உடல் மன ஆரோக்கியம்

எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளின்  பாகங்களான வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் எசன்சியல் எண்ணெய். எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அற்புதமானவை.

பொதுவாக எசன்சியல் எண்ணெய் steam distillation, expression போன்ற முறைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. செடிகளின் இயற்கையான எண்ணெய் செறிவூட்டப்படுவதால் இந்த எசன்சியல் எண்ணெய்கள் அதிக ஆற்றல் வாய்ந்தவை. உதாரணத்திற்கு சொல்வதானால் சுமார் 5 மில்லிலிட்டர் ரோஜா எசன்சியல் எண்ணெய் தயாரிக்க தோராயமாக 2,24,000 ரோஜா இதழ்கள் தேவைப்படுகிறது.

எசன்சியல் எண்ணெயின் பயன்கள்

எசன்சியல் எண்ணெய்களின் பொதுவான பயன்களில் சில:

சீரணத்தை மேம்படுத்துதல்: புதினா எசன்சியல் எண்ணெய் போன்ற சில எசன்சியல் எண்ணெய்கள் சீரணக் கோளாறுகளைச் சரி செய்ய உதவுகின்றன. வாயுக் கோளாறு, மலச்சிக்கல் ஆகியவற்றை சீர் செய்வதன் மூலம் சீரண மண்டல இயக்கம் மேம்படுத்துகிறது.

வலிகளைப் போக்குதல்: சாதாரண தலைவலி, ஒற்றைத் தலைவலி, தசைவலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட வலிகளைப் போக்க எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. இஞ்சி எசன்சியல் எண்ணெய், லாவண்டர் எசன்சியல் எண்ணெய் உள்ளிட்ட சில எசன்சியல் எண்ணெய்கள் வலி நீக்கும் திறன் மிக்கவை.

மாதவிடாய் வலிகளைப் போக்கவும் எசன்சியல் எண்ணெய் உதவுகிறது.

நோய் எதிர்ப்புத் திறன் வளர்த்தல்: எசன்சியல் எண்ணெய்களின் நோய் எதிர்க்கும் திறன் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இஞ்சி எசன்சியல் எண்ணெய் மற்றும் யூகலிப்டசு எசன்சியல் எண்ணெய்களின் நோய் எதிர்ப்புத் திறன் வளர்க்கும் ஆற்றல்கள் பல்வேறு ஆய்வகள் மூலம் உறுதியாகியுள்ளதாக ஒரு ஆய்வு அறிவித்துள்ளது.

ஹார்மோன்களை சமநிலைப்படுத்தல்: பல்வேறு ஆய்வுகளும் எசன்சியல் எண்ணெய்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதை நிரூபிக்கின்றன. Clary sage எசன்சியல் எண்ணெய் மற்றும் Frankincense எசன்சியல் எண்ணெய் தைராய்டு ஹார்மோன் அளவுகளை சீராக்குவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. Lavender எசன்சியல் எண்ணெய் cortisol அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது.

மாதவிடாய் கோளாறுகளை சரி செய்தல்: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, அதிகப்படியான உதிரப்போக்கு, பிடிப்பு (cramps) ஆகியவற்றை எசன்சியல் எண்ணெய்கள் போக்குவது ஆய்வு மூலம் உறுதியாகியுள்ளது.  மாதவிடாய் நேரத்தில் ஏற்படக் கூடிய மன அழுத்தத்தைப் போக்க clary sage உள்ளிட்ட எசன்சியல் எண்ணெய்கள் உதவுகின்றன.

மூளை நலனைப் பாதுகாத்தல்: Rosemary எசன்சியல் எண்ணெய் நினைவாற்றலை அதிகரிக்கிறது; lavender எசன்சியல் எண்ணெய் சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துகிறது. Alzhiemer’s பாதிப்பு உள்ள சிலரிடம் மேற்கொண்ட ஆய்வில் lemon balm எசன்சியல் எண்ணெய், sage எசன்சியல் எண்ணெய், lavender எசன்சியல் எண்ணெய் மற்றும் rosemary எசன்சியல் எண்ணெய்  நினைவாற்றலை அதிகப்படுத்துவது உறுதியாகியுள்ளது.

சரும நலனை மேம்படுத்துதல்: சரும வறட்சி, பரு ஆகியவற்றைப் போக்கவும் சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. வயதாவதால் சருமம் தளர்ச்சியடைவதை ஒத்திப் போட cypress எசன்சியல் எண்ணெய் உதவுகிறது. காயங்களை ஆற்றவும் எசன்சியல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், எசன்சியல் எண்ணெய்,

  • ஆற்றலை அதிகரிக்கிறது 
  • தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
  • தூக்கமின்மையைப் போக்குகிறது
  • நச்சுக்கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • பதட்டத்தைத் தணிக்கிறது
  • மன அமைதியை வளர்க்கிறது; மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது
Photo by Mareefe from Pexels

எசன்சியல் எண்ணெய்களை வாங்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Essentialoils

எசன்சியல் எண்ணெய்களைப் பயன்படுத்தும் முறை

முதலில் குறிப்பிடப்பட வேண்டியது எசன்சியல் எண்ணெய்கள் அதிக ஆற்றல் வாய்ந்தவை என்பதால் அவற்றை நீர்க்க வைத்தே (dilute) பயன்படுத்த வேண்டும். எசன்சியல் எண்ணெய்களைப் பொதுவாக மூன்று வகைகளில் பயன்படுத்தலாம். முகர்தல், உடலின் மேல் தடவிக் கொள்ளுதல் மற்றும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளுதல். 

அனைத்து எசன்சியல் எண்ணெய்களும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளத் தக்கது அல்ல. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். மேலுக்குத் தடவிக் கொள்வதானால் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற carrier எண்ணெயில் கலந்தே பயன்படுத்த வேண்டும்.

கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுக்க வேண்டும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்