இருமல், நுரையீரலின் பாதைகளைச் சுத்தம் செய்யவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உடல் பயன்படுத்தும் ஒரு தற்காப்பு முறை. இருமல், சளியுடன் அல்லது சளி இல்லாத வறட்டு இருமலாக வரலாம். எவ்வாறெனினும், வீட்டு மருத்துவத்தைப் பயன்படுத்தி இருமலிலிருந்து நிவாரணம் பெறலாம்.
(Photo by Nataliya Vaitkevich from Pexels)
இருமலைப் போக்கும் இயற்கை மருத்துவம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் பெரும்பாலானவை நாம் அன்றாட சமையலில் பயன்படுத்துபவையாகும்.
1) மஞ்சள்
மஞ்சளில் இருக்கும் curcumin, antiviral, antibacterial மற்றும் anti-inflammatory தன்மை கொண்டது. சளியைப் போக்கி சிறப்பான நிவாரணம் தரும் மஞ்சள் வறட்டு இருமலையும் போக்கும் தன்மை கொண்டது.
ஒரு கோப்பைப் பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளைச் சேர்த்து கொதிக்க விடவும். பொறுக்கும் சூட்டில் பருகவும்.
ஒரு துண்டு மஞ்சளை நெருப்பில் காட்டி, அதன் வாசத்தை நுகர்ந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
2) தேன்
தேன் antiviral மற்றும் antibacterial தன்மை கொண்டது. அது சளியைக் கரைத்து வெளியேற்றுவதன் மூலம் இருமலை சரி செய்கிறது. மேலும் தேன் தொண்டை எரிச்சலைப் போக்குகிறது.
சுடான பாலில் ஒரு தேக்கரண்டி தேனைச் சேர்த்து இரவு படுக்கும் முன் பருகவும்.
3 மேசைக்கரண்டி flaxseeds-ஐ ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த பின் நீரை வடிகட்டி அதனுடன் தலா 3 மேசைக்கரண்டி தேனும் எலுமிச்சை சாறும் கலந்து பருகவும்.
3) மிளகு
மிளகுக்கு சளியைக் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. அதன் antibacterial தன்மைகளால் பாக்டீரியா தொற்றால் ஏற்படக் கூடிய சளி, இருமலைப் போக்குகிறது.
சுமார் அய்ந்து மிளகை எடுத்து பொடி செய்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் சேர்த்து இரவு படுக்கும் முன் உண்ணவும்.
சுமார் அய்ந்து மிளகை பொடித்து, ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக சுண்டிய பின், வடிகட்டி சுவைக்காக சிறிது தேன் சேர்த்து பருகவும்.
இரண்டு அல்லது மூன்று மிளகை வாயில் போட்டு மெல்லவும்.
4) வெந்தயம்
வெந்தயம் antibacterial தன்மை கொண்டது. அது நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றுவதன் மூலம் இருமலை சரி செய்கிறது.
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
5) இஞ்சி
இஞ்சியின் antiviral தன்மைகள் வைரல் தொற்றுகளால் ஏற்படும் இருமலைப் போக்குகிறது. இஞ்சியில் இருக்கும் gingerol, நாசிப் பாதையிலிருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது.
சுமார் ஒரு அங்குலம் அளவு இஞ்சியை எடுத்து நன்றாகக் கழுவி தோல் சீவி சற்றே நசுக்கவும். அதை ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பருகவும்.
6) பூண்டு
பூண்டில் இருக்கும் antibacterial மற்றும் antimicrobial தன்மைகள் இருமலைப் போக்க உதவுகிறது.
நான்கு அல்லது அய்ந்து பூண்டு பற்களை நசுக்கி ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இலவங்க எண்ணெய் சேர்த்து கலக்கிக் குடிக்கவும்.
7) வெங்காயம்
வெங்காயம் antibacterial மற்றும் antifungal தன்மைகள் கொண்டதால் இருமலிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. வெங்காயத்தின் சாறு சளியை இளக்கி வெளியேற்றி இருமலைப் போக்கும்.
1 தேக்கரண்டி வெங்காயச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாகக் கலக்கி பருகவும்.
8) எலுமிச்சை
எலுமிச்சை தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களைப் போக்க வல்லது. அதிலிருக்கும் vitaimin C, தொற்றுகளைப் போக்குவதோடு நோய் எதிர்க்கும் ஆற்றலையும் வளர்க்கிறது.
ஒரு எலுமிச்சைப் பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துப் பருகவும்.
இருமலைப் போக்கும் Essential எண்ணெய்கள்
இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கும் essential எண்ணெய்கள் சிலவற்றைப் பார்க்கலாம்:
1) Eucalyptus Essential Oil
2) Thyme Essential Oil
3) Peppermint Essential Oil
4) Lavender Essential Oil
5) Cinnamon Essential Oil
6) Geranium Essential Oil
6) Rosemary Essential Oil
7) Tea Tree Essential Oil
8) Frankincense Essential Oil
Essential எண்ணெய்களைப் பின்வருமாறு பயன்படுத்தலாம்:
1) வெந்நீரில் 2 அல்லது 3 துளிகள் எசன்சியல் எண்ணெய் சேர்த்து ஆவி பிடிக்கவும்.
2) Diffuser-ல் 2 முதல் 5 துளிகள் எசன்சியல் எண்ணெய் சேர்த்து நீங்கள் இருக்கும் அறையில் காற்றில் பரவச் செய்யலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.