உடல் மன ஆரோக்கியம்

மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

மன அழுத்தம் உடல், மன நலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ‘மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்’ என்கிற பதிவில் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் குறித்துப் பார்க்கலாம்.

(மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் பற்றி அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்)

மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

எசன்சியல் எண்ணெய்களின் பயன்பாடுகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளன. மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

1) Lavender Essential Oil

பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்க lavender எசன்சியல் எண்ணெய் உதவுவதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும் தூக்கமின்மையைப் போக்கவும் lavender எசன்சியல் எண்ணெய் உதவுவதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2) Lemongrass Essential Oil

Lemongrass எசன்சியல் எண்ணெய் மன அழுத்தத்தால் ஏற்படக் கூடிய பதற்றத்தைப் போக்க உதவுவதுடன், குறிப்பிட்ட சூழலில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து மிக விரைவாக வெளிவர உதவுவதாக ஆய்வு  மூலம் நிரூபணமாகியுள்ளது.

3) Bergamot Essential Oil

Bergamot எசன்சியல் எண்ணெயின் வாசத்தை 15 நிமிடங்கள் முகர்வதன் மூலம் நேர்மறை எண்ணங்களை வளர்க்கவும் மன நலத்தைக் காக்கவும் உதவுவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

4) Rose Essential Oil

Photo by Karolina Grabowska from Pexels

Rose எசன்சியல் எண்ணெய்யை சருமத்தின் ஊடாக (transdermal absorption) இரத்தத்தில் கலக்கச் செய்வதனால் மன அழுத்தம் நீங்கி மனதில் அமைதி ஏற்படுவது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. 

5) Chamomile Essential Oil

Chamomile எசன்சியல் எண்ணெயை முகர்வதன் மூலம் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் குறைவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

6) Jasmine Essential Oil

பதட்டத்தைத் தணித்து மனதை அமைதிப்படுத்த jasmine எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. நரம்பு மண்டலத்தில் jasmine எசன்சியல் எண்ணெய் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வு ஒன்றின் மூலம் jasmine எண்ணெய் நேர்மறையான மனநிலையை உருவாக்குவதாகவும், எதிர்மறை எண்ணங்களையும் சோம்பலான மனநிலையையும் போக்க உதவுவது தெரிய வந்துள்ளது.

எந்த ஒரு எசன்சியல் எண்ணெய்யைப் பயன்படுத்தும் முன்னர் நீர்க்கச் செய்து பயன்படுத்துவதே சரியானதாகும். எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

2 Responses

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்