உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (34) – சிங்காசனம் / சிம்ஹாசனம் (Lion Pose)

‘சிம்ஹ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை எலும்பிலிருந்து தாடை வரை இருக்கும் தசைகளை உறுதியாக்குகிறது. மூலாதாரம், ஜாலந்தரம் மற்றும் உட்டியாண பந்தங்களின் இயக்கத்தை செம்மையாக்கி உடம்பில் பிராண சக்தி ஓட்டத்தை சீர்ப்படுத்துகிற்து.

Lion Pose benefits

Lion Pose variation

சிங்காசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது.
  • நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கிறது.
  • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.
  • நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது.
  • கண் பார்வையை கூர்மையாக்குகிறது.
  • முகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • திக்கு வாய் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.
  • முதுகு வலியை போக்க உதவுகிறது.
  • தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
செய்முறை
  • வஜ்ஜிராசனத்தில் அமரவும். வஜ்ஜிராசனம் செய்முறையை பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
  • கால் முட்டியை விரித்து, உடலை சற்று முன்னால் சாய்த்து இரண்டு உள்ளங்கைகளையும் கால்களுக்கு இடையிலான இடைவெளியில் விரல்கள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.
  • முதுகை வளைத்து தலையை சற்று மேல் நோக்கி உயர்த்தவும்.
  • உங்கள் புருவ மத்தியை பார்க்கவும்.
  • மெதுவாக ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியே விடும் போது வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டவும். மூச்சை வெளியேற்றும் போது, தொண்டையிலிருந்து ‘ஆஆஹ்’ என ஒலி எழுப்பவும்.
  • மூச்சை வெளியேற்றிய பின் வாயை மூடி சாதாரண மூச்சில் இருக்கவும்.
  • இது போல் 5 முறை செய்யவும்.
குறிப்பு

சிங்காசனத்தை பத்மாசனம் முறையில் கால்களை மடக்கி, உள்ளங்கைகளை விரல்கள் முன்புறம் பார்க்குமாறு வைத்து, உடலை முன்புறமாக கால் முட்டி தரையில் இருக்கும் வண்ணம் சாய்த்தும் செய்யலாம்.

கால் முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். மணிக்கட்டு பிரச்சினை உள்ளவர்கள் கைகளை கீழே வைக்காமல் வஜ்ராசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை பயிலலாம்.

புருவ மத்தியை பார்க்கும்போது தலை சுற்றுவது போல் இருந்தால் நேராக பார்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (35) – துலாசனம் (Scale Pose / Elevated Lotus Pose)

‘துலா’ என்ற வடமொழி சொல்லுக்கும் ‘தராசு’ என்று பொருள். இங்கு தராசு என்பது சமநிலை என்பதை குறிப்பதாக உள்ளது; அதாவது, துலாசனத்தில் உடலை சமநிலையில் கைகளால் தாங்குவதால் இந்த ஆசனம் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (33) – பத்ராசனம் (Auspicious Pose / Gracious Pose)

‘பத்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘புனிதமான’ என்றும் ‘கருணையுள்ள’ என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம். பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை

Read More »

இன்று ஒரு ஆசனம் (32) – நவாசனம் (Boat Pose)

‘நவ’ என்றல் வடமொழியில் ‘படகு’ என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்ப்தல் படகாசனம் ஆகிறது. தண்ணீரில் படகு தனது சமநிலை மாறாமல் எப்படி செல்கிறதோ அது போல உடலின் சமநிலையை

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்