நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பல்வேறு அருமையான கலைகளில் ஒன்று முத்திரைக் கலை. உலகளவில் பல்வேறு கலாச்சாரங்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயின்று வரப்படும் முத்திரைகளில் நுரையீரல்களைப் பலப்படுத்தும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். அதற்கான தேவையும் இக்காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது.
நுரையீரல்களைப் பலப்படுத்தும் பிராணாயாம வகைகள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைப் போக்கி நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரைகளின் ஆற்றல் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா பிரச்சினை உள்ள 50 பேர்கள் கலந்து கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் 30 நிமிட முத்திரைப் பயிற்சியின் முடிவிலேயே நுரையீரலின் செயல்பாடு மேம்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் விரல் நுனி ஒவ்வொன்றிலும் மூவாயிரத்திற்கும் அதிகமான தொடு உணர்வு ஏற்பிகள் (touch receptors) உள்ளன. இவை மெல்லிய அழுத்தத்தின் மூலம் தூண்டப் பெறுகின்றன. கை மூளையின் பல பகுதிகளோடு தொடர்பு கொண்டது. தொடு உணர்வு ஏற்பிகள் மெல்லிய அழுத்தத்தால் தூண்டப்படும் போது மூளையின் குறிப்பிட்ட பகுதிகளின் செயல்பாடுகளைத் தூண்டி உடல், மன நலத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆகையினால் பிணிகளுக்கான சிறந்த தீர்வாக குறிப்பிட்ட முத்திரைகள் திகழ்கின்றன.
நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
Deals and Coupons – Additional 5% Off
நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரைகள்
சாதாரண சளி முதல் ஆஸ்துமா உள்ளிட்ட தீவிர மூச்சுப் பிரச்சினைகள் வரை அனைத்து நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரை வகைகளைத் தொடர்ந்து பயின்று வரவும்.
1) சுவாசகோச முத்திரை (Bronchial Mudra)
தீவிர ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைப் போக்க சுவாசகோச முத்திரை உதவுவதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
செய்முறை
சுவாசகோச முத்திரையைச் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்:
- பதுமாசனம் அல்லது சுகாசனம் போன்ற தியான ஆசனத்தில் அமரவும்.
- இரண்டு கைகளின் விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும்.
- சிறுவிரலைப் பெருவிரலின் அடிப்பாகத்தில் வைக்கவும்.
- மோதிர விரலைப் பெருவிரலின் முதல் கோட்டின் மேல் வைக்கவும்.
- நடு விரல் மற்றும் பெருவிரல் நுனிகளை ஒன்றாகச் சேர்த்து மெலிதான அழுத்தம் கொடுக்கவும்.
- 45 நிமிடங்கள் இம்முத்திரையில் இருக்கவும். அல்லது வேளைக்கு 15 நிமிடம் என மூன்று வேளைகள் இம்முத்திரையில் இருக்கவும்.
2) அஞ்சலி முத்திரை
அஞ்சலி முத்திரை ஆழ்ந்த சுவாசம் பெற உதவுகிறது.
செய்முறை
- பதுமாசனம், சுகாசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும்.
- இரண்டு உள்ளங்கைகளையும் அனாகத சக்கரத்தின் இருப்பிடமான மார்புப் பகுதிக்கு நேராகக் கொண்டு வந்து ‘வணக்கம்’ சொல்வது போல் சேர்த்து வைக்கவும்.
- இரண்டு கை முட்டிகளும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
- அரை மணி நேரம் வரை அஞ்சலி முத்திரையில் இருக்கவும்.
3) ஆஸ்துமா முத்திரை
ஆஸ்துமா முத்திரை சுவாசத்தைச் சீராக்குகிறது. மூச்சுத் திணறலைப் போக்கவும் தவிர்க்கவும் இம்முத்திரை உதவுகிறது.
செய்முறை
- இரண்டு கைகளின் நடுவிரல்களின் நகங்களை ஒன்றாக வைக்கவும்.
- உள்ளங்கைகளின் அடிப்பகுதிகளை ஒன்றாக வைத்து மற்றைய விரல்களை ஒன்றோடு ஒன்று சேர்க்காமல் வைக்கவும்.
- 30 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.
4) லிங்க முத்திரை
லிங்க முத்திரை நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
செய்முறை
- பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- இரண்டு உள்ளங்கைகளையும் மார்புக்கு நேராக வணக்கம் சொல்வது போல் சேர்த்து வைக்கவும். இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைக்கவும்.
- இடது கை பெருவிரலை மட்டும் உயர்த்தி வலது கை பெருவிரல் மற்றும் சுட்டும் விரலாலே அதைச் சுற்றிப் பிடிக்கவும்.
- கண்களை மூடியவாறு முத்திரையில் கவனம் வைக்கவும்.
- 30 நிமிடங்களுக்கு இம்முத்திரையில் இருக்கவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரைகளைத் தொடர்ந்து பயின்று வர மூச்சுக் கோளாறுகள் தீருவதோடு இயற்கையான முறையில் உடல், மன நலத்தையும் பாதுகாக்கலாம்.
சில சிறப்புச் சலுகைகள் – 28.02.2022 வரை
Thermals, Henleys, & Track Pants 40% தள்ளுபடி விலையில் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
Rs. 999 அல்லது அதற்கு மேல் வாங்குபவர்களுக்கு மேலும் 10% கூடுதல் தள்ளுபடி என்கிற சிறப்புச் சலுகையைப் பெற இந்தப் பக்கத்திற்குச் செல்லவும் – Coupon Code: CX10.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.