நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த திரிகோணாசனம். பக்கவாட்டில் வளையும் ஆசனங்களில் சுலபமானதான இந்த ஆசனம் அடுத்து வரவிருக்கும் திரிகோணாசனத்திற்கும் ஏனைய பக்கவாட்டில் வளையும் ஆசனங்களுக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் உதவும்.
அர்த்த திரிகோணாசனத்தின் பலன்கள்
- முதுகுத்தண்டு பக்கவாட்டில் வளைவதால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது
- முதுகு வலியைப் போக்க உதவுகிறது
- கைகளைப் பலப்படுத்துகிறது
- இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையும் கூடுகிறது
- கால்களை நீட்சியடைய வைக்கிறது
செய்முறை
- தாடாசனத்தில் நிற்கவும்.
- இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் ஒன்றரை முதல் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.
- வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும்.
- மூச்சை வெளியேற்றியவாறே மேல் உடலை வலது பக்கமாக சாய்க்கவும்.
- வலது கையை வலது காலின் முட்டி அல்லது முட்டிக்குச் சற்று கீழே வைக்கவும்.
- இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இடது கை இடது தோளுக்கு நேராக உயர்த்தவும்.
- தலையை இடது கை கட்டை விரலைப் பார்க்கும் வண்ணம் திருப்பவும்.
- 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து மாற்றுப் பக்கம் செய்யவும். தொடர் பயிற்சியில் நேரத்தை ஒரு நிமிடமாக அதிகரிக்கலாம்.
குறிப்பு
தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
கழுத்து வலி உள்ளவர்கள் நேராகப் பார்த்த வண்ணம் இந்த ஆசனத்தைப் பழகவும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கீழே பார்த்த வண்ணம் அர்த்த திரிகோணாசனத்தைப் பயிலவும்.
இன்று ஒரு ஆசனம் (54) – திரிகோணாசனம் (Triangle Pose)
நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது திரிகோணாசனம். வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். திரிகோணாசனத்தில் உடலில் மூன்று கோணங்கள் ஏற்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இது
இன்று ஒரு ஆசனம் (52) – அர்த்த கடி சக்ராசனம் (Half Waist Wheel Pose)
நாம் முன்னர் அர்த்த சக்ராசனம் என்ற நின்று பின்னால் வளையும் ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த கடி சக்ராசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘கடி’ என்றால் ‘இடுப்பு’. இந்த ஆசனத்தில்
இன்று ஒரு ஆசனம் (51) – அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம் (Half Prayer Twist Pose)
வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘நமஸ்கார்’ என்றால் ‘வணக்கம்’, ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’, ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது