உடல் மன ஆரோக்கியம்

அதிமதுரத்தின் அற்புத பலன்கள்

சிறு குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் தவறாது இடம் பெறும் முக்கிய மூலிகைகளில் ஒன்று அதிமதுரம். அதிஅற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த அதிமதுரம் பல்வேறு கலாச்சாரங்களால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நோய் பல தீர்க்கும் மருந்தாகவும் உணவின் சுவை கூட்டியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதிமதுரத்தின் பலன்கள் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளும் இந்த அற்புத மூலிகையின் திறன்களை நிரூபிக்க உதவுகின்றன.

அதிமதுரத்தின் தன்மைகள்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வரும் அதிமதுரத்தின் தன்மைகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு அதன் நோய் தீர்க்கும் குணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 

அதிமதுரத்தின் தன்மைகளுள் சில:

  • Antioxidant (cells, proteins மற்றும் DNA-வில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
  • Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
  • Antiviral (virus-ஐ அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Immunomodulatory (உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சீராக்குதல்)
  • Antiulcer (வயிற்றுப் புண்ணைப் போக்குதல் மற்றும் தவிர்த்தல்)
  • Anti-allergy (ஒவ்வாமையைப் போக்குதல்
  • Anticancer (புற்று நோய் ஏற்படாமல் தவிர்த்தல்)
  • Antidepressant (மன அழுத்தத்தைப் போக்குதல் மற்றும் தவிர்த்தல்)
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்
  • சளியைக் கரைக்கிறது.
  • ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைச் சரி செய்கிறது.
  • அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருந்தின் காரணமாக ஏற்படக் கூடிய தொண்டை வலியின் தீவிரத்தை வெகுவாகக் குறைக்க அதிமதுரம் பயன்படுவதாக ஆய்வு முடிவு அறிவிக்கிறது. மயக்க மருந்து கொடுப்பதற்கு முன் அதிமதுரப் பொடி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் நன்றாக வாய் கொப்பளிப்பது சிறந்த பலனைத் தருவதாக மேற்கூறப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது
  • மலச்சிக்கலைப் போக்குகிறது
  • அரிப்பு தோல் அழற்சி (eczema) உள்ளிட்ட சரும நோய்களைத் தீர்க்க உதவுகிறது
  • வயிற்றுப் புண்ணை ஆற்ற உதவுகிறது
  • மாதவிடாய் வலியைப் போக்குகிறது
  • மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்கவும் உதவுகிறது
  • தூக்கமின்மையைப் போக்குகிறது
  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைப் போக்க உதவுகிறது
  • புற்று நோயைத் தவிர்க்கும் ஆற்றல் அதிமதுரத்திற்கு உள்ளதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன
  • நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன
  • கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
  • ஒவ்வாமையைப் போக்க உதவுகிறது
  • தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
  • பல் சொத்தை, ஈறு கோளாறுகள் போன்ற பல் சம்பந்தமான நோய்களிலிருந்து நிவாரணம் அளிப்பதாக ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. மேலும் பல் புற்று நோய் தாக்கத்தைக் குறைக்கவும் அதிமதுரம் உதவக் கூடும் என்று ஆய்வு மூலம் தெரிய வருகிறது.
  • மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
herbal
அதிமதுரத்தைப் பயன்படுத்துவது எப்படி?

அதிமதுரத்தைக் கீழ்க்கண்ட முறைகளில் பயன்படுத்துவது சிறந்த பலன்களைத் தரும்.

சளி மற்றும் இருமலைப் போக்க: ஒரு கோப்பைத் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று அதிமதுரக் குச்சிகளைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயைச் சிறிதாக்கி ஓரிரு நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டிப் பருகவும். தேவையெனில் சிறிது தேன் சேர்த்து பருகலாம்.

அதிமதுரக் குச்சி ஒன்றை வாயில் மெல்லுவதும் நல்ல பலனைத் தரும்.

தொண்டை வலியைப் போக்க: மேற்கூறிய முறையில் தயாரிக்கப்படும் அதிமதுரம் கலந்த நீரை வாய் கொப்புளிக்கப் பயன்படுத்துவதன் மூலம் தொண்டை வலியைப் போக்கிக் கொள்ளலாம்.

சருமப் பிரச்சினைகளைப் போக்க: அதிமதுரத் தூளை சிறிது நீர் அல்லது சோற்றுக் கற்றாழை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை தோல் பிரச்சினை உள்ள இடங்களில் பூசி அரை மணி நேரம் பொறுத்து தண்ணீரால் கழுவவும்.

சருமப் பொலிவை மேம்படுத்த: அதிமதுரத் தூளோடு சிறிது சந்தனம் அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகம், கை மற்றும் பாதங்களில் பூசி வர வெயிலினால் ஏற்படும் கருமை மறையும். எலுமிச்சை சாறு அல்லது தயிரையும் அதிமதுரத் தூளோடு கலந்து பூசலாம். 

foam rollers

தலைமுடி வளர்ச்சிக்கு: தேவையான அளவு தயிருடன் அதிமதுரத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். தலையுச்சி முதல் தலைமுடியின் அடிவரை இந்தக் கலவையை நன்றாகப் பூசவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரால் முடியை அலசவும். வாரம் இரு முறை செய்து வர தலைமுடி பிரச்சினைகள் நீங்கி முடி நன்கு செழுமையாய் வளரும்.

முக்கிய குறிப்பு

அதிமதுரத்தின் பலன்கள் ஏராளமாய் இருந்தாலும், மருத்துவர் குறிப்பிடும் அளவில் இந்த மூலிகையை எடுத்துக் கொள்வதே சிறந்த பலனைத் தரும். அதிக அளவில் அதிமதுரத்தை உட்கொள்ளும் போது உடற்சோர்வு, தலைவலி, உயர் இரத்த அழுத்தம் போன்றவை நேரிடலாம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மிளகின் அற்புத பலன்கள்

“பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்ற பழமொழி மூலம் நம் முன்னோர்கள் மிளகின் மகத்துவத்தை போகிற போக்கில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உணவிலும் உடலிலும் உள்ள நச்சுத்தன்மையைப்

Read More »

வேப்ப மரத்தின் நன்மைகள்

21-ம் நூற்றாண்டின் மரமாக (Tree of the 21st century) ஐநா-வால் அறிவிக்கப்பட்ட வேப்ப மரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,  மனித குலத்தின் மிகத் தொன்மையான மருத்துவங்களில் ஒன்றுமான சித்த மருத்துவத்தில் மருத்துவ

Read More »

கொத்துமல்லியின் பலன்கள்

கடையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது, பை நிரம்ப காய்கறிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேல் கொத்துமல்லியும் கறிவேப்பிலையும் இருந்தால்தான் மனம் நிறைவடைகிறது. இவை வெறும் சுவை கூட்டிகள் மட்டும் அல்ல. இவ்விரண்டு மூலிகைகளும் அற்புதமான மருத்துவ

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்