உடல் மன ஆரோக்கியம்

மூலாதார சக்கரத்தின் பலன்களும் அதை இயங்க வைக்கும் முறைகளும்

மூலாதாரம் என்ற பெயரிலேயே இச்சக்கரத்தின் முக்கியத்துவம் விளங்கியிருக்கும். ‘மூலம்’ என்றால் ‘வேர்’ மற்றும் ‘ஆதாரம்’ என்றால் ‘அடிப்படை’ என்று பொருள். இதன் தன்மை மற்றும் அமைந்திருக்கும் இடம் காரணமாக இச்சக்கரம் மூலாதாரம் என்று அழைக்கப்படுகிறது.

இருப்பிடம்: முதுகுத்தண்டின் கீழ்

நிறம்: சிகப்பு

ஒலி: லம்

தொடர்புடைய மூலகம்: நிலம்

தொடர்புடைய புலன்: நுகர்தல்

மூலாதாரம் நம் சக்தி உடலின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. குண்டலினி சக்தியின் துவக்கம் இச்சக்கரத்தில்தான் உள்ளது. இச்சக்கரத்தில்தான் வட, பிங்கல மற்றும் சுசும்ன நாடிகள் சந்திக்கின்றன.  மூலாதாரத்தின் சீரான இயக்கமே அனைத்துச் சக்கரங்களின் இயக்கத்துக்கும் அடிப்படையாக அமைகிறது. ஆக, மூலாதார சக்கரம் உயிர் வாழ்தலின் மையமாக விளங்குகிறது.

உள்ளடக்கம்

மூலாதார சக்கரத்தின் தன்மைகள் மற்றும் மூலாதாரத்தோடு தொடர்புடைய உறுப்புகள்

அடிப்படைத் தேவைகள், நிலையான தன்மை மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றிற்கான சக்கரம் மூலாதாரம் ஆகும். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் தீர்க்கப் பெறும்போது, நேர்மறையான சூழலில் வளரும்போது ஏற்படும் பாதுகாப்பு உணர்வுதான் நிலையான தன்மையை ஊக்குவிக்கும்.

மகிழ்ச்சியான, பாதுகாப்பான சூழலில் வளரும் ஒரு குழந்தையின் மூலாதார சக்கரம் சீராக இயங்கும். இதன் காரணமாக, அக்குழந்தையின் தன்னம்பிக்கை, தன்மதிப்பு, சமூகத்தில் ஒருவராகக் கலந்து பழகும் தன்மை ஆகியவை வளரும்; வாழ்க்கையில் நம்பிக்கை வைத்தல், நேர்மறை குணங்கள் கொண்டிருத்தல் ஆகியவை இயல்பான தன்மைகளாக அமையும்.

மாறாக, பாதுகாப்பற்ற சூழலில், அச்சம் தரக்கூடிய சுற்றுச்சூழலில் வளரும் ஒரு குழந்தையின் மூலாதார சக்கரம் சீரற்று இயங்கும். இதன் காரணமாக எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இல்லாதிருத்தல், தன்மதிப்பற்று இருத்தல், சமூகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத தன்மை, விரோதம் பாராட்டும் மனப்பாங்கு போன்ற எதிர்மறைத் தன்மைகள் வளரும். இதன் விளைவாக ஏற்படும் தாக்கங்கள் அக்குழந்தையின் வாழ்வில் பல உடல், மன சிக்கல்களை உருவாக்கும்.

மூலாதார சக்கரம், இரத்த ஓட்டம், பாலியல் உறுப்புகள், பெருங்குடல், சிறுநீரகம், எலும்பு மற்றும் தசைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

மூலாதாரம் சீராக இயங்குவதால் ஏற்படும் நன்மைகள்

மூலாதார சக்கரம் சீராக இயங்குவதால் ஏற்படும் முக்கிய நன்மைகளைப் பார்க்கலாம்.

  • நிலையான தன்மை வளர்கிறது
  • பாதுகாப்பான உணர்வு ஏற்படுகிறது
  • நேர்மையான சிந்தனை வளர்கிறது
  • தனிமை உணர்வு இல்லாமல் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் உள்ள பிறரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தன்மை வளர்கிறது
  • தன்னம்பிக்கை அதிகரிக்கிறது
  • தன்மதிப்பு வளர்கிறது
  • மகிழ்ச்சி, திருப்தி போன்ற குணநலன்கள் வளர்கின்றன
  • உடல், மன ஆற்றல்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றன
  • பிரபஞ்சத்தோடு பிணைப்பை அதிகரிக்கிறது

மூலாதாரம் சீராக இயங்கும் போது வாழ்க்கையை நேர்மையாய் அனுபவிக்கவும், இரசிக்கவும் வைக்கிறது. நம்மிடம் இருக்கும் வளங்களைப் போற்றவும் மனநிறைவு அடையவும் உதவுகிறது.

மூலாதாரம் சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்

மூலாதாரம் சீராக இயங்காததைப் பின்வரும் அறிகுறிகளால் உணர்ந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்
  • சோர்வு
  • மலச்சிக்கல்
  • சிறுநீர் கழித்தல் சம்மந்தமான கோளாறு
  • சிறுநீரகக் கற்கள்
  • தவறான உணவு பழக்கம்
  • சீரணக் கோளாறுகள்
  • குறைந்த இரத்த அழுத்தம்
  • இரத்த சோகை
  • அடிமுதுகு வலி
  • இடது கை வலி
  • கால் மற்றும் பாதங்களில் வலி, இறுக்கம் மற்றும் சோர்வு
  • சையாடிக் கோளாறு
  • ஆண்மை குறைபாடு
  • விதைப்பை சம்மந்தமான கோளாறுகள்
மன அறிகுறிகள்
  • அமைதியற்ற மனநிலை
  • தன்னம்பிக்கையற்று இருத்தல்
  • அச்ச உணர்வு அதிகரித்தல்
  • வருங்காலத்தைப் பற்றி எப்போதும் கவலையோடிருத்தல்
  • பாதுகாப்பாக உணராத தன்மை கொண்டிருத்தல்
  • தனக்கான அடையாளத்தை உணராதிருத்தல்
  • பேராசை கொள்ளுதல்
  • தொடர்ந்து எரிச்சல் மற்றும் அதீத கோபம் கொள்ளுதல்
  • பொறுமையின்மை
  • பதட்டம்
  • சமூகத்துடனான பிணைப்பு இல்லாதிருத்தல்
  • குறுகிய மனப்பான்மை
  • மன அழுத்தம்
  • குற்ற உணர்வு
  • கவனம் செலுத்த இயலாமை
  • முடிவு எடுப்பதில் தடுமாற்றம்

மூலாதார சக்கரத்தைச் சீராக இயங்க வைப்பது எப்படி?

மூலாதார சக்கரத்தின் இயக்கத்தை சீராக்கும் வழிகள்:

  •  மூலாதார சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
  • கற்கள் (Crystals / Gemstones)
  • எசன்சியல் எண்ணெய் (Essential Oils)
  • சுய ஊக்க வாக்கியங்கள்
  • உணவு
  • பொது விதிகள் 

கற்கள் (Crystals / Gemstones)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள கற்கள் மூலாதார சக்கரத்தின் இயக்கத்தைத் தூண்டி சீராக செயல்பட வைக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றில் ஒன்றை தினமும் பயன்படுத்தி வரலாம்.

  • Black Tourmaline
  • Bloodstone
  • Garnet
  • Hematite
  • Jet
  • Obsidian
  • Red Carnelian
  • Red Jasper
  • Rhodonite
  • Tourmaline

மூலாதார சக்கரத்திற்கான கல்லை உங்கள் கைகளில் வைத்து தியானத்தில் மூலாதார சக்கரம் இருக்குமிடத்தை மனக்கண்ணில் காணவும். சுய ஊக்கப் பயிற்சி செய்யும் போதும் கைகளில் வைத்துக் கொள்ளலாம்.

குப்புறப் படுத்து, மூலாதார சக்கரம் இருக்குமிடத்தில் மூலாதாரத்திற்கான கல்லை வைத்து சிறிது நேரம் அமைதியாக இருக்கவும்.

மூலாதார சக்கரத்திற்கான கல்லை உங்கள் வீட்டில் உங்கள் பார்வையில் படுமாறு வைக்கவும். நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் பையில் கொண்டு செல்லலாம்.

மூலாதாரத்திற்கான கல்லை ஆபரணமாக அணியலாம். பெல்டிலும் அக்கல்லை அணியலாம்.

மூலாதார சக்கரத்திற்கான எசன்சியல் எண்ணெய் (Essential Oils for Muladhara Chakra)

மூலாதார சக்கரத்தின் சீரான செயல்பாட்டுக்காக பின் வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • Cinnamon
  • Frankincense
  • Ginger
  • Lavender
  • Patchouli essential oil
  • Sandalwood
  • Vetiver

எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும். எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து மூலாதார சக்கரத்தின் இருப்பிடத்தில் தடவலாம் அல்லது பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

சுய ஊக்கம்

நம் ஆழ்மனதின் ஆற்றல் அபரிமிதமானது. அதில் நாம் விதைக்கும் எண்ணங்கள்தான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். ஒவ்வொரு சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கும் அதற்கான வாக்கியங்களை சுய ஊக்கமாகச் சொல்வதன் மூலம் குறிப்பிட்ட சக்கரத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும்.

மூலாதார சக்கரத்துக்கான சுய ஊக்க வாக்கியங்கள்:
  • என் மூலாதார சக்கரம் சீராக இயங்குகிறது.
  • என் வாழ்க்கை சிறப்பானது.
  • நான் பாதுகாப்பாக உணர்கிறேன்.
  • நான் நிலையான தன்மையோடு இருக்கிறேன்.
  • நேர்மறை எண்ணங்கள் என்னுள் நிறைந்திருக்கின்றன.
  • என் மனம் அமைதியாய் இருப்பதை உணர்கிறேன்
  • இந்த பூமி என்னை நன்கு வாழ வைக்கிறது
  • நான் நலமாக இருக்கிறேன்
  • என் வாழ்க்கை முறை ஆரோக்கியமானது

சுய ஊக்க எண்ணங்களை நீங்களாகவே உருவாக்கலாம். இதை எவ்வாறு செய்வது என்பதைப் பின்னொரு நாளில் பார்க்கலாம்.

மூலாதார சக்கரத்துக்கான உணவு

மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்திற்குக் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளில் ஒன்றையாவது கண்டிப்பாக உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்:

  • வெங்காயம்
  • மஞ்சள்
  • பூண்டு
  • இஞ்சி
  • உருளைக் கிழங்கு
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • கேரட்
  • முள்ளங்கி
  • பீட்ரூட்
  • தக்காளி
  • மாதுளை
  • ஸ்ட்ராபெர்ரி
  • கடலை வகைகள்
  • முட்டை
  • இறைச்சி

மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்

உங்களின் தினசரி வாழ்க்கையில் செய்யக் கூடிய சில ஆக்கப்பூர்வமான செயல்கள் மற்றும் பொழுதுபோக்குகள் மூலாதார சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக வைக்கும். இதோ சில வழிகள்:

  • வெறும் காலில் நடத்தல் அல்லது மெதுவாக ஓடுதல்; அவ்வாறு நடக்கும் போதும் ஓடும் போதும் முழு கவனத்தையும் நிலத்தோடு ஏற்படும் தொடர்பில் மனதை வைக்கவும்.
  • தோட்ட வேலையில் ஈடுபடுதல்; வீட்டில் தோட்டம் இல்லையென்றாலும் தொட்டிகளில் செடி வைத்தல் போன்ற மண்ணோடு தொடர்புடைய வேலைகளில் ஈடுபடுதல்.
  • சக்கரத்தை மனதில் வைத்து தியானம் செய்தல்.
  • சிகப்பு நிறப் பொருள்களைக் கண்ணில் படும் இடங்களில் வைத்து அவ்வப்போது அந்நிறத்தைப் பார்த்தல்.
Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு – தமிழரின் மருத்துவத் தொன்மை

பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.

Read More »

மணிப்பூரக சக்கரத்தின் பலன்களும் மணிப்பூரக சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் எட்டு (சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு பதிவைப் படிக்கவும்) முக்கிய சக்கரங்களில் மூன்றாவதாக உள்ள சக்கரம் மணிப்பூரகம் ஆகும். வடமொழியில் மணிப்பூர என்று அழைக்கப்படும் இச்சக்கரத்தின் பொருள் ‘பிரகாசமான நகை’ என்பதாகும்.

Read More »

சுவாதிட்டான சக்கரத்தின் பலன்களும் சுவாதிட்டான சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

சுவாதிட்டானம் மனித உடலின் முக்கிய சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் ஆகும். வடமொழியில் ஸ்வாதிஷ்டானம் என்று அறியப்படும் இதன் பொருள், ‘ஒருவரின் சொந்த வாழ்விடம்’ என்பதாகும்; அதாவது, ‘ஸ்வ’ என்றால் ‘ஒருவரின் சொந்த’ என்றும் ‘ஆதிஷ்டான’

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்