உடல் மன ஆரோக்கியம்

நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள்

முந்தைய பதிவுகளில் நுரையீரலைப் பலப்படுத்தும் ஆசனங்கள், நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரைகள் மற்றும் நுரையீரலைப் பலப்படுத்தும் பிராணாயாமம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றிப் பார்க்கலாம்.

எசன்சியல் எண்ணெய்கள் எவ்வாறு நுரையீரலைப் பலப்படுத்த உதவுகின்றன?

Photo courtesy: Photo by Monstera from Pexels

எசன்சியல் எண்ணெய்கள் antiviral, antibacterial, anti-inflammatory, bronchodilator மற்றும் mucolytic உள்ளிட்ட பல தன்மைகள் கொண்டவை. எனவே, இவை சுவாசக் குழாய் கோளாறுகளைப் போக்க உதவுகின்றன என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளதை  ஆய்வு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது.

நுரையீரல் பிரச்சினைகளைப் போக்கி நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள எசன்சியல் எண்ணெய்கள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளைச் சரி செய்து நுரையீரலைப் பலப்படுத்தும் திறன் கொண்டவையாக நிரூபிக்கப்பட்டவையாகும்.

1) Eucalyptus Essential Oil

நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் அளவுகளில் eucalyptus எசன்சியல் எண்ணெய்யைப் பயன்படுத்துவதன் மூலம் சுவாசக் குழாய் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படுவதாக ஆய்வு ஒன்று அறிவிக்கிறது. மேலும், தன் anti-inflammatory மற்றும் anti-oxidative தன்மைகளால் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தவும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) தீவிரமடைவதைத் தவிர்க்கவும் eucalyptus எசன்சியல் எண்ணெய் உதவுவது குறிப்பிட்ட ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது.

2) Anise Essential Oil

சுவாசக்குழல் அழற்சி (bronchitis) மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளைப் போக்க anise எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. நுரையீரலில் சேர்ந்துள்ள சளியைக் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் anise எசன்சியல் எண்ணெய்க்கு உண்டு.

3) Peppermint Essential Oil

Peppermint எசன்சியல் எண்ணெய்யை முகர்வதால் நுரையீரலுக்கு அதிகமான பிராணவாயு கிடைக்கிறது. Peppermint எசன்சியல் எண்ணெய்யை உட்கொண்ட பின் எடுக்கப்பட்ட நுரையீரல் செயல்பாடு சோதனையில், நுரையீரலின் செயல்பாடு கூடியிருப்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் peppermint எசன்சியல் எண்ணெய் உட்கொள்வதால் காற்றை உள்ளிழுக்க உதவும் தசைகளின் (inspiratory muscles) பலம் அதிகரிப்பதாகவும் தெரிய வருகிறது.

4) Tree Tea Oil

Tree tea எசன்சியல் எண்ணெய் antiviral தன்மை கொண்டது. மேலும் அது நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் தன்மையும் உடையது. Tree tea எசன்சியல் எண்ணெய் சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி ஆகியவற்றைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.

5) Rosemary Essential Oil

Rosemary எசன்சியல் எண்ணெய் கபத்தைப் போக்கும் தன்மை கொண்டது. ஆஸ்துமாவின் அறிகுறிகளைப் போக்கவும் rosemary எசன்சியல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

6) Oregano Essential oil

Oregano எசன்சியல் எண்ணெய் சளியை இளக்கி மூச்சுக் குழாய் சீராக இயங்க உதவுகிறது. மூச்சுக் குழாய் அழற்சியைப் (Bronchitis) போக்கவும் oregano எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. மேலும் இந்த எண்ணெய் சிறந்த antioxidant தன்மை கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துவதோடு நுரையீரல் நலனையும் பாதுகாக்கிறது.

7) Cinnamon Essential Oil

Cinnamon எசன்சியல் எண்ணெய் சளியைக் கரைக்கவும் இருமலைப் போக்கவும் உதவுகிறது. மேலும், cinnamon எசன்சியல் எண்ணெய், மூச்சுக் குழாயைத் தாக்கும் நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டதாக ஆய்வு ஒன்று அறிவித்துள்ளது. 

8) Thyme Essential Oil

உடலின் நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டும் thyme எசன்சியல் எண்ணெய், antiviral தன்மை கொண்டது. இதன் காரணமாக கொரானா வைரஸ் அறிகுறிகளைத் தணிக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.

9) Frankincense Essential oil

Frankincense எசன்சியல் எண்ணெய் நுரையீரலில் பிராண வாயு ஓட்டத்தை சீராக்க உதவுவதோடு, இருமல், மூச்சிரைப்பு, சைனஸ், ஆஸ்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி ஆகியவற்றைப் போக்க உதவுவதாக ஆய்வு மூலம் தெரிய வருகிறது. 

10) Cypress Essential Oil

Cypress எசன்சியல் எண்ணெய் சுவாசக் குழாயில் இருக்கும் சளியைப் போக்கி நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளைப் போக்கவும் cypress எசன்சியல் எண்ணெய் உதவுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்களை பயன்படுத்துகையில் சரியான விகிதத்தில் நீர்க்கச் செய்து பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்