வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள். காகாசனத்தில் கைகள் மடிக்கப்பட்டிருக்கும்; பகாசனத்தில் கைகள் நீட்டியபடி இருக்கும். இப்போது நாம் பார்க்க இருப்பது பார்சுவ பகாசனம். ‘பார்சுவ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘பக்கவாட்டு’. இதில் கைகள் மடித்து இருப்பதால் இந்த ஆசனத்தை பக்கவாட்டு காகாசனம், அதாவது Side Crow Pose என்று அழைப்பதே சரி.
நாம் முன்னரே காகாசனம் பற்றி எழுதும் போது கூறியது போல் பார்சுவ பகாசனம் செய்வதாலும் கைகள் நல்ல பலம் பெறுகின்றன. இந்த ஆசனம் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டுகிறது. இதனால், நம் உடலின் ஆற்றல் பெருகுகிறது, சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளும் தன்மை வளருகிறது, தன்னம்பிக்கை வளர்கிறது, உங்களுக்கான பாதையில் உறுதியாக நடைபோடும் ஆற்றலைத் தருகிறது.
பார்சுவ பகாசனத்தின் மேலும் சில பலன்கள்
- தோள், கைகள் மற்றும் மணிக்கட்டை பலப்படுத்துகிறது.
- முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
- முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.
- சீரணத்தை மேம்படுத்துகிறது.
- வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை பலப்படுத்துகிறது.
- உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவுகிறது.
- கவனத்தைக் கூர்மையாக்குகிறது.
- வாழ்க்கையின் சவால்களை சந்திக்கும் உறுதியை அளிக்கிறது.
செய்முறை
- நேராக நிற்கவும்.
- இடுப்பை தரையை நோக்கி இறக்கவும்.
- மேல் உடலை வலது புறம் திருப்பி இரண்டு கைகளையும் வலது காலுக்கு வெளிப்புறம் சற்று பக்கவாட்டில் வைக்கவும். கைவிரல்களைப் பிரித்து வைக்கவும். இரண்டு கால் முட்டிகளும் அருகருகே இருக்க வேண்டும்.
- கை முட்டியை சற்று மடக்கி, வலது கால் தொடையின் வெளிப்புறத்தை (கால் முட்டிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி) இடது கை முட்டிக்கு மேல் வைக்கவும்.
- மெதுவாக கால்களை உயர்த்தி கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்குமாறு வைக்கவும்.
- உங்கள் உடலைச் சற்று முன்னோக்கி சாய்க்கவும்.
- கைகளை நன்றாகத் தரையில் ஊன்றி இரண்டு கால்களையும் தரையிலிருந்து உயர்த்தவும். இப்பொழுது உங்கள் இடது கை உங்களின் உடல் எடையைத் தாங்கியபடி இருக்கும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின் கால்களைக் கீழே வைத்து எழுந்து நிற்கவும். பின் இடது புறம் திரும்பி இவ்வாசனத்தைச் செய்யவும்.
குறிப்பு
தோள், முட்டி, மணிக்கட்டு, இடுப்புப் பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
இன்று ஒரு ஆசனம் (48) – சாந்தி ஆசனம் (Savasana / Rest Pose)
இன்று பார்க்கவிருக்கும் ஆசனத்தில் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்பதால் வடமொழியில் இது சவாசனா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘சவ’ என்றால் ‘இறந்த உடல்’ என்று பொருள். இறந்த உடல் போல் அசையாமல் படுத்திருக்க வேண்டும்
இன்று ஒரு ஆசனம் (46) – பார்சுவ உபவிஸ்த கோணாசனம் (Side Seated Angle Pose)
வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது. பார்சுவ உபவிஸ்த கோணாசனம்
இன்று ஒரு ஆசனம் (45) – உத்தித நமஸ்காராசனம் / உத்தித மாலாசனம் (Extended Leg Squat Pose)
வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘நமஸ்கார’ என்றால் ‘வணக்கம்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் ஒரு கால் நன்றாக நீட்டப்பட்டு இரு கைகளால் வணக்கம் சொல்வதால் இந்தப் பெயர் பெற்றது. இது மாலாசனத்தின் ஒரு
2 Responses
Clear explanation! Nice job!
Many thanks. Thanks for visiting the site.