முதலிலேயே சொல்லி விடுகிறேன்; இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் திணை வெங்காய ரவை தோசை செய்ய வழக்கமான (அரிசி + உளுந்து) தோசை மாவு தேவை.
இன்னொன்றையும் முதலிலேயே சொல்லி விடுகிறேன். திணை வெங்காய ரவை தோசையின் சுவை அருமையாக இருந்தது.
திணையின் நன்மைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
திணை வெங்காய ரவை தோசை செய்யத் தேவையான பொருட்கள்
தோசை மாவு – சுமார் 10 தோசை வருமளவிற்கு
திணை – 3/4 ஆழாக்கு
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4 அல்லது 5
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
மிளகு – 2 தேக்கரண்டி (மிளகை ஒன்றிரண்டாக நொறுக்கிக் கொள்ளவும்)
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
- திணையை நன்றாக தண்ணீரில் 2 அல்லது 3 முறை அலசி வடிகட்டவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் அலசி வடிகட்டிய திணையை வாசனை வரும் வரை வறுக்கவும்.
- சூடு ஆறிய பின், திணையை மிக்ஸியில் ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- மாவில், வறுத்து அரைத்த திணை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடித்த மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, தேவையான உப்புடன் நன்றாகக் கலக்கவும். மாவை நன்றாகத் தண்ணீர் விட்டுக் கலக்கவும்.
- அடுப்பில் தோசைக் கல்லை வைத்து தீயைப் பற்ற வைக்கவும்.
- தோசைக் கல் காய்ந்ததும், எண்ணெய் ஊற்றி, தோசை மாவை ஊற்றவும். மாவை ஊற்றும் போது கல்லின் ஓரமாக வட்டமாக ஊற்ற வேண்டும். நடுவில் ஊற்றித் தேய்க்கக் கூடாது. மாவை நீர்க்கக் கரைத்திருப்பதால் நீங்கள் ஓரத்தில் ஊற்றினாலும் மாவு நடுப்பகுதி வரை மெல்லிதாகப் பரவும். மாவைச் சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
- ஓரங்கள் பொன்னிறமானதும், தோசையைத் திருப்பி மீண்டும் ஓரங்களில் எண்ணெய் ஊற்றவும்.
- மறுபகுதியும் வெந்ததும் தோசையைக் கல்லிலிருந்து எடுக்கவும்.
தயாரித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
என்னடா இது, இந்த புகைப்படத்தில் மிளகு சீரகத்திற்கான அடையாளமே தெரியவில்லையே என்று யோசிக்கிறீர்களா? ஆமாம், அன்று திடீரென்று செய்ய முடிவெடுத்து அவசர அவசரமாக தயாரித்தத்தில் மிளகு, சீரகம் விட்டுப் போய் விட்டது. நான்தான் ஏற்கனவே வேலை-வாழ்க்கை சமநிலை என்கிற பதிவில் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டேனே, அந்த உண்மைதான் இந்த அவசர உணவு தயாரிப்புக்குக் காரணம்.
ஆனாலும், துவக்கத்திலேயே சொன்னது போல் திணை வெங்காய ரவை தோசையின் சுவை அருமையாக இருந்தது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
திணையின் நன்மைகள்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழர் தாயகத்தில் வீட்டு முன்பகுதியில் திண்ணையும் வீட்டு சமையலறையில் திணையும் நிச்சயமாகக் காணக் கூடியதாகும். சமீப வருடங்களில், திண்ணை காணாமல் போய் விட்டது; திணையின்
சாமை உப்புமா
“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் உப்புமா வகைகளுக்குத் தீவிர ஆதரவாளர்களும் உண்டு, தீவிர எதிர்ப்பாளர்களும் உண்டு. மிகச்
சாமையின் நன்மைகள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாமையின் சத்துகள் சாமையில் உள்ள சத்துக்களில் புரதச்சத்து,