உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (45) – உத்தித நமஸ்காராசனம் / உத்தித மாலாசனம் (Extended Leg Squat Pose)

வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘நமஸ்கார’ என்றால் ‘வணக்கம்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் ஒரு கால் நன்றாக நீட்டப்பட்டு இரு கைகளால் வணக்கம் சொல்வதால் இந்தப் பெயர் பெற்றது. இது மாலாசனத்தின் ஒரு வகை எனவும் கூறலாம். இது அர்த்த மாலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

உத்தித நமஸ்காராசனம் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்தால் நிலையான தன்மையும் பாதுகாப்பு உணர்வும் வளருகிறது.

Extended Leg Squat Pose benefits

உத்தித நமஸ்காராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; இடுப்பைப் பலப்படுத்துகிறது.
  • கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு கால்களைப் பலப்படுத்தவும் செய்கிறது.
  • அடி வயிற்றைப் பலப்படுத்துகிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
  • சீரணத்தை செம்மையாக்குகிறது.
செய்முறை
  • விரிப்பில் நிற்கவும்.
  • வலது காலை இடது காலிலிருந்து சுமார் 4 அடி இடைவெளி விட்டு தரையில் வைக்கவும்.
  • இடது காலில் உடலின் எடையை கூடுதலாகத் தாங்குமாறு நிற்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறே இடுப்பை கீழே இறக்கவும். இடது பாதம் தரையில் இருக்க வேண்டும்.
  • வலது கால் நன்றாக நீட்டியிருக்க வேண்டும். வலது குதிகால் தரையில் இருக்க வேண்டும்.
  • இரண்டு கைகளையும் வணக்கம் சொல்லும் முறையில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும்.
  • 10 முதல் 20 நொடிகள் இந்த நிலையில் இருந்தபின் நீட்டிய காலை மீண்டும் மாலாசன நிலைக்குக் கொண்டு வரவும்.
  • காலை மாற்றி இதைத் திரும்பச் செய்யவும்.
குறிப்பு

இந்த நிலையில் இருப்பது கடினமாக இருந்தால் yoga block அல்லது வேறு எதாவது திடமான பொருளைத் உங்களுக்கு முன்னால் தரையில் வைத்து அதில் கைகளை ஊன்றிச் செய்யவும்.

தீவிர அடி முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

இன்று ஒரு ஆசனம் (46) – பார்சுவ உபவிஸ்த கோணாசனம் (Side Seated Angle Pose)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது. பார்சுவ உபவிஸ்த கோணாசனம்

Read More »

இன்று ஒரு ஆசனம் (44) – மாலாசனம் / நமஸ்காராசனம் (Garland Pose / Squat Pose)

வடமொழியில் ‘மாலா’ என்றால் மாலை, ‘நமஸ்காரம்’ என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது

Read More »

இன்று ஒரு ஆசனம் (43) – பரத்வாஜாசனம் (Bharadvaja’s Twist)

பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்