உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (69) –அஷ்ட சந்திராசனம் (High Lunge Pose / Crescent High Lunge Pose)

வடமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்று பொருள்; ‘சந்திர’ என்பது சந்திரனைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் High Lunge Pose என்றும் Crescent High Lunge Pose என்றும் அழைக்கப்படுகிறது.

அஷ்ட சந்திராசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது, சுவாதிட்டானம் படைப்பாற்றலை வளர்க்கிறது. அஷ்ட சந்திராசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது தன்மதிப்பு வளர்வதோடு மனநலமும் வளர்கிறது.

அஷ்ட சந்திராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
  • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
  • இருதய நலனைப் பாதுகாக்கிறது
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • உடலின் நெகிழ்வுத்தன்மையை வளர்க்கிறது
  • உடல் ஆற்றலை வளர்க்கிறது
  • மூட்டுகளை பலப்படுத்துகிறது
  • கால்களை உறுதியாக்குகிறது
செய்முறை
  • விரிப்பில் நிற்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு வலது காலை 3 முதல் 4 அடி பின்னால் வைக்கவும். கால் விரல்கள் தரையில் இருக்க வேண்டும்.
  • இடது காலை மடக்கவும்; இடது முட்டியும் இடது பாதமும் நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு வைக்கவும்.
  • நேராகப் பார்க்கவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் ஆரம்ப நிலைக்கு வரவும். பின் இடது காலைப் பின்னால் வைத்து பயிலவும்.
குறிப்பு

இடுப்பு மற்றும் முட்டியில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (70) –அஷ்வ சஞ்சாலனாசனம் (Equestrian Pose)

அஷ்வ சஞ்சாலனாசனம் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்தும் பயின்றும் கொண்டிருந்திருப்பீர்கள், அதாவது சூரிய வணக்கத்தை பயின்று கொண்டிருந்தால். இவ்வாசனம் சூரிய வணக்கத்தின் நான்கு மற்றும் ஒன்பதாவது நிலையில் செய்யப்படுவதாகும். வடமொழியில் ‘அஷ்வ’ என்றால் ‘குதிரை’,

Read More »

இன்று ஒரு ஆசனம் (68) –ஆஞ்சநேயாசனம் (Low Lunge Pose / Crescent Moon Pose)

புராணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை ஒட்டி அழைக்கப்படும் ஆஞ்சநேயாசனம், ஆங்கிலத்தில் Low Lunge Pose மற்றும் Crescent Moon Pose என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள்

Read More »

இன்று ஒரு ஆசனம் (67) – ஊர்த்துவ தனுராசனம் (Upward Bow Pose)

ஊர்த்துவ தனுராசனத்தை சக்ராசனம் என்றும் அழைப்பர். ஆனால், சக்ராசனத்தில் முழுமையான சக்கர வடிவில் கால்களின் அருகே கைகள் இருக்கும். ஊர்த்துவ தனுராசனத்தில் கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். வடமொழியில் ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்