வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Downward Facing Dog என்று பெயர். சரியாக சொன்னால்,
அதோ என்றால் downward – கீழ் நோக்கி
முக என்றால் face – முகம்
ஸ்வானா என்றால் dog – நாய்
ஆசனம் என்றால் posture – நிலை
அதாவது, Downward Facing Dog Pose. தமிழில், முகம் கீழ் நோக்கிய நாய் நிலை.
இதில், நாய்க்கும் ஆசனத்துக்கும் என்ன தொடர்பு என்று முதலில் புரியவில்லை. அதற்கான விளக்கங்களும் எங்கும் இல்லை. ஆனால், ஏதோ ஒரு பெயர் காரணம் இருக்கக் கூடும். குறிப்பாக, வயிறு தொடர்பான காரணம் இருக்கக் கூடும் என எண்ணிக் கொண்டே, கால்நடை மருத்துவத்தில் மிக அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர், நாய்க்கு சந்தோஷம் வந்தால், இரண்டு முன்னங்கால்களை நீட்டி தலையை அவற்றின் இடையில் புதைத்துக் கொள்ளுமாம். வயிறு பிரச்சினை இருந்தாலும் இப்படி செய்யும் என்று அவர் கூறிய போது இந்த பெயர் காரணம் புரிந்தது. நாய்களும் இது போல் நிற்கும்போது அவற்றின் வயிற்று பிரச்சினை குறைந்து விடுமாம்.
வஜ்ஜிராசனம் வயிறு தொடர்பான தொல்லைகளை நீக்கும் என பார்த்தோம் அல்லவா? வஜ்ஜிராசனம் என்பது உடலின் நடுப்பகுதியை உறுதிப்படுத்தக் கூடியது. இந்த ஆசனம் அதை முழுமைப்படுத்த கூடியது. மேலும், வஜ்ஜிராசனத்தில் இருக்கும் போது கால்களின் முன்பக்கம் இழுக்கப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனத்தில் காலின் பின்புறம் இழுக்கப்படுகிறது. குறிப்பாக, sciatic நரம்பு இழுக்கப்பட்டு உறுதியாவதுடன் பின்னங்கால் தசைகளும் உறுதியாகின்றன.
வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
அதோ முக ஸ்வானாசனத்தின் மேலும் சில பலன்கள்
- நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது.
- சீரணத்தை பலப்படுத்துகிறது.
- நாள்பட்ட தலைவலியை போக்க உதவுகிறது.
- தோள், கைகள், கால்கள் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.
- நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.
- மாதவிடாய் நிற்கும் கட்டத்தில் (menopause) ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
- உடல் சோர்வை போக்குகிறது.
- மன அழுத்தத்தை போக்குகிறது.
- மனதை அமைதிப்படுத்துகிறது.
செய்முறை
அதோ முக ஸ்வானாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- தவழும் நிலைக்கு வரவும். அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி உங்களின் இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் விதமாக உங்கள் உள்ளங்கைகளயும் உங்கள் கால்களையும் தரையில் வைக்கவும்.
- உள்ளங்கைகளை தரையில் அழுத்தி, மூச்சை வெளியே விட்டவாறு, கால் முட்டியை தரையில் இருந்து எடுத்து இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும். உங்கள் பாதங்களை தரையில் வைக்கவும். இப்பொழுது உங்கள் உடல் ஆங்கில எழுத்து ‘V’-யை திருப்பி போட்டது போல் இருக்கும்.
- உங்கள் தொப்புளை நீங்கள் பார்க்கும் வண்ணம் தலையை உள்புறமாக கொண்டு செல்லவும்.
- துவக்கத்தில் இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கலாம். பயிற்சி செய்ய செய்ய, நேரத்தை அதிகரித்து ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கவும்.
குறிப்பு
பாதங்களைத் தரையில் வைக்க முடியாதவர்கள், பாதத்தை உயர்த்தியே வைக்கவும்.
மணிக்கட்டில் வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தலையை தொங்க விடாமல் எதாவது ஒரு பொருளின் மேல் வைக்கவும். தீவிர தலைவலி இருக்கும்போது இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவும்.
இன்று ஒரு ஆசனம் (14) – பாலாசனம் (Child Pose)
ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும். ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது? ஆறு அல்லது ஏழாம் மாதத்தில் குழந்தை குப்புற கவிழ்கிறது. அதன் பின் அப்படியே
இன்று ஒரு ஆசனம் (13) – புஜங்காசனம் (Cobra Pose)
முகம் கீழ் நோக்கிய நாய் நிலைக்கு, அதாவது அதோ முக ஸ்வானாசனத்துக்கு, புஜங்காசனம் மாற்று ஆசனமாகும். ‘புஜங்க’ என்றால் வடமொழியில் ‘பாம்பு’ என்று பொருள். ‘ஆசனம்’ என்பது ‘நிலை’, அதாவது பாம்பு நிலை, அதாவது,
இன்று ஒரு ஆசனம் (11) – வச்சிராசனம் / வஜ்ஜிராசனம் (Thunderbolt Pose)
நின்றது போதும். சற்று உட்காருவோம். அதாவது, உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள் சிலவற்றை இனி செய்வோம். ஏற்கனவே அமர்ந்து செய்யும் ஒரு ஆசனத்தை நாம் பார்த்துள்ளோம். ஆம், பத்மாசனம்தான். பத்மாசனத்தை போலவே ஒரு சிறப்பு வாய்ந்த