வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இன்றைய மூலிகைப் பக்கத்தில் பொதுவாகக் காணக்கூடிய புதினாவைப் பற்றிப் பார்க்கலாம். இது ஆங்கிலத்தில் peppermint என்று அழைக்கப்படுகிறது.
புதினாவின் தன்மைகள்
புதினாவில் 40%-க்கும் சற்று அதிகமாக உள்ள மென்தால் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். புதினாவின் தன்மைகளில் சில:
- Antibacterial (பாக்டீரியாவை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
- Antiviral (வைரஸை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Analgesic (வலியைக் குறைத்தல்)
- Antispasmodic (தசைப்பிடிப்புகளைப் போக்குதல் மற்றும் தவிர்த்தல்)
- Antipruritic (அரிப்பைப் போக்குதல்)
- Antiseptic (கிருமிகள் தாக்காமல் தடுத்தல்)
- Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Anaesthetic (வலியை உணர வைக்காதிருத்தல்)
- Antiulcer (அல்சர் ஏற்படாமல் தடுத்தல்)
- Expectorant (சளியை வெளியேற்றுதல்)
புதினாவின் மருத்துவ குணங்கள்
நம் சமையலில் பல பரிமாணங்கள் எடுக்கும் புதினாவின் மருத்துவ குணங்களில் சில:
- சளி, இருமலைப் போக்குகிறது
- அசீரணத்தைச் சரி செய்கிறது
- வாய்வு, உப்புசம் போன்ற அசீரணக் கோளாறுகளைச் சரி செய்கிறது
- வாந்தி மற்றும் வாந்தி ஏற்படும் உணர்வை சரி செய்கிறது
- மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் போக்குகிறது
- தலைவலியைப் போக்க உதவுகிறது
- பற்களின் நலனைப் பாதுகாக்க உதவுகிறது; பல் சொத்தையைப் போக்க உதவுகிறது
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வலியைப் போக்க புதினா எண்ணெய் உதவுகிறது
- சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைப் போக்குகிறது
- தசைப்பிடிப்பைப் போக்க உதவுகிறது
- நினைவாற்றலை அதிகரிக்கிறது
- மன அழுத்தத்தைப் போக்குகிறது
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.