உடல் மன ஆரோக்கியம்

மஞ்சள் பலன்கள் மற்றும் மஞ்சள் உணவுகள்

Table of Contents

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான மஞ்சளுக்கு இப்போது உலகளவில் மவுசு அதிகமாகியிருக்கிறது. தமிழரின் சமையலில் மஞ்சளுக்கு என்றுமே முக்கிய இடம் இருந்திருக்கிறது. பருப்பை வேக வைக்க, காயில் உள்ள கிருமியை போக்க ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போடுவது தன்னிச்சையான ஒன்று. ஆனால், நாலு மாதம் முன்பு வரை சமையலறையை எட்டிப் பார்க்காத, பருப்பு இருக்கா, எண்ணெய் இருக்கா என்று கேட்கவே செய்யாத பெரும்பாலான ஆண்கள், மஞ்சள் இருக்கா என்று உறுதிப்படுத்திக் கொள்வதை காலத்தின் கோலம் என்று சொல்வதா கொரோனா காலம் என்று சொல்வதா?

நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்திய மூலிகை வகைகளில் முக்கியமான ஒன்று மஞ்சள். பழங்கால சித்த மருத்துவ குறிப்பேடுகளில் மஞ்சளின் பயன்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது. மஞ்சள், நோய் தீர்க்க,  உணவைப் பதப்படுத்த, மேனி அழகை பராமரிக்க என பல வகைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க, மஞ்சள் கலந்த நீர், மஞ்சள் சேர்த்த பால் என்று பலரும் குடித்து தள்ளுகிறோம்.

மஞ்சளின் தன்மைகள்

மஞ்சளில் நூற்றுக்கும் அதிகமான கூறுகள் (compounds) இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதான curcumin-தான் மஞ்சளின் பெரும்பாலான மருத்துவ குணங்களின் பின்னிருக்கும் காரணியாகும். மஞ்சளின் தன்மைகளில் சில:

  • Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
  • Antimicrobial (bacterial, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antioxidant (Cells, protein மற்றும் DNA-க்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
  • Anticancer (புற்று நோய் ஏற்படுவதைத் தடுத்தல்)
  • Antimutagen (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-வில் ஏற்படும் மாற்றத்தைத் தடுத்தல்)

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

மஞ்சளின் மருத்துவ குணங்களில் சில:

  • சளி, இருமலை போக்க உதவுகிறது.
  • ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
  • சீரணத்தை பலப்படுத்துகிறது.
  • வலி, வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.
  • இருதயத்தைப் பலப்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.
  • உடற்பயிற்சிக்கு பின் தசைகளில் ஏற்படக் கூடிய வலியை போக்க உதவுகிறது.
  • காயங்களை ஆற்ற உதவுகிறது.
  • அதிக கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
  • மூளையின் திறனை ஊக்குவிக்கிறது.
  • புற்று நோய் உண்டாவதைத் தடுக்கிறது.
  • மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலியை போக்க உதவுகிறது.
  • மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவற்றை போக்க உதவுகிறது.
  • சரும நோய்களை போக்க உதவுகிறது.
  • மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

மஞ்சளும் எழிலான தோற்றமும்

மஞ்சள் பூசிக் குளிப்பது பெண்களுக்கானது என்று எழுதப்படாத விதி இருப்பதால், இழப்பு ஆண்களுக்குத்தான். மஞ்சள் என்பது ஒரு மூலிகை, அது தரும் பலன்கள் அனைவருக்கும் உண்டானதுதான். முகப் பொலிவை கூட்ட, சரும நோயிலிருந்து விடுபட என எழிலான, நலமான தோற்றத்தை மஞ்சள் தருகிறது. சரும நலனில் மஞ்சளின் பங்கு என்ன என்று பார்ப்போம்:

  • சருமத்திற்கு பொலிவூட்டுகிறது.
  • இளமையான தோற்றம் பெற உதவுகிறது.
  • கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களை போக்குகிறது.
  • சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்குகிறது.
  • சூரிய கதிர் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

மஞ்சள் உணவுகள்

சமையலறையின் முடிசூடா ராணியான மஞ்சளைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில எளிய உணவு வகைகளைப் பார்க்கலாம்.

மஞ்சள் சோறு

Turmeric Rice

இதை ஒரு முறை சுவைத்துப் பார்த்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.

தேவையான பொருட்கள்

வடித்த சோறு – 1/2 cup

மஞ்சள் தூள் – 1 teaspoon

வெங்காயம், பெரியது – 1

சீரகம் – 1/4 teaspoon

ஏலக்காய் – 1

இலவங்கம் – 1

நெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்துமல்லி – சிறிதளவு

செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

https://www.whiskaffair.com/turmeric-rice-recipe/

முந்திரி, வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து சத்தையும் சுவையையும் கூட்டலாம். தேவையென்றால் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள் தேநீர்

மஞ்சளைத் தேநீராகத் தயாரித்து பருகுவதன் மூலம் மஞ்சளின் பயன்களை முழுமையாக அடையலாம். மஞ்சள் தேநீர், இயற்கை அங்காடிகளிலும், இணையதள வர்த்தக நிறுவனங்களிலும் கிடைக்கிறது.

மஞ்சள் தேநீர் செய்முறை
  • 2 கோப்பை தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றவும்.
  • அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் சில நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
  • தண்ணீர் சிறிது சுண்டியதும், அடுப்பை அணைத்து, தேநீரை வடிகட்டவும்.
  • தேவைப்பட்டால், சுவையை கூட்ட, தேன் அல்லது சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து பருகலாம்.

மஞ்சள் தேநீரின் பலன்கள்

  • நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
  • இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
  • மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை போக்க உதவுகிறது.
  • புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.
  • மூளையின் திறனை வளர்க்கிறது.
  • மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

Cuban Oregano

கற்பூரவல்லியின் பலன்கள்

துளசிச் செடிக்கு அடுத்தப்படியாக வீட்டுத் தோட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி. கைக்குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று கற்பூரவல்லி. குறைந்த பராமரிப்பில் அபரிமிதமாக

Read More »

இஞ்சியின் பலன்கள்

Table of Contents Photo Credit: P.R. from FreeImages நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உண்ட உணவு மற்றும் உணவு அருந்துவதில் பின்பற்றிய நடைமுறைகள், இயற்கையோடு ஒன்றி,

Read More »

துளசியின் பலன்கள் மற்றும் துளசி உணவுகள்

Table of Contents சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்