உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (84) – அர்த்த ஹலாசனம் (Half Plough Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது.

அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் வளர்கிறது; தன்மதிப்பு வளர்கிறது; தன்னம்பிக்கை வளர்கிறது.

அர்த்த ஹலாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது
  • வயிற்று உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது
  • வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • மலச்சிக்கலைப் போக்குகிறது
  • தொப்பையை கரைக்கிறது
  • இடுப்புப் பகுதியை நெகிழ்வடையச் செய்கிறது
  • இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
  • மாதவிடாய் காலத்து வலியைப் போக்குகிறது
  • அடி முதுகு வலியைப் போக்குகிறது
  • வெரிகோஸ் வெயின் வலியைப் போக்குகிறது
  • தொடைப் பகுதியை உறுதியாக்குகிறது
செய்முறை
  • விரிப்பில் படுக்கவும். கால்களை அருகருகே வைக்கவும். கைகளை உடம்பின் பக்கவாட்டில் தரையில் வைக்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு கால்களை உயர்த்தவும்.
  • கால்கள் இடுப்புக்கு நேர் மேலாக 90 degree கோணத்தில் இருக்க வேண்டும்.
  • 20 வினாடிகள் இந்நிலையில் இருந்த பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களைத் தரையில் வைக்கவும்.
குறிப்பு

கால்களை ஒன்றொன்றாக உயர்த்தலாம். கால்களை 45 degree கோணத்தில் வைத்து கீழ்க்கண்டவாறும் பழகலாம்.

தீவிர முதுகு வலி, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறு உள்ளவர்கள் அர்த்த ஹலாசனத்தைத் தவிர்த்தல் நல்லது.

இன்று ஒரு ஆசனம் (85) – சுப்த பாதாங்குஸ்தாசனம் (Reclining Hand-to-Big Toe Pose)

நம் முந்தைய பதிவுகளில் பாதாங்குஸ்தாசனம் மற்றும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த பாதாங்குஸ்தாசனம். வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால்

Read More »

இன்று ஒரு ஆசனம் (83) – ஏக பாத சேதுபந்தாசனம் (One-Legged Bridge Pose)

நேற்றைய பதிவில் நாம் சேதுபந்தாசனம் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஏக பாத சேதுபந்தாசனம். இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால்

Read More »

இன்று ஒரு ஆசனம் (82) – சேதுபந்தாசனம் (Bridge Pose)

படுத்து செய்யும் ஆசனங்களில் எளிமையான, அதே நேரத்தில் மிகுந்த பலன்களைத் தரும் ஆசனங்களில் சேதுபந்தாசனமும் ஒன்று. வடமொழியில் ‘சேது’ என்பதற்கு ‘பாலம்’ என்றும் ‘பந்த’ என்பதற்கு ‘பிணைக்கப்பட்ட’ என்றும் பொருள். உள்புற அழுத்தம் மற்றும்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்