82-வது நாள் ஆசனத்துக்கான பதிவு தயாராக இருந்தாலும், இன்று வானத்தில் கண்ட காட்சியைப் பகிரும் எண்ணம் ‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியை ஒரு நாள் ஒத்திப் போட வைத்திருக்கிறது.
இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெரும்பாலும் நம் கண் முன்னே இருக்கக்கூடிய அற்புதமான காட்சிகளைக் காணத் தவறிவிடுகிறோம். காலை நேரத்து பறவை ஒலியை இரசிப்பதை விட குக்கரின் விசில் சத்தத்தில் மனம் கவனம் செலுத்துகிறது. அவசரகதியில் இயங்கத் தேவையான வாழ்க்கை சூழலில் இது இயல்பானதுதான். ஆனாலும், சில நிமிடங்களை ஒதுக்கி இயற்கையை இரசித்தோமானால் மனம் புத்துணர்வு பெறுவதை உணர முடியும். சூரியன் வானத்தில் தோன்றும் போதும் மறையும் போதும் ஏற்படும் வர்ண ஜாலங்களைக் காண நாம் ஊட்டி மலைக்கு போகத் தேவையில்லை. நம் வீட்டு மொட்டை மாடியே போதும்.
நேற்று காலை நேர வானம் மேக மூட்டத்துடன் வரவேற்றது.
இன்றைய காட்சியே வேறு; இப்படித் தொடங்கி..
இப்படி மாறி
இவ்வாறு பிரமிக்க வைத்தது..
ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய துவக்கம்தான், புதிய நம்பிக்கைதான். உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். நாளை ‘இன்று ஒரு ஆசனத்தில் சந்திப்போம்’.
2 Responses
அற்புதம்
மிக்க நன்றி.