‘நவ’ என்றல் வடமொழியில் ‘படகு’ என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்ப்தல் படகாசனம் ஆகிறது. தண்ணீரில் படகு தனது சமநிலை மாறாமல் எப்படி செல்கிறதோ அது போல உடலின் சமநிலையை இந்த ஆசனம் பராமரிக்கிறது. அதாவது, மணிப்பூரகம் (pancreas) சுவாதிட்டானம் (adrenal) ஆகிய இரு சக்கரங்களையும் இயக்குகிறது. மணிப்பூரகமும் சுவாதிட்டானமும் நன்கு இயங்கும் போது தன் மதிப்பு, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு ஆகிய உணர்வுகள் அதிகரிக்கின்றன. இந்த உணர்வுகள் உடல் என்னும் படகின் சமநிலையை பாதுகாக்கிறது.
படகு போன்ற நிலையில் ஆடாமல் இருந்து பழகிவிட்டால் மனமும் எந்த தடுமாற்றமும் இன்றி வானத்தில் சஞ்சலமின்றி பறக்கும் பறவை போல் சீராக இலக்கை நோக்கி பயணிக்கும். படகும் மனமும் ஆடாமல், கவிழாமல் கொண்டு போகும் படகோட்டி இந்த நவாசனம்.
உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
நவாசனத்தின் மேலும் சில பலன்கள்
- மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
- சீரண மண்டலத்தின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது.
- தொப்பையைக் கரைக்க உதவுகிறது.
- ஹைப்போ தைராய்டு பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.
- முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
- குடலிறக்கத்தை போக்க உதவுகிறது.
- சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது.
- பிராஸ்டேட் சுரப்பின் (prostate gland) செயல்பாட்டை செம்மையாக்குகிறது.
செய்முறை
- விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
- கால்களை சற்று மடக்கி, மேலே தூக்கவும். அவ்வாறு தூக்கும் போது உடலை சற்று பின்னால் சாய்க்கவும்.
- கால்களை வளைக்காமல் தரையிலிருந்து சுமார் 45 degree உயரத்துக்கு நீட்டவும்.
- கைகளை கால்களுக்கு மேல் நீட்டவும்.
- இப்பொழுது உங்களின் புட்டம் மட்டுமே தரையில் இருக்கும். உங்கள் உடலை பார்க்க ஒரு படகு போல் இருக்கும்.
- இதே நிலையில் 20 வினாடிகள் இருந்த பிறகு கால்களை தளர்த்தி நேராக உட்காரவும்.
குறிப்பு
முதுகுத்தண்டு கோளாறுகள், தீவிர முதுகு வலி, இடுப்பு பிரச்சினை, அதிக அல்லது குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நவாசனத்தை பயிலக் கூடாது.
இன்று ஒரு ஆசனம் (33) – பத்ராசனம் (Auspicious Pose / Gracious Pose)
‘பத்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘புனிதமான’ என்றும் ‘கருணையுள்ள’ என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம். பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை
இன்று ஒரு ஆசனம் (31) – உஸ்ட்ராசனம் (Camel Pose)
வடமொழியில் உஸ்ட்ரா என்றால் ஒட்டகம். ஒட்டகங்கள் பாலைவனத்தில் பல மைல் தூரத்துக்கு ஓடுகின்றன என்றால் அதற்குக் காரணம் அதன் பலமான நுரையீரல்களே ஆகும். உஸ்ட்ராசனம் செய்யும் போது மார்பு பகுதி விரிந்து மூச்சு மண்டலம்
இன்று ஒரு ஆசனம் (30) – யோகமுத்திராசனம் (Psychic Union Pose)
யோகமுத்ரா என்பது முத்திரையை ஆசனத்தில் செய்வது. இந்த ஆசனம் மனநல ஆற்றலின் ஓட்டத்தை (Psychic energy flow) சீராக்குகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிப்புற உடலியக்கத்துக்கான மூளையின் நடவடிக்கைகளை வெளிப்புற உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. யோகமுத்திராவின் மேலும்