உடல் மன ஆரோக்கியம்

பொலிவு

பொலிவு என்னும் இப்பகுதி வெறும் அழகைப் பற்றியது அல்ல. புற அழகு என்பது அவரவர் பார்வையை பொறுத்தது; தோற்றப் பொலிவு என்பது நமது ஆரோக்கியத்தின் குறியீடு. பிரகாசமான கண்கள் நமது கல்லீரல் செம்மையாக வேலை செய்வதின், நாம் சரியான அளவு உறங்குவதின், நாம் கண்ணுக்கு நலம் தரும் உணவுகளை உண்ணுவதின் குறியீடு. ஆரோக்கியமான, அடர்ந்த கூந்தல் நமது தைராய்டு சுரப்பு சரியாக இயங்குவதின், நம் உடலில் சுண்ணாம்புச் சத்து போதுமான அளவு இருப்பதின், இரத்தம் சரியான அளவு இருப்பதின், நாம் சமச்சீரான உணவை உண்ணுவதின் குறியீடு. அதுபோல்தான் உதடுகளும்,  அது போல்தான் சருமமும். ஆக, நாம் பொலிவாக இருப்பது, ஆரோக்கியமாக இருப்பதின் குறியீடே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது மனம் பற்றியது மட்டுமல்ல, நம் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் முகத்தில் தெரியும் என்பதாகும்.

கூந்தல் தொடங்கி கால் நகம் வரை இயற்கை முறையில் பராமரிப்பது பற்றிய குறிப்புகள் இப்பகுதியில் இடம்பெறும். 

இயற்கையான முறையில் முகப் பொலிவை அதிகரிக்கும் வழிகள்

தோற்றப் பொலிவு என்பது பொதுவாக விளம்பரங்களில் காட்டப்படுவது போல் குறிப்பிட்ட அங்கலட்சணங்களைக் கொண்டிருப்பதும் அல்ல; தோலின் நிறத்திலும் அல்ல.  நலமான உடல் மற்றும் மனமே உண்மையான பொலிவைத் தரும்… 

மேலும் வாசிக்க,

முகப்பருவைப் போக்க இயற்கை மருத்துவக் குறிப்புகள்

புதிதாகப் பரு ஒன்று முளைத்திருப்பதைக் கண்ணாடியில் பார்க்கும் போது, “இது என்ன திடீரென்று புதிதாக ஒரு பரு?” என்று மனதில் தோன்றக் கூடும். ஆனால், பரு உட்பட…

மேலும் வாசிக்க,, 

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்