வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழர் தாயகத்தில் வீட்டு முன்பகுதியில் திண்ணையும் வீட்டு சமையலறையில் திணையும் நிச்சயமாகக் காணக் கூடியதாகும். சமீப வருடங்களில், திண்ணை காணாமல் போய் விட்டது; திணையின் பயன்பாடு குறைந்து விட்டது. ஆனால், கொரோனா தாக்கத்திற்குப் பின் சத்தான உணவுத் தேர்வில் பெருமளவு மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் சாமை, திணை போன்ற சிறுதானியங்கள் மீண்டும் அவற்றிற்குரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளன.
(சாமையின் நன்மைகள் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்)
திணையின் சத்துகள்
திணையில் உள்ள சத்துகளில் கார்போஹைட்ரேட்ஸ், சுண்ணாம்புச் சத்து, புரதச் சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை முக்கிய சத்துகளாகும். 100 கிராம் திணையில் கிடைக்கக் கூடிய ஆற்றல் (கலோரி) 351 கிராம் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களில் ஒன்றாவது சிறுதானியத்தைப் பற்றியதாக இருக்கும். இந்த முறையும் அப்படியே. ஆனால், அதைப் பரிந்துரைக்க அமேசானில் தேடிய போது குறிப்பிட்ட புத்தகம் கிடைக்கவில்லை. நீங்கள் ஒரு எட்டு அமேசானில் பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.
திணையின் நன்மைகள்
திணையின் நன்மைகளுள் சில:
- மலச்சிக்கலைப் போக்குகிறது.
- நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது.
- நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
- உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
- இருதய நலனைப் பாதுகாக்கிறது.
- இரத்த அழுத்த அளவுகளைச் சீராக்க வைக்க உதவுகிறது.
- அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது.
- அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
- எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
- மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது; மறதி நோய் மற்றும் அல்சைமர்ஸ் ஆகிய மூளை சம்பந்தமான நோய்களைத் தவிர்க்கிறது.
- கொலாஜன் (collagen) உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தள்ளிப் போடுகிறது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
சாமை உப்புமா
“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் உப்புமா வகைகளுக்குத் தீவிர ஆதரவாளர்களும் உண்டு, தீவிர எதிர்ப்பாளர்களும் உண்டு. மிகச்
சாமையின் நன்மைகள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாமையின் சத்துகள் சாமையில் உள்ள சத்துக்களில் புரதச்சத்து,
சிறுதானிய வகைகளும் அவற்றின் நன்மைகளும்
நவீனமயமான உலகில், காலம் மற்றும் சூழலுக்கேற்ப நம் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகி இருக்கிறது. அதிகாலையிலேயே விழித்து அந்நாளுக்குரிய வேலைகளில் ஈடுபட்டதும், பல மைல் தொலைவில் இருந்த பள்ளிக்கூடத்துக்கு