உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (86) – சலபாசனம் (Locust Pose / Grasshopper Pose)

குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்களில் ஒன்றான சலபாசனம் அற்புதமான பலன்களைத் தரக்கூடியதாகும். வடமொழியில் ‘சலப’ என்றால் ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். இது ஆங்கிலத்தில் Locust Pose மற்றும் Grasshopper Pose என்றும் அழைக்கப்படுகிறது.

சலபாசனம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. இதன் காரணமாக தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவை வளர்கிறது. பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறனும் வளர்கிறது.

சலபாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
  • முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • கழுத்து முதல் கால் வரை பின் உடல் முழுவதையும் பலப்படுத்துகிறது
  • தோள் மற்றும் மார்புப் பகுதியை விரிக்கிறது
  • நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • தோற்றப்பாங்கை (posture) சரி செய்கிறது
  • வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் செம்மையாக்குகிறது
  • கால்களை நீட்சியடையச் செய்கிறது
  • கால் தசைகளை உறுதியாக்குகிறது; முட்டியை வலுப்படுத்துகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டியபடி குப்புறப்படுக்கவும். கைகள் உடம்பிற்கு அருகிலும் முகவாய் தரையிலும் இருக்க வேண்டும்.
  • மெதுவாக தலை, தோள் மற்றும் கால்களைத் தரையிலிருந்து உயர்த்தவும்.
  • கைகளையும் தரையிலிருந்து உயர்த்தவும்.
  • நேராகப் பார்க்கவும்.
  • 20 வினாடிகள் இந்நிலையில் இருந்த பின் உடலைத் தளர்த்தி ஆரம்ப நிலைக்கு வரவும்.
குறிப்பு

கீழுள்ள படத்தில் உள்ளபடி ஆரம்பப் பயிற்சியாளர்கள் முகவாயைத் தரையில் வைத்து கைவிரல்களை மடித்து உள்ளங்கைகளைத் தொடைக்கு அடியில் வைக்கலாம்.

கால்களை உயர்த்துவது கடினமாக இருந்தால் yoga block அல்லது மடித்த கம்பளம் ஒன்றை தொடைக்கு அடியில் வைத்துப் பழகவும்.

கழுத்து அல்லது முதுகில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் சலபாசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (87) – மகராசனம் (Crocodile Pose)

குப்புறப் படுத்த நிலையில் ஓய்வாசனம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆம், இன்று நாம் பார்க்கப் போகும் மகராசனம் குப்புறப் படுத்த நிலையில் உடலுக்கு ஓய்வு தருவதுதான். வடமொழியில் ‘மகர’ என்பது முதலையைக் குறிக்கும்

Read More »

இன்று ஒரு ஆசனம் (85) – சுப்த பாதாங்குஸ்தாசனம் (Reclining Hand-to-Big Toe Pose)

நம் முந்தைய பதிவுகளில் பாதாங்குஸ்தாசனம் மற்றும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த பாதாங்குஸ்தாசனம். வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால்

Read More »

இன்று ஒரு ஆசனம் (84) – அர்த்த ஹலாசனம் (Half Plough Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்