கடையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது, பை நிரம்ப காய்கறிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேல் கொத்துமல்லியும் கறிவேப்பிலையும் இருந்தால்தான் மனம் நிறைவடைகிறது. இவை வெறும் சுவை கூட்டிகள் மட்டும் அல்ல. இவ்விரண்டு மூலிகைகளும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டவை. இன்று நாம் கொத்துமல்லியின் பலன்கள் பற்றி பார்க்கலாம். கொத்துமல்லி ஆங்கிலத்தில் coriander என்று அழைக்கப்படுகிறது.
கொத்துமல்லியின் தன்மைகள்
கொத்துமல்லியில் flavonoid, polyphenol போன்ற கூறுகளும் vitamin C, manganese, potassium போன்ற சத்துக்களும் உள்ளன. கொத்துமல்லியின் தன்மைகளில் சில:
- Antioxidant (cells, protein மற்றும் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
- Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antiviral (virus-ஐ அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antidiabetic (இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்)
கொத்துமல்லியின் மருத்துவ குணங்கள்
கொத்துமல்லி அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டது. இதோ அவற்றில் சில:
- மூச்சுக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது
- இருமலை சரி செய்கிறது
- சீரணத்தை மேம்படுத்துகிறது
- தலைவலியைப் போக்குகிறது
- எலும்புகளைப் பலப்படுத்துகிறது
- கண் பார்வையை மேம்படுத்துகிறது; கண் பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது; வயதாவதால் ஏற்படக்கூடிய கண்பார்வைக் குறைப்பாட்டைப் போக்குகிறது
- வாய்ப்புண்ணைப் போக்குகிறது
- பசியின்மையைப் போக்குகிறது
- நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
- இருதய நலனைப் பாதுகாக்கிறது
- மூளை நலனைப் பாதுகாக்கிறது
- நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
- சரும பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைக்கிறது
- உடலில் உள்ள நச்சுக் கழிவுகளைப் போக்குகிறது
- சீரற்ற மாதவிடாயைச் சரி செய்கிறது; மாதவிடாய் காலத்தில் ஏற்படக் கூடிய வலிகளைப் போக்குகிறது
- சிறுநீர்க் குழாய்த் தொற்றை சரி செய்கிறது
- தூக்கமின்மையை சரி செய்கிறது
- மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.