உடல் மன ஆரோக்கியம்

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள்

பொதுவாக, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மத்திய நரம்பு மண்டல பிரச்சினை என தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் முத்திரை பயிற்சிகள் மூலமாகத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.  முந்தைய பதிவு ஒன்றில் அய்ந்து விரல்களும் அய்ந்து மூலகங்களோடு தொடர்பு கொண்டது என்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். இன்று மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். 

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள்

முத்திரைகளில் சில, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மன அழுத்தம் , ஆகியவற்றைப் போக்கவும் நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தவும் உதவுகின்றன. இயற்கை முறையில் தலைவலியைப் போக்கும் இம்முத்திரைகளை தினசரி பயின்று நாள்பட்ட தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

1) அபானவாயு முத்திரை 
செய்முறை
  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  • சுட்டும் விரலை மடக்கி கட்டை விரலின் கீழ் வைக்கவும்.
  • இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் நுனிகளையும் கட்டை விரல் நுனியையும் ஒன்றாக வைக்கவும்.
  • சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும். 
  •  ஒரு நாளில் அரை மணி நேரம் இம்முத்திரையைப் பயிலவும். வேளைக்கு 15 நிமிடம் என காலை மற்றும் மாலையில் இம்முத்திரையைப் பழகலாம்.  
2) ஆகாய முத்திரை

செய்முறை
  • பத்மாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  • நடு விரலின் நுனியையும் பெருவிரலின் நுனியையும் ஒன்றாக சேர்க்கவும். லேசாகத் தொட்டுக் கொண்டிருந்தால் போதுமானது.
  • மீதி விரல்களை நீட்டியவாறு வைக்கவும்.
  • கண்களை மூடிக் கொண்டு முத்திரையில் கவனம் செலுத்தவும்.
  • சீராக மூச்சு விடவும்.
3) குபேர முத்திரை

செய்முறை
  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். 
  • மோதிர விரல் மற்றும் சிறு விரலை மடக்கி உள்ளங்கையில் வைக்கவும்.
  • சுட்டும் விரல் மற்றும் நடுவிரல் நுனிகளை கட்டை விரல் நுனியோடு சேர்க்கவும். 
  • காலை மற்றும் மாலையில் வேளைக்குப் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யவும். 
4) சின் முத்திரை
செய்முறை
  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
  • சுட்டும் விரல் மற்றும் கட்டை விரல் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும். 
  • மற்ற மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும். 
  • 10 முதல் 15 நிமிடங்கள் வரை சின் முத்திரையில் இருக்கவும். 
5) மகாசிரச முத்திரை

செய்முறை
  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். 
  • சுட்டு விரல், நடு விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
  • மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடியில் வைக்கவும்.
  • சிறு விரலை நீட்டியவாறு வைக்கவும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைவலியைப் போக்கும் முத்திரைகள் அய்ந்தையும் தொடர்ந்து செய்து வர நாள்பட்ட தலைவலி நீங்கும். 

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

பிராண முத்திரை

முத்திரைப் பயிற்சிகளில் மிக முக்கியமானவற்றில் ஒன்று பிராண முத்திரை. பிராண முத்திரையைப் பயில்வதன் மூலம் உடல், மன நலத்திற்கு இன்றியமையாத பிராண சக்தி, உடலில் சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய முடியும். பிராண

Read More »

தூய்மைப்படுத்தும் முத்திரை

முத்திரைப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை தூய்மைப்படுத்தும் முத்திரையாகும். இம்முத்திரையை ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை தினமும் 15 முதல் 45 நிமிடங்களுக்கு பழகி வர வேண்டும். ஒரு

Read More »

சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள்

முத்திரைகளின் பலன்கள் குறித்து நாம் இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருக்கிறோம். முத்திரை குறித்த கேள்வி பதில் பகுதியையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்று நாம் சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள் பற்றி

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்