வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ மற்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்று பொருள். இவ்வாசனம் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு சவால் விடும் ஆசனங்களில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் One-Legged King Pigeon Pose என்று அழைக்கப்படுகிறது.
காகமும் புறாவும் மிக புத்திசாலியான பறவைகள் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. காகம் பற்றி நாம் காகாசனத்தில் குறிப்பிட்டிருந்தோம். பறவையால் மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது. மனிதர்களைப் போலவே பார்க்கக் கூடிய பொருள்களை வகைப்படுத்திப் புரிந்து கொள்ளும் திறன் அவற்றிற்கு உண்டு, அதுவும் வியத்தகு வேகத்தில் என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
ஏக பாத இராஜகபோடாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சகஸ்ரார சக்கரங்களைத் தூண்டப் பெற்று அவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்துகின்றன. சகஸ்ரார சக்கரம் தூண்டப்படும் போது, பிரபஞ்ச பேராற்றலை ஆழ்ந்துணர முடிகிறது, மூளையின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆக, உருவ அமைப்பு ஒத்திருத்தலையும் தாண்டி, மிகவும் அறிவான புறாவோடு இவ்வாசன நிலையை ஒத்துக் கூறுவதற்கான காரணமாகவும் இது அமைந்திருக்கலாம்.
ஏக பாத இராஜகபோடாசனத்தின் மேலும் சில பலன்கள்
- முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
- தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது
- நுரையீரலைப் பலப்படுத்துகிறது
- இடுப்புப் பகுதியை விரிவடையச் செய்வதுடன் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- கால்களை நீட்சியடையச் செய்கிறது
- சையாடிக் பிரச்சினையைப் போக்குகிறது
- உடல் சோர்வை நீக்குகிறது
- மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்குகிறது
செய்முறை
- தவழும் நிலைக்கு வரவும். மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
- மூச்சை வெளியேற்றியவாறு வலது முட்டியைக் கால்களுக்கு இடையில் கொண்டு வரவும். வலது கணுக்கால் இடது மணிக்கட்டின் அருகே இருக்க வேண்டும்.
- இடது காலைப் பின்னால் நீட்டி இடது முட்டியைத் தரையில் வைக்கவும். இடது பாதத்தின் உள்பக்கம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
- வலது புட்டத்தைத் தரையில் வைக்கவும். கீழ் முதுகை நன்றாக நிமிர்த்தவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்புப் பகுதியை மேலும் நன்றாகக் கீழிறக்கவும்.
- இடது கையைத் தலைக்கு மேல் உயர்த்தவும். இடது உள்ளங்கை உடலை நோக்கி இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றவும்.
- மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தலையையும் மேல் முதுகையும் சற்று பின்னோக்கிச் சாய்க்கவும்.
- மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடது காலை மடக்கி இடது கணுக்காலை இடது கையால் பிடிக்கவும். இப்போது இடது உள்ளங்கை கீழ் நோக்கி திரும்பி இருக்கும்.
- உங்கள் இடது பாதத்தில் தலையை வைக்கவும். அல்லது, இடது கையால் இடது கால் விரல்களைப் பற்றி இருந்தால் போதுமானது. வலது கையைத் தரையில் வைக்கலாம். அல்லது சின்முத்திரையில் தொடை மீது வைக்கலாம்.
- 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.
- மீண்டும் ஆரம்ப நிலைக்கு வர, இடது காலைக் கீழிறக்கி, வஜ்ஜிராசன நிலைக்கு வந்து, பாலாசனத்தில் ஓய்வெடுக்கவும்.
- கால் மாற்றி மீண்டும் செய்யவும்.
(வஜ்ஜிராசனத்தின் செய்முறை மற்றும் பலன்களைப் படிக்க இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்).
(பாலாசனம் செய்முறை மற்றும் பலன்களைப் படிக்க இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்).
குறிப்பு
முதுகுத்தண்டில் தீவிர பிரச்சினைகள், இடுப்பு, முட்டி, கணுக்கால் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
மடக்கி இருக்கும் காலுக்கு அடியில் yoga block அல்லது மடித்த கம்பளத்தை வைத்துக் கொள்ளலாம்.
பின்னால் இருக்கும் காலைப் பிடிக்க முடியவில்லையென்றால் yoga belt-ஆல் பின்னால் இருக்கும் காலின் கணுக்காலைச் சுற்றி, அதை பற்றி இழுத்து ஆசனத்தைப் பயிலலாம்.
இன்று ஒரு ஆசனம் (79) – அதோ முக கபோடாசனம் (Downward Facing Pigeon Pose)
நேற்றைய பதிவில் ஏக பாத இராஜகபோடாசனம் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது அதோ முக கபோடாசனம். ஏக பாத இராஜகபோடாசனம் செய்வதற்கு முன் இவ்வாசனத்தை செய்வது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும். வடமொழியில்
இன்று ஒரு ஆசனம் (77) – வசிஸ்தாசனம் (Side Plank Pose)
வடமொழியில் ‘வசிஸ்த’ என்றால் ‘மிகச் சிறந்த’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒரு கையில் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்கி இருப்பதால் இது சக்தி வாய்ந்த ஆசனமாகும். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Side Plank Pose என்று
இன்று ஒரு ஆசனம் (76) – உத்கட கோணாசனம் (Goddess Squat)
இதற்கு முன் நாம் பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், பார்சுவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம், தண்டயமன பத்த கோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம்.