உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (95) – விபரீதகரணீ (Legs Up the Wall Pose)

ஆசனங்களின் அரசன் என அழைக்கப்படும் சிரசாசனம் மற்றும் ஆசனங்களின் அரசி என்று அழைக்கப்படும் சர்வாங்காசனம் ஆகியவற்றைப் பயில முடியாதவர்கள் விபரீதகரணியைப் பயில்வதன் மூலம் மேற்கண்ட ஆசனங்களின் பலன்களின் பெரும்பாலானவற்றை அடையலாம். இவ்வாசன நிலையை மிக எளிதாக அனைவரும் செய்யும் முறை கீழே குறிப்புப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

(சர்வாங்காசனம் செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்).

வடமொழியில் ‘விபரீத’ என்றால் ‘தலைகீழ்’ என்றும் ‘கரணீ’ என்றால் ‘செய்தல்’ என்றும் பொருள். இவ்வாசனம் ஆங்கிலத்தில் Legs Up the Wall Pose என்று அழைக்கப்படுகிறது.

உடல் நலத்தை மீட்டெடுக்கும் முக்கியமான ஆசனங்களில் விபரீதகரணீயும் ஒன்று. விபரீதகரணீ பயில்வதால் மணிப்பூரகம், விசுத்தி, குரு, ஆக்ஞா, சஹஸ்ராரம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்படுகின்றன.  தலைப்பகுதியில் உள்ள சக்கரங்கள் ஞானம் மற்றும் உள்ளுணர்ந்து அறியும் திறன் ஆகியவற்றின் மையமாக விளங்குகின்றன. பிரபஞ்ச ஆற்றலோடு நமக்கு உள்ள தொடர்பை உணர்ந்து அனுபவிக்கும் நிலை உருவாகிறது.

விபரீதகரணீயின் மேலும் சில நன்மைகள்
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
  • இருதய நலனைப் பாதுகாக்கிறது
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது
  • தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை சீராக்குகிறது
  • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
  • சீரண மண்டலத்தின் இயக்கத்தை செம்மையாக்குகிறது
  • இடுப்பு மற்றும் முதுகை உறுதியாக்குகிறது
  • இடுப்பில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது
  • கழுத்து மற்றும் முதுகுவலியைப் போக்க உதவுகிறது
  • உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது
  • மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் வலிகளைத் தவிர்க்க உதவுகிறது
  • மறு உற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது
  • உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது
  • கால் வலியைப் போக்குகிறது
  • கணுக்கால் வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது
  • வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது
  • இளமையான தோற்றத்தைத் தருகிறது; முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்குகிறது
  • தலைவலியைப் போக்க உதவுகிறது
  • கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது
  • செவித் திறனை மேம்படுத்துகிறது
  • தூக்கமின்மையைப் போக்குகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • மன அமைதியை வளர்க்கிறது
விபரீதகரணீ செய்யும் முறை
  • விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகளை உடலின் அருகில் தரையில் வைக்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு கால்களை அர்த்த ஹலாசனத்தில் உயர்த்துவது போல் உயர்த்தவும்.
  • கால்களைத் தலையை நோக்கி சாய்க்கவும்.
  • இடுப்பின் அடியில் உள்ளங்கைகளை வைத்துத் தரையிலிருந்து உயர்த்தவும்.
  • இடுப்பு தரையிலிருந்து சுமார் 45 முதல் 60 degree கோணத்திலும் கால்கள் நேர் மேலாகவோ சற்று சாய்வாகவோ இருக்க வேண்டும்.
  • கால் பெருவிரல்களைப் பார்க்கவும். மாறாக, கண்களை மூடியும் பயிலலாம்.
  • துவக்கத்தில் விபரீதகரணீயில் ஒரு நிமிடம் இருக்கவும். மிக மெதுவாக நேரத்தை அதிகரித்து 20 நிமிடங்கள் வரை இவ்வாசனத்தில் இருக்கலாம்.
  • ஆசனத்திலிருந்து வெளி வர இடுப்பைத் தரையில் வைத்துப் பின் கால்களைத் தாழ்த்தி சாதாரண நிலையில் தரையில் படுக்கவும்.
  • ஓய்வாசனத்தில் சிறிது நேரம் இருக்கவும்.
குறிப்பு

இடுப்பைத் தாங்கி இந்நிலையில் தொடர்ந்து நீடிப்பது சிரமம் என்பதால் yoga block அல்லது இரண்டு தலையணைகளைத் தரையில் வைத்து அதன் மேல் அமர்ந்து பின்னால் சாயவும். கால்களை உயர்த்த உதவியாக சுவற்றின் மீது கால்களை சாய்த்துப் பயிலலாம்.

கண் அழுத்த நோய் உள்ளிட்ட தீவிர கண் பிரச்சினைகள், தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள் மற்றும் தீவிர இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் விபரீதகரணீ பயில்வதைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (96) – இராஜ புஜங்காசனம் (King Cobra Pose)

இதற்கு முன்னர் நாம் புஜங்காசனம் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம் போன்றதொரு சவாலான ஆசனமான இராஜ புஜங்காசனம் ஆகும். வடமொழியில் ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’ என்று

Read More »

இன்று ஒரு ஆசனம் (94) – மத்ஸ்யாசனம் (Fish Pose)

சர்வாங்காசனம், ஹலாசனம், சுப்த கோணாசனம் மற்றும் பத்ம ஹலாசனம் ஆகிய ஆசனங்களில் நாம் பின்னால் வளைந்தாலும் நம் முதுகு முன்புறம் வளைந்த நிலையில்தான் இருக்கும். ஆக, இவ்வாசனங்களுக்கு மாற்றாக நாம் செய்ய வேண்டியது மத்ஸ்யாசனம்.

Read More »

இன்று ஒரு ஆசனம் (93) – பத்ம ஹலாசனம் (Lotus in Plough Pose)

இன்று ஒரு ஆசனம் பகுதியில் பத்ம ஹலாசனம் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அதாவது, ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவ்வாசனம் Lotus in Plough Pose என்று அழைக்கப்படுகிறது.

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்