உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (8) – அர்த்த சக்ராசனம் (Half-Wheel Pose)

Half Wheel Pose

நின்று பின்வளையும் ஆசனங்களின் வரிசையில் இன்று நாம் செய்யவிருப்பது அர்த்த சக்ராசனம், அதாவது பாதி சக்கர நிலை. இது ஆங்கிலத்தில் Half-Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. இதை பாதாங்குஸ்தாசனத்துக்கு (Big Toe Pose) மாற்றாக செய்யலாம். முன் குனிவதால், கால்களின் பின்பக்கம் (hamstring) இழுக்கப்படுவது இந்த ஆசனத்தில் தளர்த்தப்படுகிறது. மேலும் முன்பக்க கால் தசைகள் இழுக்கப்பட்டு கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டமும் பலமும் உருவாகிறது. அர்த்த சக்ராசனத்தில் நிற்கும்போது காலிலிருந்து இடுப்பு வரை அப்படியே நிற்க வேண்டும். இடுப்பிலிருந்து மேல் பகுதி மட்டும் வளைய வேண்டும். இடுப்பிலிருந்து மேல் உடல் மட்டும் வளையும் போது உடம்பின் நேர்க் கோட்டு பகுதி இழுக்கப்படுகிறது. அதன் மூலம், பிறப்புறுப்புக்குக் கீழ் துவங்கி உச்சந்தலை  வரை இழுக்கப்படுவதால் (இதை சக்ராசனத்தில் இன்னும் கூடுதலாக உணர முடியும்) நேர்க் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பிகள் (ductless glands) அழுந்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் செழுமையடைகின்றன. சக்ராசனத்திலும், அர்த்த சக்ராசனத்திலும் கிடைக்கக் கூடிய முக்கிய நன்மை இதுவாகும். இதன் மூலம் உயிர் வளர்க்கக்கூடிய சுரப்பிகள் தேவைக்கு சரியாகவும் நிறைவாகவும் சுரக்கின்றன.

பாதாங்குஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி தெரிந்து கொள்ள, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

Half Wheel Pose

அர்த்த சக்ராசனத்தின் மேலும் சில பலன்கள்

மேற்கூறப்பட்டுள்ள நன்மைகளோடு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகளும் அர்த்த சக்ராசனம் பயில்வதால் உண்டாகும்.

  • நுரையீரல்களை பலப்படுத்துகிறது.
  • இருதய இயக்கத்தை முன்னேற்றுகிறது.
  • சீரண கோளாறுகளை சரி செய்கிறது.
  • முதுகு வலியை போக்கவும், முதுகின் வளையும் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • இடுப்பிலுள்ள அதிக சதையை குறைக்கிறது.
  • மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
செய்முறை

அர்த்த சக்ராசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • கால்கள் இரண்டையும் அருகருகே வைத்து விரிப்பில் நிற்கவும்.
  • கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். அதாவது, கட்டை விரல் முதுகுக்கு பின்னாலும், மீதி நான்கு விரல்களும் முன்னால் இருக்குமாறு இடுப்பை பிடித்துக் கொள்ளவும்.
  • மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே இடுப்பிலிருந்து பின்னால் வளையவும்.
  • 20 வினாடிகள் சாதாரண மூச்சில் இந்த நிலையில் இருக்கவும். பின் மூச்சை விட்டுக் கொண்டே நிமிர்ந்து கைகளை தளர்த்தவும்.
குறிப்பு

அல்சர், உயர் இரத்த அழுத்தம், குடலிறக்கம், கழுத்து, முதுகு மற்றும் இடுப்பில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (10) – நின்ற தனுராசனம் (Standing Bow Pose)

இன்று நாம் பார்க்கவிருப்பது நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை

Read More »

இன்று ஒரு ஆசனம் (9) – பிறையாசனம் (Arc of the Moon Pose)

பின் வளையும் ஆசனங்களில் இன்று நாம் செய்யவிருப்பது பிறையாசனம். இந்த நிலையில் உடல் பிறை வடிவத்தில் காணப்படும். இந்த ஆசனம் இடுப்புக்கு வலிமையையும், வனப்பையும் அளிக்கக் கூடிய ஆசனமாகும். பாதஹஸ்தாசனத்திற்கு இதை மாற்றாக செய்யலாம்.

Read More »

இன்று ஒரு ஆசனம் (7) – ஊர்த்துவ நமஸ்காராசனம் / Upward Salutation Pose

நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தபடி முன் குனிந்து செய்த ஆசனங்களுக்கு மாற்று ஆசனங்களை பார்க்கவிருக்கிறோம். அதாவது, பின் நோக்கி வளையும் ஆசனங்கள் ஆகும். அதில் இப்போது உத்தானாசனத்துக்கு மாற்றாக நாம் செய்யவிருப்பது ஊர்த்துவ நமஸ்காராசனம். இது

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்