உடல் மன ஆரோக்கியம்

தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

தலைவலியினால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவறான நிலையில் தொடர்ந்து அமர்தல் (poor posture), மலச்சிக்கல், அசீரணம், ஹார்மோன் கோளாறுகள்,  மன அழுத்தம் என தலைவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு.

மருந்துகள் உட்கொள்ளாமல் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளை இயற்கையான முறையில் போக்கிக் கொள்ளவும் தவிர்க்கவும் முடியும். தலைவலியைப் போக்கும் யோகாசனங்கள் சீரண மண்டலத்தை மேம்படுத்துதல், இரத்த ஓட்டத்தை சரி செய்தல், மன அழுத்தத்தைப் போக்குதல் ஆகியவற்றின் மூலம் தலைவலியைப் போக்க உதவுகின்றன.

யோகாசனங்கள் தவிர, தலைவலியைப் போக்கும் முத்திரைகள் பயில்வது சிறந்த பலனைத் தரும். ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளுக்கு இயற்கை மருத்துவம் மூலமும் நல்ல நிவாரணம் பெற முடியும்.

அவ்வாறே, இயற்கையான முறையில் தலைவலியைப் போக்க உதவுவது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் எசன்சியல் எண்ணெய்கள்.

எசன்சியல் எண்ணெய்கள் எவ்வாறு தலைவலியைப் போக்க உதவுகின்றன?

வலி நீக்குதல், அசீரணக் கோளாறுகளை சரி செய்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மாதவிடாய் காலத்து வலிகளைப் போக்குதல்,  மன அழுத்தத்தைப் போக்குதல், மனதை அமைதிப்படுத்துதல் ஆகிய தன்மைகள் கொண்ட எசன்சியல் எண்ணெய்கள் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்க உதவுகின்றன.

தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

Photo by Laryssa Suaid from Pexels

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான சில:

1) Ginger Essential Oil

இஞ்சி எசன்சியல் எண்ணெய் ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் குமட்டலைச் சரி செய்யும். மேலும், தலைவலியின் தீவிரத்தையும் குறைக்கும்.

இஞ்சி எசன்சியல் எண்ணெய்யைக் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற career எண்ணெயோடு எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்யும் முறை பற்றி கூறப்பட்டிருந்த விதத்தில் கலந்து தலைவலி உள்ள இடங்களில் பூசி மசாஜ் செய்யவும்.

2) Peppermint Essential Oil

Peppermint எசன்சியல் எண்ணெய் தசைப்பிடிப்புகளை நீக்கவும், சளியைக் கரைக்கவும், பதற்றம் காரணமாக ஏற்படும் தலைவலியைப் போக்கவும் உதவுகிறது.

Peppermint எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தலைவலி உள்ள இடங்களில் பூசவும்.

3) Lavender Essential Oil

Lavender எசன்சியல் எண்ணெய் மனதில் அமைதியை ஏற்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் ஏற்படும் தலைவலியைப் போக்குகிறது.

Lavender எசன்சியல் எண்ணெய்யை முகர்வதால் ஒற்றைத் தலைவலியின் தீவிரம் குறைவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Lavender எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து தலைவலி உள்ள இடத்தில் பூசலாம். Lavender எசன்சியல் எண்ணெய்யை diffuser மூலம் உங்கள் அறையில் காற்றில் பரவச் செய்யலாம்.

வெதுவெதுப்பான நீரில் சில சொட்டுகள் Lavender எசன்சியல் எண்ணெய்யை சேர்த்து குளிக்கலாம்.

4) Eucalyptus Essential Oil

Eucalyptus எசன்சியல் எண்ணெயில் இருக்கும் cineole, மூக்கடைப்பைப் போக்குவதன் மூலம் சைனஸ் பிரச்சினையால் உண்டாகும் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

மேலும் eucalyptus எசன்சியல் எண்ணெய் மன அழுத்தத்தைப் போக்கும் தன்மை கொண்டதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மன அழுத்தத்தால் உண்டாகும் தலைவலிக்கும் Eucalyptus எசன்சியல் எண்ணெய் மருந்தாகிறது.

Eucalyptus எசன்சியல் எண்ணெயோடு carrier எண்ணெய் சேர்த்து முன் நெற்றி, நெற்றிப் பொட்டு, பின் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பூசவும்.

5) Rosemary Essential Oil

Rosemary எசன்சியல் எண்ணெய் வலி நீக்கும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய் மனதை அமைதிப்படுத்தக் கூடியது என்பதால் மன அழுத்தத்தால் வரும் தலைவலியைப் போக்கவும் உதவுகிறது. மேலும் rosemary எசன்சியல் எண்ணெய் தூக்கமின்மையைப் போக்கி ஆழ்ந்த உறக்கம் பெற உதவுகிறது. எனவே, தூக்கமின்மையால் உண்டாகும் தலைவலியைப் போக்கவும் உதவுகிறது.

Rosemary எசன்சியல் எண்ணெயோடு carrier எண்ணெய் சேர்த்து தலைவலி உள்ள இடங்களிலும் பின் கழுத்திலும் பூசவும்.

6) Chamomile Essential Oil

Chamomile எசன்சியல் எண்ணெய் மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றைப் போக்குவதால் இவற்றின் காரணமாக ஏற்படும் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் chamomile எசன்சியல் எண்ணெய் தசை இறுக்கத்தையும் தளர்த்துகிறது. 

உடலில் nitric oxide-ன் அளவு அதிகமாகும் போது ஒற்றைத் தலைவலி ஏற்படுவதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. Chamomile எசன்சியல் எண்ணெய் nitric oxide அதிகமாக சுரப்பதைத் தடுப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறதாக ஒரு ஆய்வு முடிவு அறிவிக்கிறது.

Chamomile எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து ஆவி பிடிக்கலாம். அல்லது சூடான குளியல் நீரில் கலந்து குளிக்கலாம்.

Chamomile தேநீர் அருந்துவதால் அசீரணக் கோளாறு நீங்குகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் chamomile-வைப் பயன்படுத்தக் கூடாது.

7) Geranium Essential Oil

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தலைவலிக்கு geranium எசன்சியல் எண்ணெய் சிறந்த பலனைத் தரும். Geranium எசன்சியல் எண்ணெய் மசாஜ் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல், மன உபாதைகள் நீங்குவது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது.

Geranium எசன்சியல் எண்ணையோடு carrier எண்ணெய் சேர்த்து தலைவலி உள்ள இடங்களிலும் கழுத்தின் பக்கவாட்டிலும் பூசலாம்.

குளியல் நீரில் சில துளிகள் geranium எசன்சியல் எண்ணெய்யை ஊற்றிக் குளிக்கவும். ஒரு சுத்தமான துண்டை இந்நீரில் நனைத்துப் பிழிந்து ஒத்தடம் அளிக்கலாம்.

8) Frankincense Essential Oil

Frankincense எசன்சியல் எண்ணெய் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையைப் போக்குகிறது. மேலும் மலச்சிக்கல், சோர்வு ஆகியவற்றையும் போக்கும் திறன் கொண்டது. எனவே இக்காரணங்களால் ஏற்படும் தலைவலியைப் போக்கவும் தவிர்க்கவும் frankincense எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. Frankincense எசன்சியல் எண்ணெய் சீரணத்தையும் மேம்படுத்துகிறது.

Frankincense எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து தலைவலி உள்ள இடம் மற்றும் கழுத்தின் பக்கவாட்டுப் பகுதிகளிலும் கழுத்தின் பின்பகுதியிலும் பயன்படுத்தவும்.

சுடுநீரில் சில சொட்டு frankincense எசன்சியல் எண்ணெய்யை சேர்த்து ஆவி பிடிக்கவும்.

9) Lemon Essential Oil

Lemon எசன்சியல் எண்ணெய் சளியைக் கரைக்கும் திறன் கொண்டதால் சைனஸ் பிரச்சினையால் உண்டாகும் தலைவலிக்கு நல்ல தீர்வாகிறது. அசீரணக் கோளாறுகளைப் போக்கவும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும், lemon எசன்சியல் எண்ணெய் மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. எனவே மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலிக்கும் நல்ல தீர்வாகிறது.  

Lemon எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து நெற்றிப் பொட்டு, கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பூசவும். அசீரணத்தால் ஏற்படும் தலைவலியைப் போக்க, இரண்டு சொட்டு lemon எசன்சியல் எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகவும்.

சிலருக்கு lemon எசன்சியல் எண்ணெய் சருமத்தில் எரிச்சல் உண்டாக்கலாம். ஆகையால் சிறிதளவு lemon எசன்சியல் எண்ணெய்யை, carrier எண்ணையோடு கலந்து கையில் பூசி சோதிக்கவும். எரிச்சல் எதுவும் ஏற்படாமல் இருந்தால் தலைவலியைப் போக்க பயன்படுத்தலாம்.

எந்த ஒரு எசன்சியல் எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு முன்னும் அதை சரியான விகிதத்தில் carrier எண்ணெய் கலந்து பயன்படுத்துவதே சரியானது. மேலும், நீங்கள் பயன்படுத்தவிருக்கும் எசன்சியல் எண்ணெய்க்கு எதேனும் பக்கவிளைவுகள் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது. சரியான முறையில் தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் விரைவில் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். 

Picture of இரமா தமிழரசு

இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா மற்றும் தொடு மருத்துவ சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

அசர வைக்கும் மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள்

முந்தைய பதிவு ஒன்றில் சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் நன்மைகள் போலவே மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அனைத்தும்

Read More »

எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில்  குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள் இங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலே பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றி

Read More »

எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளின்  பாகங்களான வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் எசன்சியல் எண்ணெய். எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அற்புதமானவை. பொதுவாக எசன்சியல் எண்ணெய் steam distillation,

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்