உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (51) – அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம் (Half Prayer Twist Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘நமஸ்கார்’ என்றால் ‘வணக்கம்’, ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’, ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது பாதி பார்சுவ கோணாசனம். இது ஆங்கிலத்தில் Half Prayer Twist Pose என்று அழைக்கப்படுகிறது.

அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. மணிப்பூரக சக்கரம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது. நம்முள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணருகிறது. தன்மதிப்பு, தன்னம்பிக்கை வளர்கிறது, ஆளுமை கூடுகிறது. புறச் சூழல்களால் பாதிக்கப்படாமல் தன் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் துணிவும் வலிமையும் வளர்கின்றன.

Half Prayer Twist Pose benefits

அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
  • முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கவும் பலப்படுத்தவும் செய்கிறது
  • முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • ஆற்றலை வளர்க்கிறது
  • உடலின் சமநிலையை வளர்க்கிறது
  • மனம் ஒருநிலைப்படுகிறது
  • இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • மூட்டுகளைப் பலப்படுத்துகிறது
செய்முறை
  • தவழும் நிலைக்குச் செல்லவும். உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
  • வலது காலை முன்னே கொண்டு வந்து இரண்டு கைகளுக்கு இடையில் வைக்கவும். வலது பாதம் வலது முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும்.
  • இடது கையின் முட்டியை வலது முட்டிக்கு வெளிப்புறமாகக் கொண்டு வரவும். இடது கை விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முதுகை நன்றாக வலப்புறம் திருப்பவும்.
  • வலது கையைத் தரையிலிருந்து உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். வலது கை முட்டி மேல் நோக்கி இருக்க வேண்டும்.
  • தலையை நேராக அல்லது மேல் நோக்கி வைக்கவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், தவழும் நிலைக்கு வந்து கால்களை மாற்றிச் செய்யவும்.
குறிப்பு

தரையில் முட்டியை வைத்துப் பழகக் கடினமாக இருந்தால் முட்டிக்குக் கீழே ஒரு விரிப்பை மடித்து வைக்கவும்.

முதுகுத்தண்டு, இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைப் பயில்வதைத் தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தைத் திருப்பி மேலே பார்க்காமல் நேராக அல்லது தலையைக் குனிந்து இந்த ஆசனத்தைப் பயிலலாம்.

இன்று ஒரு ஆசனம் (52) – அர்த்த கடி சக்ராசனம் (Half Waist Wheel Pose)

நாம் முன்னர் அர்த்த சக்ராசனம் என்ற நின்று பின்னால் வளையும் ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த கடி சக்ராசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘கடி’ என்றால் ‘இடுப்பு’. இந்த ஆசனத்தில்

Read More »

இன்று ஒரு ஆசனம் (50) – உத்கடாசனம் (Chair Pose)

நேற்று நாம் பார்த்தது அர்த்த உத்கடாசனம். அதன் முழுமையான வடிவமான உத்கடாசனத்தை இன்று பார்க்கவிருக்கிறோம். வடமொழியில் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். முழுமையான உத்கடாசனத்தைப் பயிலும்போது இதன் பொருளை நீங்கள் மேலும் நன்றாக உணர்வீர்கள்.

Read More »

இன்று ஒரு ஆசனம் (49) –அர்த்த உத்கடாசனம் (Half Chair Pose / Half Squat Pose)

இன்று முதல் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாம் நின்று செய்யும் ஆசனங்களைப் பார்க்கலாம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த உத்கடாசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்