இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத போன விஷயங்களில் ஒன்று நீண்ட நேரம் அமர்ந்திருப்பது. பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு முன்பே துவங்கும் இந்த நீண்ட நேர உட்காருதல் வேலைக்குச் சென்ற பிறகும் தொடர்கிறது. அது ஏன் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பே என்று கூறுகிறோம்? ஏனெனில், சிறு குழந்தைகள் கைகளிலும் அலைபேசி தவழுவதை காண்கிறோம். தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து பார்க்கும் போது கூட விளையாட எழுந்து செல்வார்கள் போலிருக்கிறது, அலைபேசியைக் கையில் கொடுத்து விட்டால் எதற்கும் அசைய மாட்டேன் என்கிறார்கள். இந்த விஷயத்தில் கண்டிப்பு காட்டி அதில் வெற்றியும் பெறும் பெற்றோர்கள் உண்டு.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பலவற்றால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதற்கான அடித்தளம் அவர்களின் குழந்தைப் பருவத்தில்தான் தொடங்குகிறது. போதாததற்கு 24 மணி நேரமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை இருப்பதால், பெரியவர்கள் பலருமே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து விடுகிறார்கள், பார்ப்பது சினிமாவாக இருந்தாலும் செய்தியாய் இருந்தாலும்.
நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் தீமைகள்
தொடர்ந்து மணிக்கணக்காய் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்:
- உடல் எடை கூடுதல்
- தொப்பை பெருகுதல்
- கழுத்து வலி
- முதுகு வலி
- இரத்த அழுத்தம் கூடுதல்
- இரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபடுதல்
- உடலில் அதிக கொழுப்பு சேருதல்
- இருதய நலன் பாதிப்படைதல்
- நிற்கும், அமரும் நிலை மாறுதல்
- மூட்டுகளில் இறுக்கம் ஏற்படுதல்
- கணுக்கால் வீக்கம்
- விரிசுருள் சிரை (varicose veins)
- சிரை இரத்த உறைவு (Venous thromboembolism)
- கால் மற்றும் புட்ட தசைகள் வலுவிழத்தல்
- இடுப்புப் பகுதியில் இறுக்கம் ஏற்படுதல்
- மன அழுத்தம்
விடுமுறைக்காக சென்றிருக்கும் ஊர் ஒன்றில் ஒரு குன்றின் மீதோ அல்லது சரிவான பகுதியின் மீதோ ஏறி இறங்கும் போது நீண்ட நேரம் உட்காருவதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் தெளிவாகத் தெரியும்.
ஊட்டியின் பைன் மரங்கள் காடும் அப்படிப்பட்ட ஒரு சவாலைத்தான் தருகிறது.
எவ்வளவு நேரம் அமர்ந்தால் பிரச்சினைகள் உண்டாகும்?
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் சிரை இரத்த உறைவு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.
நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்வது நோய்களுக்கு வழி வகுக்கும் என்று பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன.
நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழலை எப்படிக் கையாள்வது?
உங்கள் வேலையின் தன்மை காரணமாக நீங்கள் நீண்ட நேரம் அமர வேண்டியிருந்தால், கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி உடல் நலத்தைப் பேணலாம்.
- அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இருக்கையிலிருந்து எழுந்து நடக்கவும். தேவையெனில் அலாரம் வைத்துக் கொள்ளலாம்.
- ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நின்று கொண்டு உடலை நீட்சியடையச் செய்யும் சிறு பயிற்சிகளைச் செய்யலாம். அதாவது, குனிந்து கால் விரல்களைத் தொடுவது, பக்கவாட்டில் வளைவது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
- தொலைபேசியில் பேச வேண்டியிருந்தால் எழுந்து நடந்தவாறு பேசவும்.
- வாய்ப்பிருந்தால் ஓரிரு முறையாவது இடையில் படிகளில் இறங்கி ஏறலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் தொடர்ந்து நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்திலிருந்தும் விடுபடலாம் என்று சில ஆய்வுகளும் அதற்கு எதிரான முடிவுகளை சில ஆய்வுகளும் அறிவிக்கின்றன. ஆனாலும் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதோடு இயல்பாகவே உடல், மன நலன் சார்ந்த அக்கறையின் காரணமாக தொடர்ந்து அமர வேண்டிய சூழலிலும் அவ்வப்போது எழுந்து நடப்பது போன்ற செயல்களில் இயல்பாகவே ஈடுபடுவார்கள். எனவே, உடற்பயிற்சிக்கென தினமும் நேரம் ஒதுக்குவது அவசியமாகிறது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளில் உங்களுக்கு வாய்ப்புள்ளவற்றைத் தொடர்ந்து செய்து வரலாம்:
- நடைப்பயிற்சி
- மெல்லோட்டப் பயிற்சி
- ஓட்டப்பயிற்சி
- மிதிவண்டி ஓட்டுதல்
- தாய்சீ
- யோகாசனம்
- ஏரோபிக் பயிற்சி
- பலாடீஸ் (pilates)
- நீச்சல்
- தற்காப்பு கலை பயிலுதல்
நடைப்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் குறித்து படிக்க இந்தப் பக்கத்திற்குச்செல்லவும்.
மிதிவண்டி ஓட்டுவதில் தீவிர விருப்பத்தோடு உள்ளவர்களுக்கு விடுமுறையை வேறொரு மண்ணில் மிதிவண்டி ஓட்ட கிடைக்கும் அற்புத வாய்ப்புகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

ஒரு வாரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்ததில் எனக்கு கிடைத்த நன்மைகள் என்ன?
பின்னோக்கி நடப்பதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி. 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி

எட்டு வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பலன்கள்
கொரோனா காலக்கட்டத்தில் மொட்டை மாடியைத் தன் வசமாக்கித் தினமொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ‘online class’ பிள்ளைகளுக்குப் போட்டியாக, ‘work from home’ பெற்றோர்களும் மொட்டை மாடியைப்

திறந்தவெளி நடைப்பயிற்சியை சுவாரசியமாக்குவது எப்படி?
நடைப்பயிற்சி செய்பவர்களில்தான் எத்தனை விதமானவர்கள்? நடைப்பயிற்சி செய்யும் முறைகளில்தான் எத்தனை வித்தியாசங்கள்? உண்மையில் நடைப்பயிற்சி நமது உடலுக்கு நலம் தருவதோடு அப்பொழுது நாம் காணும் காட்சிகளும் மனிதர்களும்