துளசிச் செடிக்கு அடுத்தப்படியாக வீட்டுத் தோட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி. கைக்குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று கற்பூரவல்லி. குறைந்த பராமரிப்பில் அபரிமிதமாக வளரும் கற்பூரவல்லியின் பலன்களைப் பற்றி இன்று பார்ப்போம். இது ஆங்கிலத்தில் Indian borage என்றும் Cuban oregano என்றும் அழைக்கப்படுகிறது.
Table of Contents
கற்பூரவல்லியின் தன்மைகள்
கற்பூரவல்லி அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது. கற்பூரவல்லியில் இருக்கும் முக்கிய கூறான thymol அதன் மருத்துவ குணங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்பூரவல்லியின் தன்மைகளில் சில:
- Antibacterial (பாக்டீரியாவை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antiviral (வைரஸை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antioxicant (cells, protein மற்றும் DNA-க்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Antimutagenic (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Antiepileptic (வலிப்பு ஏற்படாமல் தடுத்தல்)
- Anticancer (புற்று நோய் ஏற்படாமல் தடுத்தல்)
கற்பூரவல்லியின் மருத்துவ குணங்கள்
பல நூற்றாண்டுகளாக கற்பூரவல்லி பல வகையான நோய் தீர்க்கும் நிவாரணியாகப் பயன்பட்டு வந்துள்ளது. கற்பூரவல்லியின் மருத்துவ குணங்களில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:
- சளி, இருமலைப் போக்குகிறது
- மார்புச் சளியைக் கரைக்கிறது
- சுரத்தைத் தணிக்கிறது
- மூச்சுக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது
- தலைவலியைக் குணப்படுத்த உதவுகிறது
- அசீரணத்தை போக்குகிறது
- வயிற்று உபாதைகளைச் சரி செய்ய உதவுகிறது
- வாய்ப்புண்ணைப் போக்குகிறது
- பல் வியாதிகளைத் தடுக்க உதவுகிறது
- சரும வியாதிகளைப் போக்குகிறது
- மூட்டுப் பிரச்சினைகளையும் (arthritis) எலும்பு தேய்மானத்தையும் (osteoporosis) சரி செய்ய உதவுகிறது
- பூச்சிக்கடி உட்பட சருமத்தில் ஏற்படும் காயங்களையும் கட்டிகளையும் ஆற்றுகிறது
- இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவைக் குறைக்கிறது
- பாக்டீரியா, வைரஸ் மற்றும் fungal தொற்றுக்களை அழிக்க உதவுகிறது
- மாதவிடாய் காலத்து வலியைத் தவிர்க்க உதவுகிறது
- தொடர் விக்கலைப் போக்குகிறது
- மன அழுத்தத்தைப் போக்குகிறது
கற்பூரவல்லியும் தோற்றப் பொலிவும்
- பருக்களைப் போக்குகிறது
- தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது
- பொடுகை நீக்குகிறது
கற்பூரவல்லி உணவுகள்
மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியைப் பயன்படுத்தி செய்யக் கூடிய உணவு வகைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்:
கற்பூரவல்லி ரசம்
மூலிகை ரசம் என்றால் மருந்து மாதிரி இருக்கும் என்று எண்ணமிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். கற்பூரவல்லி ரசத்தின் மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, அதன் சுவையும் அபாரம்தான்.
கற்பூரவல்லி சட்னி
இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏற்ற சுவையான சட்னிகளில் நீங்கள் தாராளமாகக் கற்பூரவல்லி சட்னியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை
- சுமார் 20 கற்பூரவல்லி இலைகளை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- அவ்விலைகளோடு இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய், இரண்டு அல்லது மூன்று மேசைக்கரண்டி தேங்காய், சிறிது இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- தேவையென்றால் கடுகு தாளித்துக் கொள்ளலாம். கற்பூரவல்லி இலைகளை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியும் அரைக்கலாம். சிறிது உளுத்தம் பருப்புடன் இரண்டு சிவப்பு மிளகாயை சேர்த்து எண்ணெயில் வதக்கி இலைகளுடன் அரைத்தும் கற்பூரவல்லி சட்னி செய்யலாம்.
கற்பூரவல்லி தேநீர்
கற்பூரவல்லியின் வாசனையே உங்களை சுண்டி இழுக்கும். அதில் தேநீர் தயாரித்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும் அப்படித்தான்.
செய்முறை
- நான்கு அல்லது ஐந்து கற்பூரவல்லி இலைகளை எடுத்து நன்றாகக் கழுவவும்.
- ஒரு கோப்பைத் தண்ணீரில் கற்பூரவல்லி இலைகளைச் சற்று நொறுக்கி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- அடுப்பை அணைத்து கற்பூரவல்லி தேநீரை வடிகட்டவும். தேவையென்றால் சுவையை அதிகரிக்க சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்.
கற்பூரவல்லி தேநீரின் பலன்கள்
- சளி, இருமலைப் போக்குகிறது
- சுரத்தைத் தணிக்கிறது
- அசீரணத்தை போக்குகிறது
- வயிற்று உபாதைகளை சரி செய்கிறது
- தலைவலியைப் போக்க உதவுகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
- மாதவிடாய் காலத்து வலியைப் போக்க உதவுகிறது
உடற்பயிற்சி செய்யும் நாட்களில், leg roller-ஐ பயன்படுத்தி விட்டு ஒரு கோப்பை கற்பூரவல்லி தேநீர் குடித்தால்…சுவைத்துப் பாருங்கள் தெரியும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.