உடல் மன ஆரோக்கியம்

நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

நடைப்பயிற்சி செய்யும் நாட்களில் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் மின்னல் போல் தோன்றி மறையும் எண்ணம் ஒன்று உண்டு. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர், நடைப்பயிற்சி என்பதாகத் தனியாக ஒன்று பெரும்பாலும் இருந்ததில்லை; அதற்கான தேவையும் இருந்ததில்லை. பழைய தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் மக்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களுக்கும் கடைகளுக்கும் நடந்து செல்வதாகவே இருக்கும். கடைகள் முதல் பள்ளிக்கூடங்கள் வரை பெரும்பாலும் சுற்று வட்டாரத்திலேயே இருந்தன; விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை இருந்த காலகட்டமாகையால் வேலை மற்றும் தேவையை ஒட்டி நடை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. தேவையான நேரங்களில் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் சவாரிக்கு உகந்ததாக இருந்தன.  அலுவலகத்திற்குச் செல்பவர்கள் சைக்கிள் அல்லது பேருந்து பயணம் செய்வார்கள். அதிலும், பேருந்தைப் பிடிக்கவே நெறைய நடக்க வேண்டியும் இருக்கும். சைக்கிள் வைத்திருப்பதே ஒரு வித கவுரவம் போன்றதாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் கார் போன்ற வாகனங்கள் மிக அபூர்வம்.

ஆனால் இன்று, வாகன சவாரி என்பது காலத்தின் தேவையாகி விட்டது. இந்தியாவில் 1951-ல் 3 இலட்சமாக இருந்த பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 2016-ல் 2300 இலட்சமாக உயர்ந்து விட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இதிலிருந்தே நாம் தேவை மற்றும் வேலையை ஒட்டிய நடைக்கு விடை கொடுத்து விட்டதைத் தெரிந்து கொள்ளலாம். வேறு வழியும் இல்லை. நவீன தொழில்துறையின் காரணமாக நகரங்கள் விரிவாக்கமும், அதையொட்டி வாகன சவாரியை சார்ந்து பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் செல்வதான சூழலும் உருவாகி விட்ட இக்காலக்கட்டத்தில் நடை என்பது அரிதாகி விட்டது.

இதோ 1979-ல் சென்னை இரயில் நிலையம். அப்பொழுது கூட நிறைய குதிரை வண்டி சவாரியைப் பார்க்க முடிந்திருக்கிறது.

புகைப்படத்திற்கு நன்றி: https://www.facebook.com/MadrasTrends/photos/a.366781116992798/366781276992782/?type=3&theater

பழைய சென்னையின் சில அற்புதமான புகைப்படங்களைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். இது மிகவும் அருமையான தொகுப்பு. அந்தக் காலத்திற்கே நம்மை இட்டுச் செல்லுகிறது.

https://fb.watch/4ZhERIGJ9y/

இதோ 1961-ல் நேதாஜி சாலை. தனியார் வாகனங்களை விட பாதசாரிகள் எண்ணிக்கைக் கூடுதலாக இருக்கிறது:

புகைப்படத்திற்கு நன்றி: https://www.cntraveller.in/story/madras-day-celebrating-city-14-pictures/

சென்னை 2020-ல்

புகைப்படத்திற்கு நன்றி: https://www.thehindu.com/news/cities/chennai/traffic-congestion-near-gemini-flyover/article30478688.ece

கால்களுக்கு பதிலாக சக்கரங்கள் சாலைகளை ஆக்கிரமித்தது உடலுழைப்பு குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாகியது. உடலுழைப்புக் குறையக் குறைய அதிக உடல் எடை போன்ற உடல் நலம் சார்ந்த சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியதாகி விட்ட இக்காலத்தில்தான் நடைப்பயிற்சி என்பது ஒரு தினசரி நிகழ்வாகப் பரிமாணம் பெற்றது.

1972-ல் சென்னை அண்ணா நகர்

புகைப்படத்திற்கு நன்றி: https://en.wikipedia.org/wiki/Anna_Nagar

சென்னை கடற்கரை சாலை 2020-ல்:

புகைப்படத்திற்கு நன்றி: https://www.thehindu.com/news/cities/chennai/chennai-residents-flout-lockdown-norms-throng-beaches/article31777212.ece

நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

பல்வேறு ஆய்வுகள் மூலம் நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், உங்களின் சொந்த அனுபவத்தை விட வேறு சிறந்த சான்று என்ன இருக்க முடியும்? ஆயினும், உங்களுக்காக, ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட நடைப்பயிற்சி நன்மைகள் சில:

  • இருதயத்தைப் பலப்படுத்தி இருதயத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது
  • நுரையீரல் நலனைப் பாதுகாத்து நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • அதிக உடல் எடையைக் குறைக்கிறது
  • தொப்பையைக் கரைக்கிறது
  • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
  • உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
  • சீரணத்தை மேம்படுத்துகிறது
  • அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
  • ஆயுளை நீட்டிக்கிறது
  • எலும்புகளையும் மூட்டுகளையும் பலப்படுத்துகிறது
  • கால்களைப் பலப்படுத்துகிறது; கால் தசைகளை உறுதியாக்குகிறது
  • உடலின் ஆற்றலை அதிகப்படுத்துகிறது
  • படுத்ததிலிருந்து உறக்கத்திற்குச் செல்லும் நேரம், தூங்கும் நேரம் மற்றும் தூக்கத்தின் தன்மை ஆகியவை மேம்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5093382/)
  • திறந்தவெளியில் நடைப்பயிற்சி செய்யும்போது படைப்புத் திறன் அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. (https://psycnet.apa.org/record/2014-14435-001)
  • மன அழுத்தத்தைப் போக்குவதோடு மனதிற்குப் புத்துணர்வையும் ஊட்டுகிறது

வேறு எந்தப் பயிற்சியிலும் ஈடுபடாதவர்கள் வாரத்தில் அய்ந்து முதல் ஆறு நாட்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்கலாம். மற்ற பயிற்சிகளோடு நடைப்பயிற்சியும் செய்பவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்கலாம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்