இன்று ஒரு ஆசனம் (27) – தண்டாசனம் (Staff Pose)
பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் அற்புதமான பயிற்சியாகும். ‘தண்டு’ என்றால் ‘கம்பு’ என்றும் ‘முதுகுத்தண்டு’ என்றும் பொருள். தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஆசனமாகும். இவ்வாசனம் முதுகுத்தண்டை நீட்சியடைய (stretches) வைக்கிறது.