொடங்குங்கள்.

 

மூலாதார சக்கரத்தின் பலன்கள் மற்றும் மூலாதார சக்கரத்தின் இயக்கத்தைத் தூண்டும் முறைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

சுவாதிட்டான சக்கரத்தின் பலன்கள் மற்றும் சுவாதிட்டான சக்கரத்தின் இயக்கத்தைத் தூண்டும் முறைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்