வடமொழியில் ‘தண்ட’ என்றால் ‘கம்பு’, ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’, ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’, ‘கோனா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால்கள் கைகளால் பிணைக்கப்பட்டு உடல் சற்று சாய்ந்து இருக்க புட்டத்தால் உடலை சமநிலையில் வைக்க வேண்டும்.
தண்டயமன பத்த கோணாசனத்தில் உடல் மட்டுமே சமநிலையில் வைக்கப்படுவதில்லை; மனதும் சமநிலைப்படுத்தப்படுகிறது. இந்த ஆசனத்தை பயில்வதால் சுவாதிட்டான சக்கரம் பலம் பெறுகிறது. இச்சக்கரமே உணர்வுகளோடு தொடர்புடையதாகவும் வளைந்து கொடுக்கும் பண்பையும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் குணத்தையும் வளர்ப்பதாகும். சுவாதிட்டான சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மனதும் சமநிலைத்தன்மையோடு இருக்கிறது.
தண்டயமன பத்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
- சீரண கோளாறுகளைச் சரி செய்கிறது.
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
- இடுப்பை வலுப்படுத்துகிறது.
- தொடைகளைப் பலப்படுத்துகிறது.
- மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.
- கவனத்தை கூர்மையாக்குகிறது.
- மன அழுத்தத்தைப் போக்குகிறது
- தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
- ஆக்கபூர்வமான உணர்வுகளை வளர்க்கிறது.
செய்முறை
- விரிப்பில் அமர்ந்து இரண்டு கால் பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்துத் தரையில் வைக்கவும்.
- கைவிரல்களால் கால் விரல்களை அல்லது பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும்.
- மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உடலைச் சற்றுப் பின்னால் சாய்த்து கால்களை மார்பு உயரத்துக்கு மேலே உயர்த்தவும். இப்போது உங்கள் உடல் எடையை உங்கள் புட்டம் தாங்கியிருக்கும்.
- நேராகப் பார்க்கவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்தப்பின் கால்களைத் தளர்த்தி முந்தைய நிலைக்கு வரவும்.
குறிப்பு
முதுகுத்தண்டு, இடுப்பு, முட்டி ஆகியவற்றில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
கால்களை உயர்த்தியபடி வைக்கக் கடினமாக இருந்தால் yoga block அல்லது அந்த உயரத்தில் உள்ள எதாவது பொருளின் மீது கால்களை வைத்துப் பயிலவும்.
இன்று ஒரு ஆசனம் (41) – ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் (Upward Seated Angle Pose)
நாம் அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் செய்முறையை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தில் ஒரு கால் மட்டும் மேலே நீட்டப்பட்டிருக்கும். ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தில் இரண்டு கால்களுமே பக்கவாட்டில் நீட்டப்பட வேண்டும். வடமொழியில் ‘ஊர்த்துவ’
இன்று ஒரு ஆசனம் (39) – அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் (Half Upright Seated Angle Pose)
வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல் நோக்கும்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருளாகும். இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் ஒரு காலை உயர்த்துவதால் இந்த
இன்று ஒரு ஆசனம் (38) – தண்டயமன பர்மானாசனம் (Balancing Table Top Pose)
வடமொழியில் ‘தண்ட’ என்ற சொல்லுக்குக் ‘கம்பு’ என்றும், ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’ என்றும் ‘பர்மா’ என்ற சொல்லுக்கு ‘மேசையை தாங்கும் பலகை’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் உடல் சமநிலையில் கட்டுப்படுத்தப்பட்டு