காலை உணவாக பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலம் மாறி இப்போது சிற்றுண்டிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. பல வீடுகளிலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற சிற்றுண்டிகளும் அபூர்வமாய் ஒரு சில வீடுகளில் உப்புமாவும் காலை உணவாக உண்ணப்படுகிறது. காலையில் பழைய சோறு சாப்பிடுவது நம் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது. பழைய சோறின் நன்மைகள் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.
பழைய சோறின் நன்மைகள்
வழக்கமான சோறை விட, பழைய சோறில், அதாவது, முதல் நாள் மாலை வடித்து, ஆற வைத்து, தண்ணீர் ஊற்றி வைக்கப்படும் சோறில் மறு நாள் காலையில் உடலுக்கு அவசியமான சத்துகள் பலவும் மிகுந்து இருக்கும்.
புதிதாக வடித்த சோறில் 10 கூறுகள் (compounds) கண்டறியப்படுவதாகவும், 24 மணி நேரம் ஊற வைத்த பழைய சோற்று தண்ணீரில் முக்கிய கூறுகள் உட்பட 23 கூறுகள் கண்டறியப்படுவதாக ஆய்வு ஒன்று அறிவிக்கிறது. நொதித்த உணவுகளில் குடல் நுண்ணுயிரிகள் (intestinal flora) அதிகரிக்கின்றன.
சுடுசோறில் உள்ளதை விட நொதிக்க வைக்கப்பட்ட பழைய சோறில் உயிர்ச்சத்துகளான B1 நான்கு மடங்கும், B2 இரண்டு மடங்கும் B6 மூன்று மடங்கும் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.
பழைய சோறு உண்பதால் உண்டாகும் நன்மைகளில் முக்கியமான சில:
- உடலின் ஆற்றல் அதிகரிக்கப்படுவதால் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.
- நோய் எதிர்க்கும் திறன் கூடுகிறது.
- பழைய சோறு உண்பதால் இரத்தக் குறைபாடு நீங்குகிறது. 12 மணி நேரம் வரை நொதிக்க வைக்கப்படும் சோறில் இரும்புச் சத்தானது, வழக்கமான சோறில் இருப்பதை விட 21 மடங்கு அதிகரிக்கிறது.
- உடலின் சூட்டைத் தணிக்கிறது.
- கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் பழைய சோற்றுத் தண்ணீரில் இருக்கிறது.
- சீரணம் மேம்படுகிறது.
- குடல் புண் குணமாகிறது.
- நொதிக்க வைக்கப்படும் சோறை உண்பதால், சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் ஆகிய கனிமங்கள் உடலால் மேலும் நன்றாக கிரகிக்கப்படுகின்றன.
- பழைய சோறில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகள் அதிகமாய் இருப்பதால் சரும நலன் பாதுகாக்கப்படுகிறது.
- இரத்த அழுத்தம் சீராகிறது
- நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது.
சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு என்கிற பதிவை படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பழைய சோறுடன் என்னென்ன சாப்பிடலாம்?
பொதுவாக, பழைய சோறுடன் சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் சேர்த்து உண்பார்கள். பச்சை மிளகாய் ஒத்துக் கொள்ளாதவர்கள் அதைத் தவிர்த்து விடவும்.
பழைய சோறில் வழக்கமான சோறை விட சற்று கூடுதலாக புரதச் சத்து உள்ளதோடு, புரதம் அதிகமாக கிரகிக்கவும்படுகிறது.
கூடுதல் புரதத்திற்காக வேக வைத்த சுண்டல் மற்றும் உயிர்சத்துகள் மற்றும் கனிமங்களுக்கு பொரியல், கீரை போன்றவற்றை பழைய சோறுடன் உண்ணலாம்.
கூடுதலாக மோர் மிளகாயையும் வறுத்து உண்ணலாம்.
தேங்காய் துவையல், பிரண்டை துவையல், கறிவேப்பிலைத் துவையல் போன்ற துவையல்களில் ஏதேனும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பழைய சோற்று தண்ணீரின் நன்மைகள்
பழைய சோறு மட்டுமல்ல, பழைய சோற்று தண்ணீரும் பல நன்மைகள் கொண்டது:
- நொதிக்க வைக்கப்பட்ட சோற்று நீரில், புற்று நோயை எதிர்க்கும் திறன் உள்ளதாக ஆய்வு ஒன்று அறிவித்துள்ளது.
- Antioxidant அதிகமுள்ள பழைய சோற்று தண்ணீர் சரும நலத்தைப் பாதுகாக்கிறது.
- நொதித்த தண்ணீர் தலைமுடி நலத்தைப் பாதுகாக்கிறது.
அடுத்த சில தினங்களில், பழைய சோற்று தண்ணீரின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை ஆகியவற்றைப் பற்றி ஒரு புதிய பதிவை வழங்குகிறோம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
புரதச் சத்தின் நன்மைகளும் புரதக் குறைபாட்டின் அறிகுறிகளும்
முந்தைய பதிவில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள் குறித்து பார்த்தோம். இன்று, புரதத்தின் நன்மைகள், புரதக் குறைபாடால் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர்
கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள்
சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றிய எங்களின் முந்தைய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சமச்சீர் உணவின் முக்கிய அங்கங்களில் ஒன்றான கரிநீரகியின் அவசியம், கரிநீரகி குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள்
சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு
சமச்சீர் உணவு என்கிற பதம் சமீப வருடங்களில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், காலம் காலமாக நம் முன்னோர்கள், சமச்சீரான உணவை இயல்பான உணவுப் பழக்கமாகவே வைத்து, சமச்சீரான உணவின் நன்மைகளைப் பெற்று நலமாக