இன்றைய ஆசனமான அர்த்த சிரசாசனம் என்பது சிரசாசனத்தின் பாதி நிலை. வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘சிரசு’ என்றால் ‘தலை’. அர்த்த சிரசாசனம், ஆங்கிலத்தில் Half Headstand என்று குறிப்பிடப்படுவதோடு, நாம் முன்னர் பார்த்திருக்கும் தண்டாசனத்தின் (Staff Pose) தலைகீழ் நிலையாக இது இருப்பதால், Upward Facing Staff Pose என்றும் அழைக்கப்படுகிறது.
அர்த்த சிரசாசனம் மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்களைத் தூண்டுகிறது. சஹஸ்ரார சக்கரம் தூண்டப்படும் போது நிலையான தன்மையும், தன்னை உணரும் நிலையும் உருவாகிறது. மேலும் இச்சக்கரம் ஞானத்தின் இருப்பிடமாகவும் விளங்குகிறது.
அர்த்த சிரசாசனத்தின் மேலும் சில பலன்கள்
- தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
- மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- தோள் மற்றும் கைகளைப் பலப்படுத்துகிறது
- முதுகுத்தண்டை உறுதியாக்குகிறது
- முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
- நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
- இருதய நலனைப் பாதுகாக்கிறது
- வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தை சீராக்குகிறது
- சமநிலையை வளர்க்கிறது
- மன அழுத்தத்தைப் போக்குகிறது
செய்முறை
அர்த்த சிரசாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- தவழும் நிலைக்கு வரவும். உங்கள் உள்ளங்கைகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
- கைகளை மடித்து முன்கைகளைத் தரையில் வைக்கவும். இரண்டு கைவிரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.
- உச்சந்தலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உள்ளங்கைகள் உங்கள் தலையின் பின்புறம் அணைத்தாற்போல் இருக்கும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறு கால் முட்டிகளைத் தரையிலிருந்து உயர்த்தவும்.
- மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களை உங்கள் கை முட்டி நோக்கிக் கொண்டு வரவும். இப்போது உங்கள் உடல் ஆங்கில எழுத்து ‘V’-யைத் திருப்பிப் போட்டது போல் இருக்கும்.
- மெதுவாக மேலும் கால்களை கை நோக்கி, உங்கள் முதுகு நேராகும் வண்ணம் கொண்டு வரவும். இப்போது தலையின் மீது உடல் எடையைப் போடாமல் உங்கள் முன்கைகள் பெரும்பாலும் உடல் எடையைத் தாங்குமாறு இருக்கவும்.
- மெதுவாக வலது காலைத் தரையிலிருந்து மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வரவும். பின் இடது காலையும் மடித்து வலது கால் அருகே கொண்டு வரவும். மெதுவாகக் கால்களைத் தரையிலிருந்து மேல் நோக்கி உயர்த்தவும்.
- உடல் எடையை முன்கைகள் சீராகத் தாங்குமாறு வைத்து கால்களை இடுப்புக்கு நேராக வரும்வரை தாழ்த்தவும்.
- 20 முதல் 30 வினாடிகள் வரை இந்நிலையில் இருக்கவும்.
- கால்களை மெதுவாகத் தரையில் வைத்து முட்டியை மடக்கி ஆரம்ப நிலைக்கு வரவும்.
குறிப்பு
ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்கள் கண்டிப்பாக இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். அதிக உடல் எடை உடையவர்களும் கண்டிப்பாக அர்த்த சிரசாசனத்தைத் தவிர்க்கவும்.
தலைக்குக் கீழ் மடித்த விரிப்பொன்றை வைத்துப் பழகவும். துவக்கத்தில் முதுகு சுவற்றை ஒட்டி இருக்குமாறு வைத்து இவ்வாசனத்தனைப் பழகலாம்.
தீவிர கழுத்துப் பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் அர்த்த சிரசாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தீவிர மூட்டுப் பிரச்சினை, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறு உள்ளவர்களும் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
இன்று ஒரு ஆசனம் (100) – சிரசாசனம் (Headstand)
‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியில் 100-வது ஆசனமாக நாம் பார்க்கவிருக்கும் சிரசாசனம், ‘ஆசனங்களின் அரசன்’ என்று அழைக்கப்படுகிறது.. வடமொழியில் ‘சிரச’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Headstand என்று அழைக்கப்படுகிறது. (ஆசனங்களின்
இன்று ஒரு ஆசனம் (98) – த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனம் (One Leg Folded Forward Bend)
வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘அங்க’ என்றால் ‘அங்கம்’, ‘முக’ என்றால் ‘முகம்’, ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘பாதம்’, ‘பஸ்சிமா’ என்றால் ‘மேற்கு’, ‘உத்தானா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ என்று பொருள்.
இன்று ஒரு ஆசனம் (97) – உபவிஸ்த கோணாசனம் (Wide Legged Seated Forward Fold)
இதற்கு முன்னர் நாம் சில கோணாசன வகைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உபவிஸ்த கோணாசனம். வடமொழியில் ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். உபவிஸ்த கோணாசனம் ஆங்கிலத்தில்