மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நலன்கள் பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்ததைப் படித்து விட்டீர்களா? இணையதளம் மூலமாக தண்ணீருக்கான மண்பானை வாங்க விரும்புபவர்களுக்கு உதவியாக இந்தப் பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். பொருள் பற்றிய தகவல்கள், வாடிக்கையாளர்களின் கருத்துகள் ஆகியவற்றோடு வாய்ப்புள்ள இடங்களில் சொந்த அனுபவத்தையும் கணக்கில் கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுக்காக மண்பானைகளைத் தேர்வு செய்யும் போது, வேறு சில சுவாரசியமான பொருட்களும் கண்ணில் பட்டன. அவற்றையும் பகிர வேண்டும் என்ற ஆவலோடு, இதோ, தண்ணீருக்கான சிறந்த மண்பானைகளும் சில சுவாரசியமான பொருட்களும் உங்கள் பார்வைக்கும் பரிசீலனைக்கும்.
தண்ணீருக்கான சிறந்த மண்பானைகள்
Source: Photo by ROMAN ODINTSOV: https://www.pexels.com/photo/little-clay-vases-a-and-delicate-flowers-8063888/
கீழ்க்கண்டவற்றில் என் மனதைக் கவர்ந்தவை என்பதால் எதுவும் இணைக்கப்படவில்லை. மேலே குறிப்பிட்டிருக்கும்படி வாடிக்கையாளர்களின் கருத்துகளே முக்கிய அளவுகோலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1) Earthen Water Pot With Lid and Tap (6 Litre)
இந்த மண்பானை steel குழாய் மற்றும் களிமண்ணாலான குவளையுடன் கிடைக்கிறது. தட்டையான அடிப்பாகத்தைக் கொண்டிருப்பதால், நீங்கள் பானை வைக்கும் ஸ்டாண்ட் வாங்கவில்லை என்றாலும் இதை எந்த சமதரையிலும் எளிதாக வைத்துப் பராமரிக்கலாம்.
2) Clay Water Pot with Lid, Tap and Stand (7 Litre)
உருளை வடிவத்து களிமண் பானையான இது, பானைக்கான மூடி, மண் குவளை, ஸ்டாண்ட் மற்றும் ஒரு சிறு மரத் தட்டுடன் விற்கப்படுகிறது. ஸ்டாண்ட் உடன் விற்கப்படும் இந்த பானைக்கு மேசையில் இடம் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த மண்பானையின் வடிவமைப்பே அசத்தல் ரகமாக இருக்கிறது.
3) Earthen Water Pot with Lid and Tap (4 litre)
நான்கு லிட்டர் கொள்ளளவுடன் கூடிய இந்த மண்பானை மூடி மற்றும் குழாயுடன் விற்கப்படுகிறது. குவளை இல்லாதது குறையாகத் தோன்றாத காரணம் இதன் அழகான வடிவமைப்பினால் இருக்கலாம். இதற்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும்பான்மையான அளவில் நல்ல மதிப்பாய்வே கிடைத்திருக்கிறது.
மண்பானைகளுக்கான ஸ்டாண்டுகள்
மண்பானை வைப்பதற்கான ஸ்டாண்டுகள் மிகவும் நேர்த்தியானதாகவும், தரமானதாகவும் கிடைக்கின்றன. இதோ, முக்கியமான சில:
களிமண்ணால் செய்யப்பட்ட இந்த ஸ்டாண்ட் நேர்த்தியாகவும் வாடிக்கையாளர் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனால், இதன் கீழ்ப்பகுதியில் தட்டு ஏதும் இல்லை என்பதால் பானையின் வெளிப்புறமாய் வெளியேறக் கூடிய நீரை சேகரிக்க நாமே ஒரு தட்டு வைத்தாக வேண்டும்.
இந்த மண்பானை ஸ்டாண்டை வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
இந்த மண்பானையின் கீழ் உள்ள ஸ்டாண்ட் தனியாக விற்கப்படுகிறது. இந்த ஸ்டாண்டுடன் ஒரு ப்ளாஸ்டிக் தட்டும் குவளைகள் வைப்பதற்கான ஒரு ட்ரேயும் விற்கப்படுகின்றன. இதற்கான வாடிக்கையாளர் கருத்துகள் சிறந்த முறையில் இருக்கின்றன.
இந்த ஸ்டாண்டை வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மண்பானைகள் தவிர தண்ணீர் குவளைகளும் விற்கப்படுகின்றன.
அழகான தண்ணீர் கூஜாக்களும் கூட.
என்னைக் கவர்ந்த வேறு சில சுவாரசியமான பொருட்கள்
நல்ல மண்பானைகளை தேடி வகைப்படுத்தும் முயற்சியில் வேறு சில அழகான, தரமான பொருட்களும் கவனத்தைக் கவர்ந்தன. இதோ உங்கள் பார்வைக்கு:
முழுவதும் இயற்கையான முளை கட்டுவதற்கான மண்பாண்டம். இது இரண்டு அடுக்காகவும் கிடைக்கிறது.
முளை கட்ட உதவும் இந்த அழகிய, நேர்த்தியான மண்பாண்டத்தை வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
இந்த தேநீர் கூஜா மிகவும் வித்தியாசமானதாக இருந்ததால் இதை பகிர நினைத்தேன். ஆனால், இதற்கான வாடிக்கையாளர் கருத்து எதுவும் இதுவரை இல்லை.
ஊதா நிற மண் தேநீர் கூஜாவின் விவரங்களைப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
சிறிய ஸ்டீல் பிடியுடன் கூடிய நேர்த்தியான ஆட்டுக்கல். சமையலறை மேடைக்கு மிகவும் ஏற்றது. அவ்வப்போது மிக்ஸிக்கு ஓய்வு கொடுத்து கைக்கு கூடுதல் வேலை கொடுக்க எண்ணினால், உடனே வாங்கவும்.
அமேசானில் இந்த ஆட்டுக்கல்லை வாங்க விரும்புவோர் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
சமீப வருடங்களில் மண்பானை மறுபிறப்பு எடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழும் ஊர்ப்புறங்களில் கூட மண்பானை சமையல் குறைந்திருந்த வேளையில், உடல் நலம் பற்றிய விழிப்புணர்வின் காரணமாய் சமையலறையில் மண்பானைகள்
தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி?
வெற்றுத் தரையில் ஆசனம் பயிலக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். பருத்தி துணியை விரித்து யோகப் பயிற்சி செய்யலாம் என்றாலும், திடமான, கசங்காத, சறுக்காத, அதே நேரத்தில் உடலை உறுத்தாத மென்மையோடும், உடலுக்கு
திருமூலர் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து
நூலின் தலைப்பு: திருமூலர் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து நூல் ஆசிரியர்: ச. இரா. தமிழரசு இறை நூலாக பலராலும், மருத்துவம் சார்ந்த நூலாக சிலராலும் கருதப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருமூலரின்