பாரம்பரிய மருத்துவத்தில் இன்றியமையாத இடம் பெற்ற மூலிகைகளில் ஒன்று குப்பைமேனி. இது ஆங்கிலத்தில் Acalypha Indica, Indian Nettle மற்றும் Indian copperleaf என்று அழைக்கப்படுகிறது. சாலையோரங்களில் காணப்படும் இந்த குப்பைமேனியின் அற்புத பலன்கள் எண்ணற்றவை.
குப்பைமேனியின் தன்மைகள்
மருத்துவ குணங்கள் நிறைந்த குப்பைமேனியின் தன்மைகள் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. உடல் மற்றும் சரும நலம் காக்கும் குப்பைமேனியின் தன்மைகள் சில:
- Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
- Anti-bacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antioxidant (cells, protein மற்றும் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antiallergic (அலர்ஜி ஏற்படாமல் தடுத்தல்)
- Analgesic (வலியைப் போக்குதல்
- Antidiabetic (இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல்)
- Anti-ulcer (வயிற்றுப்புண்ணைத் தவிர்த்தல்)
- Anti-cancer (புற்று நோய் ஏற்படாமல் தவிர்த்தல்)
- Anti-obesity (அதிக சதையைக் கரைத்தல்)
- Anti-venom (விஷக்கடியை குணமாக்குதல்)
- Hepatoprotective (கல்லீரலைப் பாதுகாத்தல்)
- Anthelmintic (குடற்புழுவை அழித்தல்)
- Wound healing (காயத்தை ஆற்றுதல்)
குப்பைமேனியின் மருத்துவ குணங்கள்
சாலையோரங்களில் தாராளமாய் காணக் கிடைக்கும் குப்பைமேனி அபார மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நோய் தீர்க்கும் குப்பைமேனியின் அற்புத மருத்துவ பலன்களில் சில:
- காயங்களை ஆற்றுகிறது
- வீக்கத்தைப் போக்குகிறது
- சளியைக் கரைக்கிறது
- ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய குப்பைமேனி உதவுகிறது
- பரு, எக்சிமா உள்ளிட்ட சரும பிரச்சினைகளைப் போக்குகிறது. காலம் காலமாக சருமத் தொற்றுகளுக்கான இயற்கை நிவாரணியாக குப்பைமேனி விளங்குகிறது
- மேனியை மாசுமருவற்றதாய் ஆக்கும் தன்மை கொண்டது
- தலைவலியைப் போக்குகிறது
- மூட்டு வலியைக் குணப்படுத்துகிறது
- உடலின் நோய் எதிர்க்கும் திறனை அதிகரிக்கிறது
- சீரணக் கோளாறுகளை சரி செய்கிறது
- குடற்புழுக்களைப் போக்குகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவை இயற்கையான முறையில் சரி செய்ய குப்பைமேனி உதவுகிறது
- வயிற்றுப் புண்ணை ஆற்ற உதவுகிறது
- மூல நோயை குணப்படுத்த உதவுகிறது
- சிறுநீரக நலனைப் பாதுகாக்கிறது
- கல்லீரலின் நலனைப் பாதுகாக்கிறது
- பொடுகு, முடி உதிர்தல் போன்றவற்றை சரி செய்து தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
- நச்சுப் பாம்புகடியின் விஷத்தை முறிக்கிறது
- முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க உதவுகிறது
குப்பைமேனியை பயன்படுத்தும் முறைகள்
குப்பைமேனி இலைகளை நன்றாகக் கழுவிப் பயன்படுத்தவும்.
- கைப்பிடி அளவு குப்பைமேனி இலைகளை ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தீயைத் தணித்து மேலும் ஓரிரு நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். பின் வடிகட்டி பருகவும். இவ்வாறு குடித்தல் சளி, இருமல் ஆகியவற்றைப் போக்க உதவுவதோடு குடற்புழுக்களை வெளியேற்றவும் உதவும்.
- குப்பைமேனி இலைகளை அரைத்து காயம் உள்ள இடத்தில் பூசி வர காயம் ஆறும். குப்பைமேனி இலையோடு சிறிது கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து பூசி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
- குப்பைமேனி இலைகளை அரைத்து அதனுடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து முகத்தில் நன்றாகப் பூசவும். நன்றாக உலர்ந்ததும் விரல்களால் மென்மையாக சிறிது நேரம் தேய்த்துப் பின் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீங்கி விடும்.
- குப்பைமேனி இலையோடு சிறிது வேப்பிலையையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் பூசலாம். அரை மணி கழித்து தண்ணீரால் நன்றாக அலசவும். வாரம் இரு முறை செய்து வர தலைமுடி நலம் பெறும்.
குப்பைமேனியின் பக்க விளைவுகள்
பொதுவாக குப்பைமேனி இலைகள் பக்கவிளைவுகளை உருவாக்குவதில்லை. ஆயினும் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நேரிடலாம்.
G6PD (Glucose-6-phosphate dehydrogenase) குறைபாடு உள்ளவர்கள் குப்பைமேனியை பயன்படுத்தினால் சிவப்பணுச்சிதைவு (hemolysis) நேரிடலாம் என்று ஆய்வு கூறுகிறது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
அதிமதுரத்தின் அற்புத பலன்கள்
சிறு குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் தவறாது இடம் பெறும் முக்கிய மூலிகைகளில் ஒன்று அதிமதுரம். அதிஅற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த அதிமதுரம் பல்வேறு கலாச்சாரங்களால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நோய் பல தீர்க்கும்
மிளகின் அற்புத பலன்கள்
“பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்ற பழமொழி மூலம் நம் முன்னோர்கள் மிளகின் மகத்துவத்தை போகிற போக்கில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உணவிலும் உடலிலும் உள்ள நச்சுத்தன்மையைப்
வேப்ப மரத்தின் நன்மைகள்
21-ம் நூற்றாண்டின் மரமாக (Tree of the 21st century) ஐநா-வால் அறிவிக்கப்பட்ட வேப்ப மரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், மனித குலத்தின் மிகத் தொன்மையான மருத்துவங்களில் ஒன்றுமான சித்த மருத்துவத்தில் மருத்துவ