உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (93) – பத்ம ஹலாசனம் (Lotus in Plough Pose)

இன்று ஒரு ஆசனம் பகுதியில் பத்ம ஹலாசனம் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அதாவது, ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவ்வாசனம் Lotus in Plough Pose என்று அழைக்கப்படுகிறது.

பத்ம ஹலாசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி,  ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இச்சக்கரங்கள் தூண்டப்படுவதால் ஏற்படும் பொதுவான நன்மைகள் பற்றி நீங்கள் முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். இச்சக்கரம் ஒவ்வொன்றின் சீராக இயக்கத்தால் ஏற்படும் விரிவான பலன்களை விரைவில் பார்க்கலாம்.

பத்ம ஹலாசனத்தின் பலன்கள்
  • முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கிறது
  • முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
  • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
  • தொப்பையைக் கரைக்கிறது
  • இடுப்பு மற்றும் தொடையிலுள்ள அதிக சதையைக் கரைக்கிறது
  • வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • குழந்தையின்மை பிரச்சினையைப் போக்க உதவுகிறது
  • கால் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு பலப்படுத்தவும் செய்கிறது
  • கழிவுகளை வெளியேற்றுகிறது
  • அசதியைப் போக்குகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • மன அமைதியை வளர்க்கிறது
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைக்கவும்.
  • சர்வாங்காசன நிலைக்கு வரவும். அதாவது, மூச்சை வெளியேற்றியவாறு கால்களை மேல் நோக்கி உயர்த்தவும். புட்டத்தை உள்ளங்கைகளால் தாங்கியவாறு கழுத்திலிருந்து கால்வரை ஒரே நேர்க்கோட்டில் இடுப்புக்கு நேராக நிறுத்தவும். இது சர்வாங்காசன நிலை. மூச்சை உள்ளிழுக்கவும்.
  • கால்களை ஒன்றன் பின் ஒன்றாக பத்மாசன நிலையில் இருப்பது போல் மடக்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு கால்களை முகத்தை நோக்கிக் கொண்டு வரவும். கால் முட்டிகளை முகத்தில் வைக்கவும்.
  • 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின் கால்களை நிமிர்த்தி, பத்மாசன நிலையிலிருந்து வெளி வந்து தரையில் ஆரம்ப நிலையில் இருந்தது போல் படுக்கவும்.
குறிப்பு

கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். தீவிர மூட்டுப் பிரச்சினை உள்ளவர்களும் பத்ம ஹலாசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (94) – மத்ஸ்யாசனம் (Fish Pose)

சர்வாங்காசனம், ஹலாசனம், சுப்த கோணாசனம் மற்றும் பத்ம ஹலாசனம் ஆகிய ஆசனங்களில் நாம் பின்னால் வளைந்தாலும் நம் முதுகு முன்புறம் வளைந்த நிலையில்தான் இருக்கும். ஆக, இவ்வாசனங்களுக்கு மாற்றாக நாம் செய்ய வேண்டியது மத்ஸ்யாசனம்.

Read More »

இன்று ஒரு ஆசனம் (92) – சுப்த கோணாசனம் (Reclining Angle Pose)

இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை

Read More »

இன்று ஒரு ஆசனம் (91) – ஹலாசனம் (Plough Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் அர்த்த ஹலாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஹலாசனம். ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது.

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்