உடல் மன ஆரோக்கியம்

ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்களுக்கான பலன்களும் அவற்றை இயங்க வைக்கும் முறைகளும்

இதுவரை, முதலாம் சக்கரம் தொடங்கி அய்ந்தாம் சக்கரம் வரை ஒவ்வொரு சக்கரமாக பார்த்து வந்தோம். இன்று நாம் ஆறாவது மற்றும் ஏழாவது சக்கரங்களை சேர்த்துப் பார்க்கப் போகிறோம். ஏனெனில், இக்காலத்தில் ஆறாவது சக்கரமான ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடமாகக் கூறப்படுவது, திருமூலரின் திருமந்திர நூலின்படி ஏழாவது சக்கரமான குரு சக்கரத்தின் இருப்பிடமாகும். திருமந்திர நூலின்படி ஆக்ஞா சக்கரம் இருப்பது குரு சக்கரத்தின் இருப்பிடத்திற்குச் சற்றுக் கீழே. ஆகையால் இவ்விரண்டையும் இன்று ஒன்றாகப் பார்க்கவிருக்கிறோம்.

Table of Contents

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் ஆறாவதாக ஆக்ஞா சக்கரமும் ஏழாவதாக குரு சக்கரமும் உள்ளன (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு என்ற பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). பொதுவாக ஆக்ஞா சக்கரம் புருவமத்தியில் உள்ளதாகக் கூறப்படுவது உண்டு. ஆனால், திருமூலரின் திருமந்திர நூலின்படி, ஆக்ஞா சக்கரம் புருவமத்திக்குச் சற்று கீழும் குரு சக்கரம் புருவமத்தியிலும் இருக்கின்றன.

ஆக்ஞா சக்கரம் என்று அழைக்கப்படுகிற பிட்யூட்டரி சுரப்பு மூளையின் அடிப்பகுதியில் மூக்கின் ஆரம்பத்திற்கு நேர் பின்னால் அமைந்திருக்கிறது. குரு சக்கரமாகிய ஹைப்போதலாமஸ் சுரப்பு பிட்யூட்டரி சுரப்புக்கு சற்று மேலாகவும் புருவமத்திக்குப் பின்னாலும் அமைந்திருக்கிறது (ஆக்ஞா சக்கரம் பிட்யூட்டரி சுரப்பியை நிர்வகிப்பதாக இக்காலத்தில் கூறப்பட்டாலும், ஆக்ஞா சக்கரம் இருக்குமிடமாக அவர்கள் சொல்வது குரு சக்கரம் இருக்குமிடத்தையே, அதாவது ஹைப்போதலாமஸ் இருக்கும் இடத்தைக் குறிக்கும் பகுதி).

திருமூலர் ஆக்ஞா சக்கரம் பற்றி திருமந்திரத்தின் 16-வது பாடலில் இவ்வாறு பாடியுள்ளார். இதில் ஆக்ஞா சக்கரத்தை சக்தியாகக் குறிப்பிடுகிறார்.

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை

மாது குலாவிய வாள்நுதல் பாகனை

யாது குலாவி அமரருந் தேவருங்

கோது குலாவி குணம்பயில் வாரே.

இப்பாடலில் தலையில் உள்ள சக்கரங்களைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுகிறார்.  கொன்றைப் பூ நரம்பின் வடிவத்தில் உள்ள பகுதியின் கீழ் பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் பீனியல் சுரப்பிகள் இருப்பதாக திருமூலர் கூறியிருக்கிறார். அவர் கொன்றைப் பூ நரம்பின் வடிவம் என்று குறிப்பிடுவது corpus callosum-ஐயே. மேலும் ஹைப்போதலாமஸ் என்கிற குரு சக்கரம்தான் பிட்யூட்டரியான ஆக்ஞா சக்கரத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

(இப்பாடலைப் பற்றிய விளக்கத்தின் ஒரு பகுதி மரு. ச. இரா. தமிழரசுவின் திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து’ என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)

கடந்துநின் றான்கம லம்மல ராதி

கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்

கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்

கடந்துநின் றான் எங்கும் கண்டுநின் றானே.

(திருமந்திரம் பாடல் 14)

இப்பாடலில் குரு சக்கரமாகிய ஹைப்போதலாமஸ் நெற்றிக்கு நேர் எதிர்புறம் உள்ளே இருக்கிறது என்பதைத் திருமூலர் குறிப்பிடுகிறார். ஆக, தற்காலத்தில் ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடமாகக் கூறப்படும் இடத்தில் இருப்பது குரு சக்கரமாகிய ஹைப்போதலாமஸ் என்பதைத் திருமூலர் கூறியிருக்கிறார்.

(இப்பாடலைப் பற்றிய விளக்கத்தின் ஒரு பகுதி ச. இரா. தமிழரசுவின் திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து’ என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி                                 

போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி                             

போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி                            

போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

(திருமந்திரம் பாடல் 44)

திருமந்திரத்தின் 44-வது பாடலில் உடலில் உள்ள சக்கரங்களைக் கட்டுப்படுத்துவது பிட்யூட்டரி சுரப்பியான ஆக்ஞா சக்கரம் என்பதையும் அந்த ஆக்ஞா சக்கரத்தையும் கட்டுப்படுத்துவது ஹைப்போதலாமஸ் என்கிற குரு சக்கரம் என்பதையும் விளக்குகிறார்.

(இப்பாடலைப் பற்றிய விளக்கத்தின் ஒரு பகுதி ச. இரா. தமிழரசுவின் திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து’ என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)

ஆக, இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது:

  • முக்கிய சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு.
  • ஆக்ஞா சக்கரம் மூக்குத் துவக்கத்தின் நேர் பின்னால் மூளையில் அமைந்திருக்கிறது.
  • குரு சக்கரம் புருவமத்திக்குப் பின்னால் மூளையில் ஆக்ஞா சக்கரத்திற்குச் சற்று மேலே அமைந்துள்ளது.
  • ஆக்ஞா சக்கரம் என்று அழைக்கப்படுவதுதான் பிட்யூட்டரி சுரப்பி.
  • குரு சக்கரம் என்று அழைக்கப்படுவதுதான் ஹைப்போதலாமஸ் சுரப்பி.
  • தலையில் மூன்று சுரப்பிகள் உள்ளன.
  • ஆக்ஞா சக்கரம் உடலிலுள்ள சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • குரு சக்கரம் ஆக்ஞா சக்கரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

ஆக்ஞா சக்கரம்

ஆக்ஞா சக்கரம் மூக்கின் துவக்கத்திற்கு நேர் பின்னால் மூளையில் அமைந்திருக்கிறது என்பதையும் ஆக்ஞா சக்கரம்தான் பிட்யூட்டரி சுரப்பி என்பதையும் பார்த்தோம். இப்போது மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

ஆக்ஞா சக்கரத்தின் தன்மைகள் மற்றும் ஆக்ஞா சக்கரத்தோடு தொடர்புடைய உறுப்புகள்

ஆக்ஞா சக்கரம், குரு சக்கரத்தோடு இணைந்து உடலின் பல்வேறு முக்கிய இயக்கங்களை நிர்வகிக்கிறது. மறு உற்பத்தி, குழந்தைப் பிறப்பிற்கு உதவுதல், பால் சுரத்தல், குழந்தைப் பேறு ஆகியவற்றை நிர்வகிப்பது ஆக்ஞா சக்கரமாகும். தைராய்டு, அட்ரீனல் சுரப்பி ஆகியவற்றிலும் ஆக்ஞா சக்கரத்தின் செயல்பாட்டின் தாக்கம் இருக்கிறது.

பிட்யூட்டரி சுரப்பியின் சுரப்புகள் மூளை, நோய் எதிர்ப்புத் திறன், சிறு நீரகம், சருமம், கர்ப்பப்பை ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படுத்துவதால் இவை அனைத்தும் சீராக இயங்க, ஆக்ஞா சக்கரம் சீராக செயல்பட வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஆக்ஞா சக்கரம் சீராக இயங்காகததற்கான உடல், மன அறிகுறிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் ஆக்ஞா சக்கரத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்
  • தலைவலி
  • மறதி
  • உடல் எடையில் மாற்றம்
  • கண் கோளாறுகள்
  • மலச்சிக்கல்
  • அதிக சிறுநீர் கழித்தல்
  • உடலுறவில் நாட்டமின்மை
  • குழந்தைப் பேறு இல்லாமை
  • குறைவான உடல் வளர்ச்சி
  • மூட்டு வலி
  • சோர்வு
  • தூக்கமின்மை
  • சருமக் கோளாறுகள்
  • நீர்ச்சத்து குறைப்பாடு
  • சீரற்ற பேச்சுமுறை
மன அறிகுறிகள்
  • பதட்டம்
  • பயம்
  • கோபம்
  • மன அழுத்தம்
  • எதிலும் நாட்டமின்மை
  • தனிமைப்படுதல்
  • மனநிலை மாற்றங்கள்
  • எரிச்சல் உணர்வு
  • தன்மதிப்பு இல்லாமை

ஆக்ஞா சக்கரத்தை சீராக இயங்க வைப்பது எப்படி?

  • ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
  • எசன்சியல் எண்ணெய்
  • சுய ஊக்கம்
  • உணவு
  • பொது விதிகள்

ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்

ஆக்ஞா சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்:

1) உத்தானாசனம்

2) திரிகோணாசனம்

3) அர்த்த பிண்ச மயூராசனம்

4) ஊர்த்துவ தனுராசனம்

5) உஸ்ட்ராசனம்

6) பாலாசனம்

7) இராஜ கபோடாசனம்

8) சர்வாங்காசனம்

9) மத்ஸ்யாசனம்

10) சிரசாசனம்

ஆக்ஞா சக்கரத்திற்கான எசன்சியல் எண்ணெய்கள்

ஆக்ஞா சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்த பின்வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • Frankincense essential oil
  • Sandalwood essential oil
  • Vetiver essential oil

எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும். எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடத்தில் தடவலாம் அல்லது பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

சுய ஊக்கம்

சுய ஊக்க வாக்கியங்களின் ஆற்றல் மகத்தானது. ஆக்ஞா சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்களை ஒவ்வொரு நாளும் பல முறை சொல்வதன் மூலம் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

ஆக்ஞா  சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்கள்

  • என் ஆக்ஞா சக்கரம் சீராக இயங்குகிறது
  • நான் சுறுசுறுப்பாக இயங்குகிறேன்
  • என் மனம் அமைதியாக இருக்கிறது
  • என் பேச்சில் தெளிவும் உறுதியும் இருக்கின்றன
  • நான் என் திறன்களை அங்கீகரிக்கிறேன்
  • என்னைச் சுற்றி உள்ளவர்களிடம் நல்ல உறவில் இருக்கிறேன்

சுய ஊக்க எண்ணங்களை நீங்களாகவே உருவாக்கலாம். பிறிதொரு நாளில் இதை விரிவாகப் பார்க்கலாம்.

ஆக்ஞா சக்கரத்திற்கான உணவு

ஆக்ஞா சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஒன்றையேனும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்:

  • கீரை வகைகள்
  • தானியங்கள்
  • பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகள்
  • பயறு வகைகள்
  • முட்டை
  • மீன்
  • இறைச்சி

ஆக்ஞா சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆக்ஞா சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்தலாம்:

  • யோகா மற்றும் பிற உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.
  • மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள்.
  • சமூக உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • உடல் எடையை சீராக வைக்கும் உணவுப் பழக்கங்களையும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வாருங்கள்.
  • இரவு ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். படுப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக கணினி, கைப்பேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இரவு படுப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு இரவு உணவை எடுத்துக் கொள்ளவும்.
  • ஆக்ஞா சக்கரத்தை மனதில் வைத்து தியானம் செய்யவும்.

குரு சக்கரம்

மனித உடலின் எட்டு முக்கிய சக்கரங்களில் ஏழாவதாக உள்ளது குரு சக்கரமாகும். இது ஆக்ஞா சக்கரம் இருப்பதாகப் பொதுவாகக் கூறப்படும் இடத்தில் அமைந்துள்ளது – அதாவது புருவமத்திக்குப் பின்னால் மூளையில் இருக்கிறது. இது ஆக்ஞா சக்கரத்திற்குச் சற்று மேலே இருக்கிறது.

குரு சக்கரத்தின் தன்மைகள் மற்றும் குரு சக்கரத்தோடு தொடர்புடைய உறுப்புகள்

குரு சக்கரம் ஆக்ஞா சக்கரத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள சக்கரங்களின் தலைமையாகக் கருதப்படும் ஆக்ஞா சக்கரத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது குரு சக்கரம் என்பதன் மூலம் உடல்-மன இயக்கத்தில் குரு சக்கரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

தன்னியக்க நரம்பு மண்டலத்தை குரு சக்கரம் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பம், இருதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், தாகம், பசி, செரிமானம், உறக்கம்-விழிப்பு சுழற்சி, உடல் எடை, பாலுணர்ச்சி, வலி, நடத்தை மற்றும் உணர்வுகள் உள்ளிட்டவைகளை நிர்வகிப்பது குரு சக்கரமாகும். கற்றல், நினைவாற்றல் உள்ளிட்ட மூளைச் சார்ந்த பணிகளையும் ஹைப்போதலாமஸ் நிர்வகிக்கிறது.

குரு சக்கரம், தேவைக்கேற்ப, பல்வேறு ஹார்மோன்களின் சுரப்புகளைத் தூண்டவும் தடுக்கவும் செய்கிறது. ஆக்ஞா சக்கரத்தின் மூலமாக வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை குரு சக்கரம் நிர்வகிக்கிறது.

மகிழ்ச்சி, சிரிப்பு, கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகளை குரு சக்கரம் நிர்வகிக்கிறது. சூழலுக்கு ஏற்றபடி எதிர்வினை ஆற்ற சுவாதிட்டானத்திற்கு சமிக்ஞைகளை அளிப்பது குரு சக்கரமாகும். அறிவுத்திறன், உள்ளுணர்வு, உயர்ந்த சிந்தனை இவையாவும் குரு சக்கரம் சீராக இயங்குவதின் அடையாளங்கள்.

குரு சக்கரம் சீராக இயங்காகததற்கான உடல், மன அறிகுறிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் குரு சக்கரத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்
  • பசி உணர்வு சார்ந்த கோளாறுகள்
  • உடல் சூட்டில் மாற்றங்கள்
  • தூக்கமின்மை
  • தலைவலி
  • பார்வைக் கோளாறு
  • உடலுறவில் நாட்டமின்மை
  • பலவீனம்
  • உடல் சோர்வு
  • சீரற்ற எடை
  • அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • வயிற்றுப்போக்கு
  • சீரற்ற இரத்த அழுத்தம்
  • போதிய உடல் வளர்ச்சியின்மை
  • தாய்ப்பால் சுரக்காமல் இருத்தல்
  • பிட்யூட்டரி மற்றும் அட்ரீனல் சார்ந்த கோளாறுகள்
  • வெப்பத்தைத் தாங்க முடியாதிருத்தல்
  • குழந்தைப் பேறு இல்லாமை
மன அறிகுறிகள்
  • அதீத கோபம்
  • அதிகமாக எரிச்சல் அடைதல்
  • அதிக சப்தம் போட்டு சிரித்தல், கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தல்
  • பதட்டம்
  • அதீத விமர்சனப் போக்கு
  • குறைவான கற்பனைத் திறன்
  • மனநிலை மாற்றங்கள்
  • எதிலும் ஈடுபாடின்மை
  • கவனக் குறைபாடு
  • மறதி

குரு சக்கரத்தை சீராக இயங்க வைப்பது எப்படி?

  • குரு சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
  • எசன்சியல் எண்ணெய்
  • சுய ஊக்கம்
  • உணவு
  • பொது விதிகள்

குரு சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்

குரு சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்:

1) விருஷாசனம்

2) பரிகாசனம்

3) உபவிஸ்த கோணாசனம்

4) அதோ முக கபோடாசனம்

5) ஏக பாத இராஜ கபோடாசனம்

6) இராஜ கபோடாசனம்

7) இராஜ புஜங்காசனம்

8) சர்வாங்காசனம்

9) பத்ம ஹலாசனம்

10) மத்ஸ்யாசனம்

11) விபரீதகரணி

12) அர்த்த சிரசாசனம்

13) சிரசாசனம்

 

குரு சக்கரத்திற்கான எசன்சியல் எண்ணெய்கள்

குரு சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்த பின்வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • Clary Sage essential oil
  • Cypress essential oil
  • Frankincense essential oil
  • Juniper essential oil
  • Lavender essential oil
  • Marjoram essential oil
  • Myrrh essential oil
  • Rosemary essential oil
  • Sandalwood essential oil
  • Vetiver essential oil

எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும். எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து குரு சக்கரத்தின் இருப்பிடத்தில் தடவலாம் அல்லது பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

சுய ஊக்கம்

சுய ஊக்க வாக்கியங்களின் ஆற்றல் மகத்தானது. குரு சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்களை ஒவ்வொரு நாளும் பல முறை சொல்வதன் மூலம் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

குரு  சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்கள்

  • எனது குரு சக்கரம் சீராக இயங்குகிறது
  • என் மனதில் அமைதி நிறைந்திருக்கிறது
  • நான் சிறந்த அறிவுத்திறனோடு இருக்கிறேன்
  • எனது உள்ளுணரும் திறன் சிறப்பாக இயங்குகிறது
  • என் உள்ளுணர்வு எனக்கு சரியான வழி காட்டும் என நான் முழுமையாக நம்புகிறேன்
  • நான் பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்பு கொண்டிருக்கிறேன்
  • எனது நினைவாற்றல் அபாரமாக இருக்கிறது
  • எனக்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகமாக இருக்கிறது

சுய ஊக்க எண்ணங்களை நீங்களாகவே உருவாக்கலாம். பிறிதொரு நாளில் இதை விரிவாகப் பார்க்கலாம்.

குரு சக்கரத்திற்கான உணவு

குரு சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஒன்றையேனும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்:

  • கீரை வகைகள்
  • அனைத்து காய்கறி வகைகள்
  • அனைத்து பழ வகைகள்
  • கொட்டை வகைகள்
  • சூரியகாந்தி மற்றும் பூசணி விதைகள்
  • க்ரீன் டீ
  • மீன்

குரு சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் குரு சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்தலாம்:

  • மனதை அமைதிப்படுத்தும் யோகா, பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
  • சமச்சீரான உணவு எடுங்கள்.
  • இரவு ஆழ்ந்த உறக்கம் கொள்ளுங்கள்.
  • குரு சக்கரத்தை மனதில் வைத்து தியானம் செய்யவும்.
  • பிறர் மீது எப்பொழுதும் விமர்சனம் வைப்பதைத் தவிர்க்கவும்.
  • புதிய கலைகளைப் பயிலுங்கள். அது உங்கள் படைப்புத் திறனையும் கற்பனைத் திறனையும் வளர்க்கும்.
Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு – தமிழரின் மருத்துவத் தொன்மை

பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.

Read More »

விசுத்தி சக்கரத்தின் பலன்களும் விசுத்தி சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் அய்ந்தாவதாக உள்ளது விசுத்தி சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). இது வடமொழியில் ‘விசுத்த’ என்றும் ‘விசுத்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘விசுத்த’

Read More »

அனாகத சக்கரத்தின் பலன்களும் அனாகத சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நான்காவதாக உள்ளது அனாகத சக்கரம். வடமொழியில் ‘அனாகத’ என்றால் ‘ஒலிக்கப்படாத’, என்று பொருள்; அதாவது, ஒலிக்கப்படாத

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்